search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விலை வீழ்ச்சியால் தேங்காய் விவசாயிகள் கவலை
    X

    விலை வீழ்ச்சியால் தேங்காய் விவசாயிகள் கவலை

    • கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தேங்காய்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்து விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
    • இந்த தேங்காய் அதிகபட்சம் 60 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் அதிகளவில் தென்னை சாகுபடியில் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள், வியாபாரிகள், சிறுதொழில் முனைவோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் தென்னை விவசாய தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த சில ஆண்டுகளாக பெய்த மழையால், வழக்கத்தை விட மகசூல் அதிகரித்துள்ளது. இதனால் தேங்காய் விற்பனை சரிந்துள்ளது.

    மாவட்டத்தில் 17 ஆயிரம் ஹெக்டேரில் 35 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் 45 நாட்களுக்கு ஒரு முறை விவசாயிகள் தேங்காய்கள் அறுவடை செய்கின்றனர்.

    தற்போது தேங்காய் சராசரியாக டன் ரூ.20 ஆயிரம் என விற்பனையாகிறது. ஒரு தேங்காய் ரூ.8-க்கு விற்பனையாகிறது.

    இதில் தேங்காய் மரத்தில் இருந்து பறிப்பு, உரிப்பு கூலியாக ரூ.4 வரை செலவாகிறது. மீதமுள்ள ரூ.4 பராமரிப்பு பணிகளுக்கு செலவாகிறது.

    இந்தநிலையில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தேங்காய்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்து விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    இந்த தேங்காய் அதிகபட்சம் 60 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். அதன்பிறகு கொப்பரையாக மாறும். இல்லாவிட்டால் கெட்டுப்போகும்.

    அடுத்த 6 மாதங்களில் 5 கோடி தேங்காய் தேக்கமடைந்து, வீணாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு தேங்காய்களை கொள்முதல் செய்து, கொப்பரையாக்க முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×