என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • வாலிபரின் இடது கையில் கைக்கடிகாரம் ஒன்று கட்டப்பட்டுள்ளது
    • உடல் ஆற்றில் விழுந்து 2 நாட்கள் ஆன நிலையில் காணப்பட்டது.

    கன்னியாகுமரி :

    குலசேகரம் அருகே சுருளோடு வெட்டி திருத்தி கோணம் பகுதியில் பேச்சிப்பாறையில் இருந்து தோவாளை செல்லும் சானலில் நேற்று மதியம் சுமார் 40 வயது மதிக்கத் தக்க வாலிபரின் உடல் தண்ணீரில் மிதந்துவந்து கொண்டு இருந்தது. சானலில் குளித்து கொண்டிருந்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அந்த பகுதியில் உள்ளவர்கள் சுருளோடு ஊராட்சி மன்ற தலைவர் விமலா சுரேஷுக்கு தகவல் கொடுத்தனர். அவர் குலசேகரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரி வித்தார். அதன்பே ரில் குலசேகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பா லமுருகன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி ணனர்.

    வாலிபரின் இடது கையில் கைக்கடிகாரம் ஒன்று கட்டப்பட்டுள்ளது மேலும் பேண்ட் சட்டை அணிந்திருந்தார். அதிலிருந்து எந்த ஒரு அடையாளமும் கண்டு பிடிக்க முடிய வில்லை.

    வாலிபரின் முகம் சிதைந்த நிலையில் காணப்பட்டது. உடல் ஆற்றில் விழுந்து 2 நாட்கள் ஆன நிலையில் காணப்பட்டது. போலீசார் உடலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது போலீசார் பல்வேறு கோணங்களில் அந்த வாலிபரை பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் உள்ள காணாமல் போனவர்களின் விவரங்களை சேகரித்து விசாரணை செய்து வருகிறார்கள். பிரேத பரிசோதனையின் அறிக்கை வந்த பிறகுதான் இவர் எப்படி இறந்தார் என்று தெரியவரும். மேலும் இது கொலையா? அல்லது தற்கொலையா? என்று போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.

    • குமரி மாவட்ட அறங்காவலர் குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
    • சிறமடம் கோவிலில் ரூ.10 லட்சம் செலவில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்துவது

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்ட திருக்கோ வில்களின் அறங்காவலர் குழுவின் முதல் கூட்டம் சுசீந்திரத்தில் உள்ள குமரி மாவட்ட திருக்கோவில்க ளின் தலைமை அலுவல கத்தில் நடந்தது.

    அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ரத்தின வேல் பாண்டியன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சுந்தரி, ஜோதிஷ்கு மார், துளசிதரன்நாயர், குமரி மாவட்ட திருக்கோவில் களின் தலைமை அலுவலக மேலாளர் வெங்கடேஷ் தேவசம் மரமத்து பிரிவு பொறியாளர் அய்யப்பன் உள்பட பலர் கலந்துகொண்ட னர்.

    கூட்டத்தில் குமரி மாவட்ட அறங்காவலர் குழுவுக்கு புதிய உறுப்பி னர்களை தேர்வு செய்த தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் நீண்ட காலமாக கும்பாபிஷேக பணிகள் நடைபெறாமல் இருக்கும் சுசீந்திரம் தாணுமா லயன்சாமி கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி களை விரைவில் செய்வ தற்கான ஆயத்த பணிகளை நிறைவேற்ற தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு பரிந்துரை செய்வது.

    சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில், கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் உள்பட பல கோவில்களின் தேர்களுக்கு கொட்டகை அமைப்பது. வெள்ளிமலை பாலசுப்பிர மணியசுவாமி கோவிலில் கொடிமரம் நாட்டுவதற்கும் அதற்கான கொடிமர பிர திஷ்டை பூஜைகள் செய்வது குறித்தும் ஆணையரிடம் அனுமதி பெறுவது.

    பூதப்பாண்டி தேவசம் தொகுதிக்கு உட்பட்ட சிறமடம் எம்பெருமாள் கோவிலில் ரூ.10 லட்சம் செலவில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்துவது. அதைத் தொடர்ந்து கோவில்களில் உள்ள மராமத்து பணிகளை துரிதமாக செய்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் திருக்கோவில் நிர்வாகத்தின் வரவு-செலவு கணக்குகள் வாசித்து கூட்டத்தில் அங்கீகரிக்கப் பட்டது.

    • பயன்பாட்டிற்கு கொண்டு வர மக்கள் வேண்டுகோள்
    • கொல்லங்கோடு பேரூராட்சி படிப்பகம் என்ற வாசகத்துடனேயே திகழ்கிறது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியில் நகராட்சி சார்பில் படிப்ப கங்கள் உள்ளன. இந்த படிப்பகங்கள், தற்போது நீண்ட காலமாக பூட்டியே கிடக்கின்றன. இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் கூறுகையில், அனைவரும் கல்வி பெற்று வாழ்வில் முன்னேற படிப்பகங்கள் தொடங்கப் பட்டன. ஆனால் கொல்லங்கோடு பகுதியில் இந்த படிப்பகங்கள் பயனற்று கிடக்கின்றன. நீண்ட நாட்களாக பூட்டியே கிடக்கும் இந்த படிப்பகங்கள் தற்போது காட்சி பொருளாக தான் உள்ளது என வேதனை தெரிவித்தனர். கொல்லங்கோடு பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 2 வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் இன்றளவும் கண்ணனாகம் சந்திப்பில் உள்ள ஒரு படிப்பகம் கொல்லங்கோடு பேரூராட்சி படிப்பகம் என்ற வாசகத்துடனேயே திகழ்கிறது.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பெயர் மாற்றம் செய்வதோடு, கொல்லங் கோடு நகராட்சிக்கு சொந்த மான அனைத்து படிப்பகங்க ளையும் திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 2-வது நாளாக கடல் நீர்மட்டம் தாழ்வு
    • சுற்றுலா பயணிகள் பரிதவிப்பு

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி கடல் உள்வாங்குவது, கடல் நீர்மட்டம் தாழ்வது, உயர்வது, கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு, ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது, அலையே இல்லாமல் கடல் அமைதியாக குளம்போல் காட்சியளிப்பது, கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் அமாவாசையையொட்டி நேற்று காலையில் கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது.

    பின்னர் காலை 11 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து 3 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு பிறகு படகு போக்குவரத்து தொடங்கியது.

    இன்று 2-வது நாளாக அதிகாலையில் இருந்தே கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்படுகிறது. இன்னொரு புறம் கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது. கன்னியா குமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்க கடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது.

    அதேவேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும், சீற்றமாகமாகவும் காணப் பட்டது. இதனால் கன்னியா குமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்ப டவில்லை.

    இதனால் இன்று காலை விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதற்கிடை யில் காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது.

    இதைத்தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர்.

    மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது.

    இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின. இதனால் இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
    • கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    நாட்டின் 77வது சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி தோவாளை ஊராட்சி ஒன்றியம் சகாயநகர் ஊராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார்.

    அங்குள்ள பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்புரையாற்றினார். இதையடுத்து தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் தன்னார்வலர்கள், சமூக சேவகர்களுக்கும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

    வார்டு உறுப்பினர்களும், அரசு அதிகாரிகள், தோட்டக்கலைத்துறை இயக்குநர், வேளாண்மை துறை துணை இயக்குநர், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
    • இரட்டிப்பு சம்பளம் அல்லது ஊதியத்துடன் கூடிய மாற்று விடுப்பு வழங்கப்பட வேண்டும்.

    நாகர்கோவில் :

    ெதாழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவின்பேரில் மதுரை தொழிலாளர் ஆணையர் ஜெயபாலன் அறிவுரையின்படி நெல்லை தொழிலாளர் இணை ஆணையர் சுமதி வழிகாட்டுதலின்படி விடுமுறை தினமான ஆகஸ்டு 15-ந்தேதி அன்று அனைத்து நிறுவனங்களிலும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.

    அதன்படி நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மணிகண்டபிரபு தலைமையில் நாகர்கோவில் தொழிலாளர் துணை ஆய்வாளர் குமரேசன், உதவி ஆய்வாளர்கள் மன்னன்பெருமாள், ஸ்ரீதர், பாலசுப்பிரமணியன் ஆகியோர் நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி அங்குள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்க வேண்டும். அதற்கு மாறாக விருப்பத்தின் பேரில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது ஊதியத்துடன் கூடிய மாற்று விடுப்பு வழங்கப்பட வேண்டும்.

    இதற்கு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் வேலை அளிப்பவர் படிவம் வி.ஏ.விலும், உணவு நிறுவனங்களில் வேலை அளிப்பவர் படிவம் ஐ.பி.இ.இ.யிலும் பணிபுரிய விருப்பம் தெரிவிக்கும் தொழிலாளர்களிடம் கையொப்பம் பெற்று நகலை நிறுவனத்தின் அறிவப்பு பலகைகளிலும், மற்றொரு நகலை சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை அல்லது உதவி ஆய்வாளர்களுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பே அனுப்ப வேண்டும்.

    இந்த விதிமுறைகளை கடைபிடிக்க தவறிய 20 கடைகள், 12 உணவு நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த தகவலை நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெ.மணிகண்டபிரபு தெரிவித்துள்ளார்.

    • தினமும் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலியும், அருளுரையும் கலை நிகழ்சிகளும் நடைபெற்று வந்தது
    • இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீரூம், சிவகாசி வாண வேடிக்கையும் நடைபெற்றது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம், கருங்கல் அருகே உள்ள மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலயம் தென் தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்ற கத்தோலிக்க தேவால யங்களில் ஒன்று.

    இந்த தேவாலயத்தின் ஆண்டு பெருவிழா ஆண்டு தோறும் ஆகஸ்ட் 6 -ந்தேதி திருகொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 15 -ந்தேதி வரை மிகவும் சிறப்பாக நடை பெறும். 10 ம் நாள் நடைபெறும் அன்னை யின் தேர்பவனி யில் லட்சக்க ணக்கான மக்கள் கலந்து கொண்டு அன்னையின் ஆசிபெற்று செல்வது வழக்கம். இந்தா ண்டுக்கான பெருவிழா ஆகஸ்ட் 6-ந் தேதி பாண்டி ச்சேரி - கடலூர் உயர் மறைமாவட்ட மேதகு பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் திருகொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தினமும் காலை, மாலை ஜெபமாலை, புகழ்மாலை மற்றும் திருப்பலியும், அருளுரையும் மற்றும் கலை நிகழ்சிகளும் நடைபெற்று வந்தது.

    10-ம் திருவிழாவான நேற்று (15 ம் தேதி) காலை 5 மணி, 6 மணிகளில் தமிழில் திருப்பலியும், காலை 7 மணிக்கு மலையாள திருப்பலியும் நடைபெற்றது. தொடர்ந்து காலை 9 மணிக்கு நடைபெற்ற அன்னையின் விண்ணேற்பு பெருவிழா மற்றும் இந்திய சுதந்திர தினவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றி ஆடம்பர கூட்டுத் திருப்பலி நிறைவேற்றினார்.

    பின்னர் அன்னையின் தேர்பவனி நடைபெற்றது. அன்னையின் பெருவிழா திருப்பலி மற்றும் ஆரோபண அன்னையின் தேர்பவனி யில் குமரி மாவட்டம் மற்றும் தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னையின் ஆசி பெற்று சென்றனர். தேர்பவனியில் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், கப்பியறை பேரூராட்சி தலைவர் அனுஷா கிளாடிஸ், உட்பட பலர் கலந்து கொண்டனர். இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீரூம், சிவகாசி வாண வேடிக்கையும் நடைபெற்றது.

    திருவிழா ஏற்பாடுகளை பங்குதந்தை ஜெஸ்டின் பிரபு தலைமையில் இணை பங்கு தந்தை மகிமைநாதன் மற்றும் பங்கு மக்கள், பங்கு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், பங்கு பேரவை துணை தலைவர் பெர்னாண்டஸ், செயலாளர் மைக்கலோஸ் ஜோண் ஆர்க் ஜோஸ், பொருளாளர் செல்லம், துணை செயலாளர் கிறிஸ்துதாஸ் உறுப்பினர்கள் மற்றும் அருட்சகோதரிகள் செய்திருந்தனர்.

    • விஜய்வசந்த் எம்.பி. பங்கேற்பு
    • மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

    நாகர்கோவில் :

    சுதந்திர தின விழாவை முன்னிட்டு தோவளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சகாயநகர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விஜய் வசந்த் எம்.பி. கலந்துகொண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

    மேலும் தன்னார்வலர்கள், சமூக சேவகர்களுக்கும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. முருங்கை மற்றும் பப்பாளி மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. முன்னதாக ஊராட்சி மன்றம் சார்பில் சால்வை அணிவித்து மரக்கன்று கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள பெருந்தலைவர் காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    • விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு போக்குவரத்து 2 மணிநேரம் நிறுத்தம்
    • வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவ ள்ளுவர் சிலை அமைந் துள்ள வங்ககடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப் பட்டது. அதே வேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகமாகவும் காணப்பட்டது.

    இதனால் கன்னியாகுமரி கடல்நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்கு வரத்து தொடங்கப் பட வில்லை. இதனால் இன்று காலை விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில்சென்று பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.இதற்கிடையில் காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கி யது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகி ல்சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர். மேலும் கன்னியாகுமரி, சின்ன முட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப் பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின. இதனால் இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • ஆடி அமாவாசையை முன்னிட்டு நடந்தது
    • குழித்துறையில் மக்கள் கூட்டம் அலைமோதியது

    கன்னியாகுமரி, ஆக.16-

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள புண்ணிய தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.

    இந்த ஆண்டு ஆடி அமா வாசை இரண்டு நாட்கள் வந்தது. கடந்த மாதம் (ஜூலை)17-ந்தேதி மற்றும் இன்று(16-ந்தேதி) என 2 நாட்கள் ஆடி அமாவாசை கடைபிடிக்கப்பட்டது. இன்று ஆடி அமாவாசை என்பதால் கன்னியாகுமரி கடலில் புனித நீராடு வதற்காக இன்று அதிகாலை 2 மணியில்இருந்தே ஏராளமான பக்தர்கள் கன்னியாகுமரியில் குவியத் தொடங்கினார்கள்.

    அவர்கள் கன்னியா குமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் புனித நீராடினார்கள். அதன் பிறகு ஈரத்துணியுடன் கடற்கரையில் அமர்ந்து இருந்த புரோகிதர்கள் மற்றும் வேதமந்திரம் ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜை செய்தார்கள்.

    அவ்வாறு பூஜை செய்து பச்சரிசி, எள்ளு, பூக்கள் மற்றும் தர்ப்பை புல் போன்றவற்றை ஒரு வாழை இலையில் வைத்து தலையில் சுமந்துகொண்டு சென்று கடலில் போட்டுவிட்டு மீண்டும் நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தார்கள்.

    பின்பு கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவில், சன்னதி தெருவில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவில் மற்றும் விவேகானந்தபுரத்தில் உள்ள சர்க்கரதீர்த்த காசிவிசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் கோவில் ஆகியகோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.

    கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் கடற்கரை, கடைவீதிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டம் கட்டுக் கடங்காத வகையில் காணப்பட்டது. இதனால் அனைத்து இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. மகேஷ்குமார் மற்றும் கன்னியா குமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ஆடி அமாவாசையை யொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு கோவில் மூலஸ்தான நடை மட்டும் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், நிர்மால்ய பூஜையும் நடந்தது. அதன் பிறகு அம்மனுக்கு பல வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து தீபாராதனையும், உஷ பூஜை, ஸ்ரீபலி பூஜை, நிவேத்ய பூஜை, உச்சிகால பூஜை, உச்சிக்கால தீபாராதனை போன்ற அனைத்து பூஜைகளும் நடத்தி முடிக்கப்பட்டது.அதன்பிறகு 4.30 மணிக்கு வடக்கு பிரதான நுழை வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப் பட்டார்கள்.

    இரவு 8.30 மணிக்கு பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாக னத்தில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அம்மன்வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலாவரும் போது பக்தர்கள் வழி ெநடுகிலும் தேங்காய் பழம் படைத்து திருக்கணம்சாத்தி வழிபடுவார்கள்.

    அம்மன் வீதிஉலா முடிந்த பிறகு இரவு 10 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில்ஆராட்டுநிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவே சிக்கும் நிகழ்ச்சியும் நடக்கி றது.

    அதன்பிறகு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்த ருளச் செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி 3முறை மேளதாளம் முழங்க வலம் வரசெய்கிறார்கள்.பின்னர் அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும், அதன்பிறகு அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாரா தனையும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரிபகவதி அம்மன் கோவில் நிர்வா கத்தினர் செய்து வருகி றார்கள். ஆடி அமாவா சையையொட்டி இன்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் அரசு விடுமுறை விடப்பட்டுஇருந்தது.

    அரசுபோக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில், வள்ளியூர் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து கன்னியாகுமரிக்கு கூடுதல்அரசுசிறப்பு பஸ்கள்இயக்கப்பட்டன.கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில்சுகாதார வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.

    ஆடி அமாவாசை பலி தர்ப்பணத்தை முன்னிட்டு குழித்துறை மகாதேவர் கோவில் அருகே இன்று சிறப்பு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அங்கு பல்லாயிரக்கணக்கானோர் முன்னோர்களை நினைத்து பலி தர்ப்பணம் செய்தனர்.இந்த ஆண்டு பல ஆண்டுகளுக்கு பிறகு இரண்டு அமாவாசை வந்தது. கடந்த ஜூலை 17-ந்தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு கேரள பஞ்சாங் கத்தின் படி கேரள மக்கள் முதல் அமாவாசை அன்று பலி தர்ப்பணம் செய்தனர். இதனையொட்டி கேரளாவில் உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டது.

    இரண்டாவது ஆடி அமாவாசையான இன்றும் பெரும்பான்மையான கேரள மக்கள் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் பலி தர்ப்பணம் செய்வது வழக்கம். இன்று அதிகாலை 4.30 மணி முதல் பலி தர்ப்பணம் செய்தனர்.பொதுமக்கள் குளித்து விட்டு தும்பு இலையில் சோறு, பவித்திரம், துளசி, கட்ட பில் போன்றவை வைத்து தமது முன்னோர் களை நினைத்து பலித் தர்ப்பணம் செய்தனர்.

    பின்பு குழித்துறை மகாதேவர் கோவில், சாமுண்டீஸ்வரி தேவி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு, முன்னோர் கள் நினைவாக வாவுபலி திடலில் இருந்து மரக் கன்றுகளை வாங்கி சென்றனர்.

    • நேர மாற்றம் ரெயில் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
    • ‘வந்தே பாரத்’ ரெயில் இயக்கத்திற்காக பயண நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள்

    நாகர்கோவில் :

    சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் எண் 16127 நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நேர மாற்றம் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்துள்ளது.

    அந்த வகையில் சென்னை எழும்பூரில் இருந்து காலை 9 மணிக்கு பதிலாக 45 நிமிடங்கள் தாமதமாக 9.45 மணிக்கு ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் திருச்சிக்கு பிற்பகல் 2 மணிக்கு பதில் 3 மணிக்கு வந்து சேர்ந்ததுடன் மதுரை சந்திப்புக்கு மாலை 4.25-க்கு பதிலாக 5.40 மணிக்கு வந்து சேர்ந்தது.

    நாகர்கோவில் சந்திப்பு க்கு இரவு 9.20-க்கு பதிலாக 10.25 மணிக்கு வந்து சேர்ந்தது. பின்னர் 10.30 மணிக்கு புறப்பட்டது. இரணியலுக்கு 9.49-க்கு பதில் 10.50-க்கு வந்து 10.51-க்கும், குழித்துறையில் 10.05-க்கு பதில் 11.07-க்கு வந்து 11.09-க்கும், இரவு 11.15 மணிக்கு திருவனந்த புரம் செல்வதற்கு பதிலாக 12.20 மணிக்கு திருவனந்த புரம் செல்லும் வகையில் கால அட்டவணை யில் மாற்றம் செய்யப்பட்டி ருந்தது.

    மேலும் காலை 6.40-க்கு செல்வதற்கு பதிலாக 1 மணி நேரம் தாமதமாக காலை 7.40-க்கு குருவாயூர் சென்றடையும் வகையில் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நேர மாற்றம் ரெயில் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த ரெயில் பயணிக்கும் பாதை இரட்டை ரெயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. கேரளாவிலும் இரட்டை ரெயில் பாதை பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இருப்பினும் 45 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு 1 மணி நேரம் தாமதமாக ரெயில் குருவாயூர் சென்று சேரும் வகையில் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    குருவாயூர் செல்லும் பக்தர்களை வேதனை யடைய செய்துள்ளது. ரெயில்வே துறை நாளுக்கு நாள் ரெயில்களின் வேகத்தை அதிகரித்தும், பயண நேரத்தை குறைத்தும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அதற்கு நேர்மாறாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரத்தை அதிகரிக்க செய்திருப்பதற்கு பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

    நெல்லையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் 'வந்தே பாரத்' ரெயில் இயக்கத்திற்காக இவ்வாறு பயண நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    • ஆடி கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு நடந்தது
    • கோவில் சன்னதி, கடற்கரை, பொங்கலிடும் பகுதி ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இங்கு தினமும் பக்தர்களின் கூட்டம் நிறைந்து காணப்படும். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் பவுர்ணமி நாட்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் மண்டைக்காட்டிற்கு வந்து கடலில் தீர்த்தமாடி பொங்கலிட்டு அம்மனை வழிபடுவர்.

    இந்நிலையில் ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை முதல் தினமும் மண்டைக்காட்டில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. நேற்று ஆடி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை என்பதால் காலை முதலே மண்டைக்காட்டில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் தீர்த்தமாடி பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். இதனால் கோவில் சன்னதி, கடற்கரை, பொங்கலிடும் பகுதி ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    உச்சக்கால பூஜையின்போது பெண்கள் பல்லாயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர். தக்கலை, அழகியமண்டபம் மற்றும் திங்கள்நகருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டிருந்தது.

    ×