search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    70 வயதைக் கடந்தவர்களுக்கு  கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்
    X

    70 வயதைக் கடந்தவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்

    • புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • மருத்துவ காப்பீடு திட்டத்தில் செலவு செய்து தொகை வழங்காமல் உள்ளவற்றை விரைவாக வழங்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரை நாள் தர்ணா போராட்டம் நடந்தது.

    மாவட்டத் தலைவர் துரை தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் சரவணபவன் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் பவுன், வெங்கடேசன், கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முருகன், மண்டலத் தலைவர் ஸ்ரீனிவாசலு, வருவாய்த்துறை சங்கம் ரவிச்சந்திரன், கிராம நிர்வாக ஓய்வூதியர் சங்கம் தில்லையப்பன், பி.எஸ்.என்.எல்., சங்கம் முனியன், பொது சுகாதாரத்துறை ராணிகலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட துணைத் தலைவர் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.

    தர்ணா போராட்டத்தில், தேர்தல் நேரத்தில் தமிழக முதல்-அமைச்சர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். 70 வயதைக் கடந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் குறைந்தபட்ச ஓய்வூதியம், 7,850 ரூபாயை சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஓய்வூதியர்கள் ஊராட்சி எழுத்தர்கள், வனத்துறை தொகுப்பூதிய ஓய்வூதியர்கள், பட்டு வளர்ச்சி தொழிலாளர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் செலவு செய்து தொகை வழங்காமல் உள்ளவற்றை விரைவாக வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதில், 150-க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×