என் மலர்
கிருஷ்ணகிரி
- விவசாயிகள் முந்தைய விளைச்சலில் இருந்து கிடைக்கும் விதைகளையே அடுத்த சாகுபடிக்கு பயன்படுத்தி வருகிறார்கள்.
- முறையற்ற சேமிப்பு முறைகளினால் ஈரப்பதம், பூச்சி நோய் தாக்குதல் இவற்றின் பாதிப்பின் காரணமாக முளைப்புத்திறன் பாதிக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் லோகநாயகி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விதையின் கவனம் அறுவடையில் மகிழ்ச்சி என்பதற்கேற்ப விதைக்கும் முன் விதைத்தரம் அறிந்து விதைப்பு மேற்கொள்ள வேண்டும். நல்ல விதையில், அதிக முளைப்புத் திறன், அதிக புறத்தூய்மை, அளவான ஈரப்பதம், பிற ரக கலப்பு இல்லாமல் இருத்தல், பூச்சி நோய் தாக்குதல் இல்லாமல் இருத்தல் ஆகும். விதை பரிசோதனை செய்வதால், விதைப்பதற்கு தகுதியான விதைகளின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது.
விதைத்தரத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும், அதற்குண்டான காரணங்களையும் அறிய முடிகிறது. விதைகளை காய வைக்கவும், சுத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்தை அறிந்து கொள்ள உதவுகிறது.
விதைத்தரத்திற்கு உட்பட்டு, சான்றளிப்பிற்கு ஏற்றதா அல்லது உண்மை நிலை தரத்திற்கு ஏற்றதா என கண்டறிய உதவுகிறது. விதைப் பரிசோதனை செய்து விதைப்பது, நல்ல சாகுபடிக்கு அடிப்படையானதாகும்.
நல்ல தரமான விதையே நல்ல மகசூலைத் தரும். ஒரு விதை தரமானதா அல்லது தரமற்றதா என்பதனை அதன் முளைப்புத் திறன், அளவான ஈரப்பதம், சரியான புறத்தூய்மை, இனத்தூய்மை கொண்டுள்ளதும், பூச்சி, நோய் தாக்குதல் இல்லாமல் வீரிய நாற்றுக்களை கொடுக்கக்கூடிய திறன் இதனைக் கொண்டே அறிய வேண்டும்.
விவசாயிகள் முந்தைய விளைச்சலில் இருந்து கிடைக்கும் விதைகளையே அடுத்த சாகுபடிக்கு பயன்படுத்தி வருகிறார்கள். அத்தகைய விதைகளில் வீரியம் குறைவான, நோய் தாக்கியும், உடைந்த விதைகள் ஆகியவையும் இருக்கும். வீரியம் குறைவான விதைகளும் முளைக்கும். ஆனால் தரமான நாற்றுக்களை கொடுக்காது. நோய் தாக்கிய விதைகளும் முளைத்து மூன்று அல்லது நான்கு நாட்களில் கருகிவிடும்.
இதனை விதைப்பரிசோதனையில் கண்டுபிடித்து, முளைப்புத் திறனில், இயல்பானது, இயல்பற்றது, கடின விதைகள், பூச்சி நோய் தாக்குதல் சதவீதம் என கண்டறிந்து, வகைப்படுத்தி தர நிர்ணயம் செய்யப்படுகிறது. அவ்வாறான தரமான விதைகளைப் பயன்படுத்தினால் தான் நாம் எதிர்பார்க்கும் மகசூலைப் பெற முடியும்.
மேலும், வீரியமிக்க சான்று பெற்ற விதைகளையே விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். ஆனால், விவசாயிகள் தங்களின் சென்ற ஆண்டு, அதற்கு முந்தைய ஆண்டின் சாகுபடியில் இருந்து சேமித்து வைத்துள்ள, விதை இருப்பினை தொடர் சாகுபடிக்கு பயன்படுத்துவதால், அவ்விதையின் வீரியம் குறைந்து வீரியமற்ற நாற்றுகளையே கொடுக்கும். இதன் காரணமாக குறைவான மகசூலையே விவசாயிகள் பெறுகின்றனர்.
முறையற்ற சேமிப்பு முறைகளினால் ஈரப்பதம், பூச்சி நோய் தாக்குதல் இவற்றின் பாதிப்பின் காரணமாக முளைப்புத்திறன் பாதிக்கப்படுகிறது. எனவே, விதைப்புக்கு முன்பு தாங்களே முளைப்புப் பரிசோதனை செய்து, போதிய அளவு முளைப்புத் திறன் இருந்தால் மட்டுமே விவசாயிகள் விதைப்பு மேற்கொள்ள வேண்டும். அதிலும், மேற்குறிப்பிட்டவாறு முளைக்கும் அனைத்து விதைகளுமே வீரியமான நாற்றுக்களை தரக்கூடியவை அல்ல.
எனவே, குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களிடம் உள்ள விதைகளை மாற்றி, சான்று பெற்ற விதைகளை விதைப்பு செய்யவேண்டும். எனவே, ஒவ்வொரு வருடமும் சான்று பெற்ற விதைகளை வாங்கி விதைப்புக்கு பயன்படுத்திட வேண்டும். அல்லது சொந்த விதையினை விதைப்பதாக இருந்தால், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் இயங்கி வரும் விதைப் பரிசோதனை நிலையத்தில் தங்களின் விதை சேமிப்பிலிருந்து மாதிரி கொண்டு வந்து, பரிசோதித்து, தரமானதாக, வீரியமுள்ள நாற்றுக்கள் தரவல்லதா என சோதித்து, அதன் அடிப்படையில் விவசாயிகள் விதைப்பு மேற்கொண்டால் நல்ல மகசூல் பெறலாம். இப்பரிசோதனைக்கான கட்டணம் ஒரு விதை மாதிரி விதைப் பரிசோதனைக்கு ரூ.80 மட்டுமே ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வேலையை முடித்து விட்டு சேகரும், புருஷோத்தமனும் மதுகுடித்தனர்.
- புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிஓடிய புருஷோத்தனை தேடிவருகின்றனர்.
ஓசூர்:
வேலூர் மாவட்டம் ஓட்டோரி பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (வயது50). அதே பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன்.
நண்பர்களான இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேரண்டபள்ளி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமான லாரிக்கு பாடிகட்டும் பட்டறையில் வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று வேலையை முடித்து விட்டு சேகரும், புருஷோத்தமனும் மதுகுடித்தனர். அப்போது பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த புருஷோத்தன், சேகரை இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து முருகன் ஓசூர் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிஓடிய புருஷோத்தனை தேடிவருகின்றனர்.
- 3 ஆயிரத்து 730 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 50 லட்சத்து 22 ஆயிரத்து 273 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து துறை சார்பில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் கே.எம்.சரயு, எம்.எல்.ஏ.க்கள் ஓசூர் ஒய்.பிரகாஷ், பர்கூர் டி.மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தமிழக உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சரும், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சக்கரபாணி கலந்து கொண்டு, 3 ஆயிரத்து 730 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 50 லட்சத்து 22 ஆயிரத்து 273 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கல்வி உதவி தொகை, நிவாரண நிதி, சாதி சான்றிதழ்கள், இலவச வட்டு மனை பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள், பயிர் கடன், வங்கி கடன், புதிய குடும்ப அட்டைகள் என பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து ஓசூர் வன உயிரின கோட்டம் சார்பில் பழங்குடியின இருளர் இன மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள 29 சதவீத வனப்பரப்பில் 25 ஆயிரம் ஹெக்டேர் அளவில் உள்ள உண்ணிசெடிகளில் டேபிள், கட்டில் மற்றும் அலங்கார பொருட்கள் உள்ளிட்ட பயனுள்ள மதிப்புக்கூட்டு பொருளாக தயாரிக்கப்படுள்ளதை அமைச்சர் பார்வையிட்டார்.
தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து துறை சார்பில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் சக்கரபாணி, அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா , மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயணி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரஜினி செல்வம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- ஏரி, குளம், மற்றும் வாய்க்கால் கரை ஓரங்களில் மண் அரிப்பினை தடுக்கவும், நிலத்தடி நீரை அதிகரிக்கவும் பனை மரங்களை வளர்க்கலாம்.
- மண்ணிற்கு உகந்த மரமாகவும் விளங்குவதோடு, அடி முதல் நுனி வரை பயனளித்து மக்கள் பலரின் வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தோட்டக்கலைத் துறையின் மூலம் பனை மேம்பாட்டு இயக்க திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் பனை விதைகள் வழங்கப்பட உள்ளது.
ஏரி, குளம், மற்றும் வாய்க்கால் கரை ஓரங்களில் மண் அரிப்பினை தடுக்கவும், நிலத்தடி நீரை அதிகரிக்கவும் பனை மரங்களை வளர்க்கலாம். பனை மரம் மண்ணை உறுதிப்படுத்தி வளப்படுத்தியும் மண்ணிற்கு உகந்த மரமாகவும் விளங்குவதோடு, அடி முதல் நுனி வரை பயனளித்து மக்கள் பலரின் வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது.
எனவே, பனை சாகுபடியை ஊக்குவிப்பதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையின் மூலம் பனை மேம்பாட்டு இயக்க திட்டத்தின் கீழ், பனை விதைகள் 30 ஆயிரம் வினியோகம் செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு விவசாயிக்கும் அதிகபட்சமாக 50 விதைகள் மற்றும் பொது இடங்கள், தொண்டு நிறுவனங்கள், ஊராட்சி மன்றங்கள் மூலம் பனை மரம் நடுவதற்கு அதிகபட்சமாக 100 விதைகள் 100 சதவீத மானியத்தில் வினியோகிக்கப்படும்.
இந்த திட்டத்தில் பயன் பெற விவசாயிகள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மூலமாகவோ அல்லது இணையதளத்திலோ விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஊத்தங்கரை போலீசார் கல்லூர் நாராயண நகர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- மொத்தம் மதுவிற்றதாக 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை போலீசார் கல்லூர் நாராயண நகர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது உரிய அனுமதியில்லாமல் மதுவிற்பனை செய்த பிரவின் (வயது29), சொரணம் (51) ஆக இருவரையும் கைது செய்து இவர்களிடமிருந்து 8 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் கல்லாவி போலீசார் கல்லாவி பகுதியில் ரோந்து பணி மேற்கொள்ளும் போது மது விற்பனை செய்த கீதாவை கைது செய்து அவரிடம் இரண்டு பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது.
சிங்காரப்பேட்டை பகுதியில் வேலன் (21), விக்னேஷ் ஆகிய பேர் தடை செய்யப்பட்டு சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. சாமல்பட்டி போலீசார் ரோந்து பணி மேற்கொள்ளும் போது மதுவிற்றதாக லலிதா, சேட்டு, முனிராவு ஆகியோரை கைது செய்தனர். மொத்தம் மதுவிற்றதாக 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
- படிக்கும் சிறுவர், சிறுமியரை ஈடுபடுத்திய சம்பவம், பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
- இதுபோன்ற சம்பவங்களில் மாணவர்களை ஈடுபடுத்தும் பள்ளிகளின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன எலசகிரி பகுதியில் இயங்கி வரும் மாநகராட்சி ஆங்கில வழி தொடக்கப்பள்ளியில், குப்பைகளை அகற்றுவதற்கும் தூய்மைப்படுத்துவதற்கும் வகுப்பு நேரங்களில் அங்கு படிக்கும் சிறுவர், சிறுமியரை ஈடுபடுத்திய சம்பவம், பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் வகுப்பு நேரங்களில், எந்த காரணத்தைக் கொண்டும் பிற பணிகளுக்கு அவர்களை ஈடுபடுத்தக் கூடாது என்பது விதிமுறை.
அவற்றையும் மீறி சில பள்ளிகளில் இது போன்ற செயல்கள் நடைபெற்று வருகிறது. இதனை உடனே தடுக்க வேண்டும் என பொதுமக்களும், பெற்றோரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
எனவே இதுபோன்ற சம்பவங்களில் மாணவர்களை ஈடுபடுத்தும் பள்ளிகளின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.
- ஜூலை.13- தேங்காய் கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய்க்கும், கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு 140 ரூபாய்க்கும் தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.
- மாநில அரசு தென்னை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் தென்னை விவசாயிகள் சார்பில், தமிழக அரசு தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தேங்காயை உடைக்கும் போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட துணைத் தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான டில்லிபாபு சிறப்புரை ஆற்றினார்.
மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாவட்டத் தலைவர் முருகேசன், சிபிஎம் மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், தேங்காய் கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய்க்கும், கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு 140 ரூபாய்க்கும் தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும். மாநில அரசு தென்னை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
தென்னை விவசாயிகளுக்கான பயிர் இன்ஸ்சூரன்ஸ் அனைத்து மரங்களுக்கும் மற்றும் அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது வினியோகத்திட்டத்தின் கீழ் தேங்காய் எண்ணெய்யை அரசே கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 25-க்கும் மேற்பட்ட தேங்காயை சாலையில் உடைத்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
- இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
- போலீசார் பாரத், பிரவின்ராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள மலையாண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் பிரவின்ராஜ் (வயது34).
அதே பகுதியை சேர்ந்த பசுபதி. இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் நேற்று இருதரப்பினர்கள் மோதி கொண்டு தாக்கியுள்ளனர்.
இது குறித்து இருத்தரப்பினர்கள் கொடுத்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் பாரத், பிரவின்ராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
- இவர் உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.
- மனமுடைந்து காணப்பட்ட மகேஸ்வரி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்துள்ள அலகுபாவி பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் மகேஸ்வரி (வயது21). இவர் உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட மகேஸ்வரி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரூ.13.50 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க பூமிபூஜை நடைபெற்றது.
- தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி கலந்துக் கொண்டு பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம். வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கொப்பகரை ஊராட்சி ஆர்.குட்டூர் கிராமத்திற்க்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.13.50 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க பூமிபூஜை நடைபெற்றது.
இதில் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி கலந்துக் கொண்டு பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணகிரி அசோக்குமார், ஊத்தங்கரை தமிழ்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் குமரேசன், அ.தி.மு.க.ஒன்றிய செயலாளர் முருகன், முன்னால் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் விமலா சண்முகம், கூட்டுறவு சங்க தலைவர் சுப்பிரமணி, முன்னால் தலைவர் புருசப்பன், கூட்டுறவு சங்க இயக்குனர் சபரிசீனிவாசன், அவைத்தலைவர் மாரிமுத்து, ஒன்றிய பொருளாளர் மகேஷ்குமார், துணை செயலாளர் முனுசாமி, சாந்தகுமார், ராஜா உட்பட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.
- ஊர்வலம் சென்று கோவில் சாமியை தூக்கி செல்ல பெரியோர்கள், இளைஞர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்.
- இளைஞர்கள் சாமி சிலையை தூக்க கூடாது என்று சிலர் கூறியுள்ளனர்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், பண்ணப்பள்ளி ஊராட்சி சீகனப்பள்ளி கிராமத்தில் புதிதாக கங்கம்மா கோவிலை அனைத்து சமுதாய ஊர் மக்கள் சேர்ந்து கட்டி திறப்பு விழா நடத்தியுள்ளனர்.
நேற்று இரவு ஊர்வலம் சென்று கோவில் சாமியை தூக்கி செல்ல பெரியோர்கள், இளைஞர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர்.
அப்போது இளைஞர்கள் சாமி சிலையை தூக்க கூடாது என்று சிலர் கூறியுள்ளனர். அதன்பின்பு கீழ் சாதியினர் தூக்க மறுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு எற்பட்டது.
அப்போது அங்கு பாதுகாப்பில் இருந்த பேரிகை போலீசார்கள் சண்டை சச்சரவு செய்ய வேண்டாம் என்று சாமி சிலையை எடுத்து செல்ல தடை விதித்தது.
இதனால் இன்று அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- சேதமான சாலையில் செல்லும்போது கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுதாகி நடுக்காட்டில் நின்று விடும் நிலையால் வாகன ஓட்டிகள் பரிதவிக்கும் நிலையுள்ளது.
- வாகனங்களை வேகமாக ஓட்ட முடியாமல் உயிர் பயத்துடன் சாலை யைக் கடக்கும் நிலையுள்ளது.
தேன்கனிக்கோட்டை,
கர்நாடக மாநிலம் மற்றும் ஓசூர் பகுதி மக்கள் ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்துக்கு அஞ்செட்டி வழியாகச் சென்று வருகின்றனர்.
அதேபோல, பென்னாகரம், தருமபுரி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அஞ்செட்டி வழியாக பெங்களூரு, மைசூரு, ஓசூர் உள்ளிட்ட பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
கிராம மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் பயன்படுத்தும் அஞ்செட்டி சாலையில் நாட்றாம்பாளையத்தில் இருந்து - ஒகேனக்கல் வரையான சுமார் 20 கிமீ தூரம் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது.
இந்நிலையில், மழைக்கு இச்சாலையோரத்தில் இருபுறமும் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், குறுகிய ஒரு வழி சாலையாக உள்ள நிலையில், சாலை யோரத்தின் இருபுறமும் தார் சாலைக்கும், மண் சாலைக்கும் இடையில் மழைக்கு ஏற்பட்ட அரிப்பால் பெரிய பள்ளமாக மாறியுள்ளது.
இதனால், எதிரும், புதிருமாக வாகனங்கள் வரும்போது, இருசக்கர வாகன ஓட்டிகள் மண் சாலையில் இறங்கும்போது, வாகனங்கள் நிலை தடுமாறி கீழே விழும் நிலையுள்ளது.
மேலும், சாலையில் பல இடங்கள் குண்டும், குழியுமாக தேசமடைந்துள்ளது.
இதனால், அஞ்செட்டியிலிருந்து ஒகேனக்கல்லுக்கு 30 நிமிடத்தில் செல்லும் பயணநேரம் ஒரு மணி நேரமாகிறது.
சேதமான சாலையில் செல்லும்போது கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுதாகி நடுக்காட்டில் நின்று விடும் நிலையால் வாகன ஓட்டிகள் பரிதவிக்கும் நிலையுள்ளது.
குறிப்பாக இரவு நேரங்களில் பயணம் செல்வோர் மிகுந்த சிரமத்தைச் சந்திக்கின்றனர்.
சில நேரங்களில் வனத்திலிருந்து வெளியேறும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையில் சுற்றும்போது, வாகன ஓட்டிகள் சேதமான சாலையில் வாகனங்களை வேகமாக ஓட்ட முடியாமல் உயிர் பயத்துடன் சாலையைக் கடக்கும் நிலையுள்ளது.
எனவே, நாட்றாம்பாளையத்தில் இருந்து-ஒகேனக்கல் வரையான குறுகிய சாலையை அகலப்படுத்தி, சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக பொதுமக்கள் கூறுகையில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மலைக்கிராம மக்கள் அதிகம் பயன்படுத்தும் நாட்றாம் பாளையம் சாலை சேதமடைந்திருப்பதாலும், குறுகிய சாலை என்பதாலும், வாகன ஓட்டிகள் இச்சாலையைக் கடக்க மிகுந்த சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.
போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலை கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட எல்லைகளில் உள்ளதால், இரு மாவட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.






