search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை
    X

    பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை

    • ஆண்களுக்கு, 40 வயது வரை மட்டும் பயிற்சியில் சேரலாம்.
    • இதுவரை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்காதவர்களும் நேரில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து சேர்ந்து கொள்ளலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சுப்பிரமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில், 2023-24-ம் ஆண்டு நிர்வாக இட ஒதுக்கீட்டில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில், ஒரு ஆண்டு கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பும், இரண்டு ஆண்டு மின்சார பணியாளர்களுக்கான பயிற்சியும் வழங்கப்படுகிறது.

    பயிற்சி முடித்தவுடன் அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில், அப்ரண்டீஸ் ஷிப் பயிற்சி சம்பளத்துடன் பெற்று தரப்படும். அரசுப் பள்ளியில் படித்த பெண் பயிற்சியாளருக்கு புதுமைப்பெண் திட்டத்தில் மாதம், 1000 ரூபாய்- பெற்றுத் தரப்படும்.

    பயிற்சியில் சேரும் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் சிறப்புக் கட்டணம் அரசு செலுத்தும். இதர கட்டணங்களாக, 1,275 ரூபாயை மட்டும் செலுத்தி சேர்க்கை செய்து கொள்ளலாம். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை.

    ஆண்களுக்கு, 40 வயது வரை மட்டும் பயிற்சியில் சேரலாம். சேர்க்கைக்கு, மாற்றுச் சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் அசல் மற்றும் நகல்கள்- 2 காப்பி, ஆதார் அட்டை நகல் (விண்ணப்பதாரர், தாய் மற்றும் தந்தை) -2 நகல்கள் ஆகியவற்றுடன் பயிற்சி நிலையத்திற்கு வந்து இதுவரை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்காதவர்களும் நேரில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து சேர்ந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04343-265652 என்ற எண்ணை தொடர்ப்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×