என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது.
    • இதுதொடர்பாக மஞ்சுளா (வயது33) என்பவரை போலீசார் கைது செய்தனர். அந்த இளம்பெண்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய காலனி பேஸ் 16-ல், மாருதி நகர் பகுதியில் ஒரு வீட்டில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக அட்கோ போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது.

    இதையடுத்து, இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக மஞ்சுளா (வயது33) என்பவரை போலீசார் கைது செய்தனர். அந்த இளம்பெண்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

    • சாலையோரம் ஒருவரது நிலத்தில் 6 பனை மரங்கள் எவ்வித அனுமதியுமின்றி வெட்டப்பட்டுள்ளது.
    • அத்தியாவசிய தேவைகளுக்காக பனை மரங்களை வெட்ட நேர்ந்தால் கலெக்டரின் அனுமதி பெற்றே பனை மரத்தை வெட்ட வேண்டுமென பனை மரங்கள் பாதுகாப்பு அரசாணை விதி கூறுகிறது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த களர்பதி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை சாலையோரம் ஒருவரது நிலத்தில் 6 பனை மரங்கள் எவ்வித அனுமதியுமின்றி வெட்டப்பட்டுள்ளது.

    மீதமுள்ள 2 மரங்களை வெட்ட முற்படும்போது இது பற்றி தகவல் அறிந்து வந்த போச்சம்பள்ளி வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், அவற்றை தடுத்து அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து சென்றுள்ளார்.

    பின்னர் போச்சம்பள்ளி வட்டாட்சியரிடம் முறையிட்டுள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை சமர்ப்பித்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

    இயற்கை தந்த உன்னதமாகவும், மனித வாழ்க்கையில் அங்கமாகவும் விளங்கும் பனை மரங்களை அழிவின் விளிம்பில் இருந்து பாதுகாக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பனை மரங்களை வெட்ட தடை செய்ய கோரிக்கை வைத்திருந்த நிலையில் தமிழ்நாடு அரசு வேளாண்மை பட்ஜெட்டில் பனை மரங்கள் வெட்ட தடை விதித்தது.

    அத்தியாவசிய தேவைகளுக்காக பனை மரங்களை வெட்ட நேர்ந்தால் கலெக்டரின் அனுமதி பெற்றே பனை மரத்தை வெட்ட வேண்டுமென பனை மரங்கள் பாதுகாப்பு அரசாணை விதி கூறுகிறது.

    இந்நிலையில் போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விதிகளை பின்பற்றாமல் பனை மரங்கள் வெட்டப்படுவது சகஜமாக நிலவி வருகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து வெட்டப்படும் பனை மரங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தேங்காய்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்து விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
    • இந்த தேங்காய் அதிகபட்சம் 60 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  விவசாயிகள் அதிகளவில் தென்னை சாகுபடியில் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள், வியாபாரிகள், சிறுதொழில் முனைவோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் தென்னை விவசாய தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த சில ஆண்டுகளாக பெய்த மழையால், வழக்கத்தை விட மகசூல் அதிகரித்துள்ளது. இதனால் தேங்காய் விற்பனை சரிந்துள்ளது.

    மாவட்டத்தில் 17 ஆயிரம் ஹெக்டேரில் 35 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் 45 நாட்களுக்கு ஒரு முறை விவசாயிகள் தேங்காய்கள் அறுவடை செய்கின்றனர்.

    தற்போது தேங்காய் சராசரியாக டன் ரூ.20 ஆயிரம் என விற்பனையாகிறது. ஒரு தேங்காய் ரூ.8-க்கு விற்பனையாகிறது.

    இதில் தேங்காய் மரத்தில் இருந்து பறிப்பு, உரிப்பு கூலியாக ரூ.4 வரை செலவாகிறது. மீதமுள்ள ரூ.4 பராமரிப்பு பணிகளுக்கு செலவாகிறது.

    இந்தநிலையில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தேங்காய்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்து விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    இந்த தேங்காய் அதிகபட்சம் 60 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். அதன்பிறகு கொப்பரையாக மாறும். இல்லாவிட்டால் கெட்டுப்போகும்.

    அடுத்த 6 மாதங்களில் 5 கோடி தேங்காய் தேக்கமடைந்து, வீணாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு தேங்காய்களை கொள்முதல் செய்து, கொப்பரையாக்க முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    • மாணவ, மாணவிகள் இளைஞர்கள் புத்தக வாசிப்பவர்களாகவும், புத்தக வாசிப்பின் மூலம் தலை சிறந்தவர்களாக உருவாக்குவதே இந்த புத்தக கண்காட்சியின் முக்கிய நோக்கமாகும்.
    • 100 அரங்குகளில் அறிஞர்கள், விஞ்ஞானிகள், சிறந்த படைப்பாளர்களின் புத்தகம், நாவல்கள் உள்ளிட்ட ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 12-வது ஓசூர் புத்தக கண்காட்சி ஓசூர் ஹீல்ஸ் ஓட்டல் வளாகத்தில், வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது. மாணவ, மாணவிகள் இளைஞர்கள் புத்தக வாசிப்பவர்களாகவும், புத்தக வாசிப்பின் மூலம் தலை சிறந்தவர்களாக உருவாக்குவதே இந்த புத்தக கண்காட்சியின் முக்கிய நோக்கமாகும்.

    இதில் 100 அரங்குகளில் அறிஞர்கள், விஞ்ஞானிகள், சிறந்த படைப்பாளர்களின் புத்தகம், நாவல்கள் உள்ளிட்ட ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

    இந்த புத்தக கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் 10 சதவீதம் தள்ளுபடி விலையில் வாங்கி பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பயன் பெறும் வகையில் கிராமப்புற நூலகங்களுக்கு நன்கொடையாக வழங்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • மருத்துவ காப்பீடு திட்டத்தில் செலவு செய்து தொகை வழங்காமல் உள்ளவற்றை விரைவாக வழங்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரை நாள் தர்ணா போராட்டம் நடந்தது.

    மாவட்டத் தலைவர் துரை தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் சரவணபவன் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் பவுன், வெங்கடேசன், கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முருகன், மண்டலத் தலைவர் ஸ்ரீனிவாசலு, வருவாய்த்துறை சங்கம் ரவிச்சந்திரன், கிராம நிர்வாக ஓய்வூதியர் சங்கம் தில்லையப்பன், பி.எஸ்.என்.எல்., சங்கம் முனியன், பொது சுகாதாரத்துறை ராணிகலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட துணைத் தலைவர் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.

    தர்ணா போராட்டத்தில், தேர்தல் நேரத்தில் தமிழக முதல்-அமைச்சர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். 70 வயதைக் கடந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் குறைந்தபட்ச ஓய்வூதியம், 7,850 ரூபாயை சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஓய்வூதியர்கள் ஊராட்சி எழுத்தர்கள், வனத்துறை தொகுப்பூதிய ஓய்வூதியர்கள், பட்டு வளர்ச்சி தொழிலாளர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் செலவு செய்து தொகை வழங்காமல் உள்ளவற்றை விரைவாக வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதில், 150-க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.

    • 19 வயதுக்கு மேற்பட்ட இருளர் இன மக்கள் அதற்காக சாதிச் சான்றிதழுடன் ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
    • கிருஷ்ணகிரி யு.டி.ஐ. டிரஸ்ட் மூலம் 30 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது முதல் கட்டமாக 25 பேர் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்ட இயக்க மேலாண்மை அலகு 2019-2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளுக்கு, அழிவின் விழிம்பில் உள்ள பழங்குடியினர் மற்றும் இருளர் இன மக்களுக்கு இலவசமாக நான்கு சக்கர வாகனம் ஓட்ட பயிற்சி அளிக்கப்பட்டு, லைசென்சும் பெற்று தரப்படுகிறது.

    இதன் மூலம் இருளர் இன மக்கள் வேலை வாய்ப்பு பெற்று சமுதாயத்தில் முன்னேற இந்த திட்டம் வழிவகை செய்கிறது. இதில், 19 வயதுக்கு மேற்பட்ட இருளர் இன மக்கள் அதற்காக சாதிச் சான்றிதழுடன் ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

    இவர்களுக்கு கிருஷ்ணகிரி யு.டி.ஐ. டிரஸ்ட் மூலம் 30 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது முதல் கட்டமாக 25 பேர் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியை மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் ஜாகீர்உசேன் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்து, இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், உதவி திட்ட இயக்குனர் ராஜிவ்காந்தி, யு.டி.ஐ. டிரஸ்ட் நிறுவனர் கிருஷ்ணன், திவ்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆரோக்கிய குழந்தைகளுக்கான போட்டி நடைபெற உள்ளது.
    • இதில் பொதுமக்கள் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரியில் 29-வது மாங்கனி கண்காட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் சமூக நலத்துறைக்கு உட்பட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் சார்பில் வருகிற 22-ந் தேதி (சனிக்கிழமை) மதியம் 2 மணி முதல் 5 மணி வரையில் ஆரோக்கிய குழந்தைகளுக்கான போட்டி நடைபெற உள்ளது.

    இதில் பொதுமக்கள் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் போட்டியில் கலந்து கொள்ளும் பெற்றோர் குழந்தைகளின் எடை அட்டையை தவறாமல் எடுத்து வர வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இவ்விருதாளர் தமிழக முதல்வரால் தேர்வு செய்யப்படுவார்கள்.
    • 2023ம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டவர்கள், சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர் தமிழக முதல்வரால் தேர்வு செய்யப்படுவார்கள்.

    2023ம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.

    எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பதாரர்கள் தங்களின் பெயர், பிறந்த இடம் மற்றும் நாள், தாய், தந்தை மற்றும் குடும்ப விவரம், தற்போதைய முகவரி (தொலைபேசி எண்ணுடன்), கல்வி தகுதி, தொழில், சமூக நீதிக்காக பாடுபட்ட விவரம், பெரியார் கொள்கையில் உள்ள ஈடுபாடு, சமூக சீர்த்திருத்தக் கொள்கை குறித்து சிறு குறிப்பு, கலை, இலக்கியம், சமூக பணி ஆகியவற்றில் உள்ள ஈடுபாடு குறித்து சிறு குறிப்பு, பிற விவரங்கள் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

    2023ம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் வருகிற செப்டம்பர் 15ம் தேதி ஆகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆண்களுக்கு, 40 வயது வரை மட்டும் பயிற்சியில் சேரலாம்.
    • இதுவரை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்காதவர்களும் நேரில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து சேர்ந்து கொள்ளலாம்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சுப்பிரமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில், 2023-24-ம் ஆண்டு நிர்வாக இட ஒதுக்கீட்டில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில், ஒரு ஆண்டு கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பும், இரண்டு ஆண்டு மின்சார பணியாளர்களுக்கான பயிற்சியும் வழங்கப்படுகிறது.

    பயிற்சி முடித்தவுடன் அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில், அப்ரண்டீஸ் ஷிப் பயிற்சி சம்பளத்துடன் பெற்று தரப்படும். அரசுப் பள்ளியில் படித்த பெண் பயிற்சியாளருக்கு புதுமைப்பெண் திட்டத்தில் மாதம், 1000 ரூபாய்- பெற்றுத் தரப்படும்.

    பயிற்சியில் சேரும் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் சிறப்புக் கட்டணம் அரசு செலுத்தும். இதர கட்டணங்களாக, 1,275 ரூபாயை மட்டும் செலுத்தி சேர்க்கை செய்து கொள்ளலாம். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை.

    ஆண்களுக்கு, 40 வயது வரை மட்டும் பயிற்சியில் சேரலாம். சேர்க்கைக்கு, மாற்றுச் சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் அசல் மற்றும் நகல்கள்- 2 காப்பி, ஆதார் அட்டை நகல் (விண்ணப்பதாரர், தாய் மற்றும் தந்தை) -2 நகல்கள் ஆகியவற்றுடன் பயிற்சி நிலையத்திற்கு வந்து இதுவரை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்காதவர்களும் நேரில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து சேர்ந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04343-265652 என்ற எண்ணை தொடர்ப்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்பவர்களின், வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
    • பட்டப்படிப்பு படித்தவர்கள் மற்றும் கனரக ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்கள் தங்களுடைய சுயவிவரத்துடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் மாதத்தின் 3-வது வெள்ளிக்கிழமை, சிறிய அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அதன்படி வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை), காலை 10 மணியளவில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது ஒரு இலவச பணியே ஆகும். இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்பவர்களின், வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

    மேலும், இந்த முகாமில், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரைச் சேர்ந்த தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தகுதி உள்ள வேலைதேடுபவர்கள் தேர்வு செய்ய உள்ளனர். இதில், எஸ்.எஸ்.எல்.சி, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்தவர்கள் மற்றும் கனரக ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்கள் தங்களுடைய சுயவிவரத்துடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எதிரே வந்த பைக் எதிர்பாராதவிதமாக அண்ணாத்துரை மீது மோதியது.
    • இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள கெங்கபராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் அண்ணாத்துரை (வயது49). கூலி தொழிலாளியான இவர் நேற்று ஊத்தங்கரை-திருப்பத்தூர் சாலையில் ஒப்பாரப்பட்டி பள்ளி அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த பைக் எதிர்பாராதவிதமாக அண்ணாத்துரை மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

    இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று மது அருந்தி விட்டு அதே பகுதியில் உள்ள கிணற்றின் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • எதிர்பாராதவிதமாக கிணற்றின் அவர் தவறி விழுந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகேயுள்ள முஸ்லீம்பூர் பகுதியை சேர்ந்தவர் இர்பான் (வயது40). இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில் நேற்று மது அருந்தி விட்டு அதே பகுதியில் உள்ள கிணற்றின் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தவறி விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே இர்பான் உயிரிழந்தார்.

    இது குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள சரகப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ரவி (45). கட்டிட மேஸ்திரியான இவர் நேற்று முன்தினம் மது அருந்தி விட்டு வாடமங்கலம் ஏரிக்கரை பாலத்தில் அமர்ந்து இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தவறி விழுந்தார்.

    இதில் சம்பவ இடத்திலேயே ரவி உயிரிழந்தார். இது குறித்து தளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×