search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலய 10-ம் திருவிழா தேர்பவனி
    X

    மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலய 10-ம் திருவிழா தேர்பவனி

    • தினமும் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலியும், அருளுரையும் கலை நிகழ்சிகளும் நடைபெற்று வந்தது
    • இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீரூம், சிவகாசி வாண வேடிக்கையும் நடைபெற்றது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம், கருங்கல் அருகே உள்ள மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலயம் தென் தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்ற கத்தோலிக்க தேவால யங்களில் ஒன்று.

    இந்த தேவாலயத்தின் ஆண்டு பெருவிழா ஆண்டு தோறும் ஆகஸ்ட் 6 -ந்தேதி திருகொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 15 -ந்தேதி வரை மிகவும் சிறப்பாக நடை பெறும். 10 ம் நாள் நடைபெறும் அன்னை யின் தேர்பவனி யில் லட்சக்க ணக்கான மக்கள் கலந்து கொண்டு அன்னையின் ஆசிபெற்று செல்வது வழக்கம். இந்தா ண்டுக்கான பெருவிழா ஆகஸ்ட் 6-ந் தேதி பாண்டி ச்சேரி - கடலூர் உயர் மறைமாவட்ட மேதகு பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் திருகொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தினமும் காலை, மாலை ஜெபமாலை, புகழ்மாலை மற்றும் திருப்பலியும், அருளுரையும் மற்றும் கலை நிகழ்சிகளும் நடைபெற்று வந்தது.

    10-ம் திருவிழாவான நேற்று (15 ம் தேதி) காலை 5 மணி, 6 மணிகளில் தமிழில் திருப்பலியும், காலை 7 மணிக்கு மலையாள திருப்பலியும் நடைபெற்றது. தொடர்ந்து காலை 9 மணிக்கு நடைபெற்ற அன்னையின் விண்ணேற்பு பெருவிழா மற்றும் இந்திய சுதந்திர தினவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றி ஆடம்பர கூட்டுத் திருப்பலி நிறைவேற்றினார்.

    பின்னர் அன்னையின் தேர்பவனி நடைபெற்றது. அன்னையின் பெருவிழா திருப்பலி மற்றும் ஆரோபண அன்னையின் தேர்பவனி யில் குமரி மாவட்டம் மற்றும் தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னையின் ஆசி பெற்று சென்றனர். தேர்பவனியில் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், கப்பியறை பேரூராட்சி தலைவர் அனுஷா கிளாடிஸ், உட்பட பலர் கலந்து கொண்டனர். இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீரூம், சிவகாசி வாண வேடிக்கையும் நடைபெற்றது.

    திருவிழா ஏற்பாடுகளை பங்குதந்தை ஜெஸ்டின் பிரபு தலைமையில் இணை பங்கு தந்தை மகிமைநாதன் மற்றும் பங்கு மக்கள், பங்கு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், பங்கு பேரவை துணை தலைவர் பெர்னாண்டஸ், செயலாளர் மைக்கலோஸ் ஜோண் ஆர்க் ஜோஸ், பொருளாளர் செல்லம், துணை செயலாளர் கிறிஸ்துதாஸ் உறுப்பினர்கள் மற்றும் அருட்சகோதரிகள் செய்திருந்தனர்.

    Next Story
    ×