பைக் மோதி கூலி தொழிலாளி சாவு

எதிரே வந்த பைக் எதிர்பாராதவிதமாக அண்ணாத்துரை மீது மோதியது.இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
பைக் மோதி கூலி தொழிலாளி சாவு
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள கெங்கபராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் அண்ணாத்துரை (வயது49). கூலி தொழிலாளியான இவர் நேற்று ஊத்தங்கரை-திருப்பத்தூர் சாலையில் ஒப்பாரப்பட்டி பள்ளி அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த பைக் எதிர்பாராதவிதமாக அண்ணாத்துரை மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com