என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை
    • குமரி மாவட்டத்தில் இன்று நடைபெறுகிறது

    நாகர்கோவில் : 

    2023-ம் ஆண்டுக்கான தாலுகா ஆயுதப்படை தமிழ்நாடு சிறப்பு பட்டாலி யன் ஆகியவற்றில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் ஆண், பெண் பதவிகளுக்கான முதன்மை தேர்வு இன்று நடந்தது.

    குமரி மாவட்டத்தில் 4 மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வு எழுதுவதற்கு 3,884 பேர் விண்ணப் பித்திருந்தனர். நாகர் கோவில் பொன் ஜெஸ்லி என்ஜினீ யரிங் கல்லூரியில் உள்ள தேர்வு மையம் பெண்களுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆனால் காலை 7 மணிக்கு தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையத்திற்கு வந்திருந்தனர்.

    தேர்வு எழுத வந்த பெண்களை 8.30 மணிக்கு பிறகு போலீசார் தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதித்தனர். பலத்த பரிசோதனைக்கு பிறகு தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப் பட்டதையடுத்து தேர்வு எழுத வந்த பெண்கள் தங்களது உறவினர்களிடம் செல்போனை ஒப்படைத்து விட்டு சென்றனர். சிலர் அதற்கான ஒதுக்கப்பட்ட அறையில் செல்போனை வழங்கிவிட்டு தேர்வு மையத்திற்குள் சென்றனர். வாட்ச் அணிந்து செல்வ தற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

    வாட்டர் பாட்டில் கொண்டு செல்வதற்கும் போலீசார் அனுமதிக்க வில்லை. ஹால் டிக்கெட்டை கொண்டு செல்வதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப் பட்டது. தேர்வு எழுத வந்த பெண்கள் அணிந்திருந்த காலணிகளை கழற்றியும் போலீசார் பரிசோதனை செய்தனர். பலத்த பரி சோதனைக்கு பிறகு உள்ளே சென்ற பெண்கள் தங்களுக்கு எந்த அறை ஒதுக்கப்பட்டி ருந்தது என்பது குறித்த விவரம் அறிவிப்பு பல கைகள் வைக்கப்பட்டு இருந்தது.

    அதை பார்த்து பெண்கள் தேர்வு மையத்திற்குள் சென்றனர். தேர்வு மையத்திற்குள் மற்றவர்கள் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. தேர்வு மையத்திற்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இறச்சகுளம் அமிர்தா என்ஜினீயரிங் கல்லூரி, சுங்கான் கடை புனித சேவியர் என்ஜினீயரிங் கல்லூரி, தோவாளை சி.எஸ்.ஐ. என்ஜினீயரிங் கல்லூரி ஆகியவற்றில் தேர்வு நடந்தது. தேர்வு எழுதுவதற்கு இங்கு ஏராளமான வாலிபர்கள், பட்டதாரிகள் வந்திருந்தனர். இவர்களும் பலத்த பரிசோதனைக்கு பிறகு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    தேர்வு மையங்களில் குமரி மாவட்ட சீருடை பணியாளர் தேர்வு கண்காணிப்பு அதிகாரியும், ஆயுதப்படை டி.ஐ.ஜி.யுமான விஜயலட்சுமி மாவட்ட போலீஸ் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் ஆய்வு செய்தனர். காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 12.30 மணிக்கு முடிவடைந்தது. தேர்வு முடிந்த பிறகு பெரும்பாலான பெண்கள் தேர்வு மையத்திற்கு வெளியே மதியம் நடை பெறும் தேர்வை எழுது வதற்கு காத்திருந்தனர்.

    அவர்களுக்கு தேவை யான உணவை அவரது பெற்றோர் வாங்கி வைத்து விட்டு வெளியே காத்தி ருந்தனர். மொழி தகுதி தேர்வு மாலை 3.30 மணி முதல் 5.10 மணி வரை நடக்கிறது. போலீஸ் துறையில் பணிபுரிந்து தேர்வு எழுதுபவர்கள் மற்றும் பணியின்போது இறந்த அவரது வாரிசுகள் தேர்வுகளில் எழுதினால் அவர்களுக்கு அதே மாவட்டத்தில் தேர்வு எழுதுவதற்கு அனுமதி வழங்கவில்லை.

    வேறு மாவட்டத்தில் தேர்வு எழுத ஒதுக்கீடு செய்யப்பட்டி ருந்தது. அதன் அடிப்படை யில் வேறு மாவட்டத்தில் இருந்து ஒரு சிலர் குமரி மாவட்டத்திற்கு தேர்வு எழுத வந்திருந்தனர். குமரி மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்திற்கு தேர்வு எழுத பலர் சென்றிருந்தனர்.

    • நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது.
    • இரட்டை மடியை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடித்து வருவதால் மீன்வளம் பாதிக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    நாகர்கோவில் : நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது. மீனவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஸ்ரீதர் பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன், மீன்வளத்துறை துணை இயக்குனர் காசிநாத பாண்டியன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் மீனவர்கள் கூறியதாவது:- குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகளில் இரட்டை மடியை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடித்து வருவதால் மீன்வளம் பாதிக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இரட்டை மடி வலையை பயன்படுத்தக்கூடாது என்று அரசு சட்டம் வைத்துள்ளது. ஆனால் அதையும் மீறி மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள்.

    இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இரட்டை மடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்காய் பட்டணம் துறைமுகத்தில் தடை செய்யப்பட்ட குஞ்சு மீன்களை பிடித்து வருகிறார்கள். இது தொடர்பாக நேற்று அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதுவரை அந்த படகு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசு மீனவர்களுக்கு மானிய விலை மண்எண்ணை வழங்கி வருகிறது. தற்பொழுது புதிதாக விண்ணப்பித்தவர் பலருக்கும் மண்எண்ணை வழங்காமல் உள்ளனர். முறையான ஆவணங்கள் சமர்ப்பித்த பிறகும் மண்எண்ணை வழங்கப்படவில்லை. உடனடியாக மண்எண்ணை வழங்காவிட்டால் மீனவர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும். மேல்மிடாலம் பகுதியில் மீன் பிடி இறங்குதளம் அமைக்க வேண்டும். கேசவன் புத்தன் துறை பகுதியில் சேதமடைந்த தூண்டில் வளைவை சீரமைக்க வேண்டும். ஏ.வி.எம். கால்வாயை தூர்வார வேண்டும். கடற்கரை கிராமங்களில் பழுதான சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதற்கு பதில் அளித்து அதிகாரி கூறுகையில், குமரி மாவட்டத்தில் இரட்டை மடி மீன் வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். 14 நாட்டிங்கல் வரை மீன்துறை அதிகாரிகள் சென்று கண்காணித்து வருகிறார்கள். கடலோர பாதுகாப்பு படையினரும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். தேங்காய்பட்டினத்தில் குஞ்சு மீன்களை பிடித்து வரும் படகுகளை பறிமுதல் செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    மீனவர்களுக்கு மானிய விலையில் மண்எண்ணை வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேல்மிடாலத்தில் ரூ.35 கோடி செலவில் மீன்பிடி இறங்குதளம் அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். கேசவன் புத்தன் துறையில் தூண்டில் வளைவு சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை
    • நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது

    நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து போக்குவரத்து போலீசார் மற்றும் போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஹெல்ெமட் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது வாலிபர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் வந்தார். அவரை போலீசார் பிடித்தனர். அவரிடம் சோதனை செய்தபோது அவர் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது தெரியவந்தது.

    போலீசார் அவரது செல்போனை சோதனை செய்தபோது பிடிபட்ட நபர் தனது செல்போனில் அதிவேகமாக பைக் ரேசிங் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இருந்தது. மேலும் இதை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போக்குவரத்து விதிமுறையை மீறிய அந்த வாலிபருக்கு ரூ.12,000 அபராதம் விதித்தனர். இதேபோல் குளச்சல் பகுதியிலும் வாலிபர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் வந்து சிக்கினார்.

    அவரது செல்போனை சோதனை செய்த போதும் அதிவேகமாக ஓட்டி சென்று இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவேற்றம் செய்து இருப்பது தெரியவந்தது. அந்த வாலிபருக்கும் ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பிடிபட்ட நபருக்கு 17 வயதே ஆனதையடுத்து அந்த நபரின் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 2 வாலிபரின் பெற்றோருக்கும் ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், போக்குவரத்து விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு பாரபட்சமின்றி அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு குறைவான நபர்கள் வாகனம் ஓட்டக்கூடாது. இதை பெற்றோர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிவேகமாக வாகனம் ஓட்டினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். மேலும் ஹெல்மெட் அணிவது நமது உயிர் கவசம் போன்றதாகும். எனவே அனைவரும் இரு சக்கர வாகன ஓட்டும் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்றார்.

    • கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடிதுறைமுகம் அருகே பெட்ரோல் பங்க் ஒன்று அமைக்கப்பட்டு வந்தது.
    • கடந்த 9-ந்தேதி முதல் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வந்தனர்.

    நாகர்கோவில்: கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடிதுறைமுகம் அருகே பெட்ரோல் பங்க் ஒன்று அமைக்கப்பட்டு வந்தது. இந்த பெட்ரோல் பங்க் அமைக்கும்பணியை தடுத்து நிறுத்த கோரி சின்னமுட்டம் பகுதி மீனவர்கள் கடந்த 9-ந்தேதி முதல் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வந்தனர்.

    இருப்பினும் மீன வர்களின் இந்த தொடர் போராட்டத்துக்கு இடையே பெட்ரோல்பங்கு நேற்று திறக்கப்பட்டு உள்ளது. இதற்கு சின்ன முட்டம் பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதைத்தொடர்ந்து சின்ன முட்டத்தில் திறக்கப்பட்டு உள்ள பெட்ரோல்பங்கை மூடக்கோரி சின்ன முட்டத்தில் மீனவர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று 2-வது நாளாக இந்த வேலை நிறுத்த போராட்டம் நீடிக்கிறது. இதனால் சின்னமுட்டம் பகுதியை சேர்ந்த 100-க்கும்மேற்பட்ட விசைப்படகுகளும் 100-க்கு கட் ம் மேற்பட்டநாட்டுபடகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.இதனால் இந்த விசைப்படகுகளும் நாட்டுப்படகுகளும் கடற்கரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் சின்னமுட்டம் புனிததோமையார்ஆலயம் முன்புமீனவர்கள் இன்று 2-வதுநாளாக உண்ணாவிரத போராட்ட மும்நடத்திவந்தனர். இதைத் தொடர்ந்து சின்னமுட்டத்தில் பரபரப்பும் பதட்டமும் நிலவுகிறது. இதனால் அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் நடத்திய சமரச பேச்சு வார்த்தையில் இதுவரை எந்தவித சமரச தீர்வும் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து இன்று17- வது நாளாக சின்னமுட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்குக்கு எதிராக மீனவர்களின் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென வெள்ளியல்பாறை பகுதியில் கையில் கருப்பு கொடியை ஏந்தி கடலில் இறங்கி முட்டளவு தண்ணீரில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்கள், மீனவ பெண்கள் என 50-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  

    • தொடக்க பள்ளியில் மாணவர்களுக்கு உணவு வழங்கி விஜய் வசந்த் தொடங்கி வைத்தார்.
    • காலை உணவு திட்ட நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிகள் மற்றும் கல்வி துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    கன்னியாக்குமரி:

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட விரிவாக்கத்தை இன்று திருக்குவளையில் உள்ள பள்ளியில் மாணவர்களுக்கு உணவு வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    அதனை முன்னிட்டு முதலமைச்சரின் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு விரிவாக்க திட்டத்தை மார்த்தாண்டம் அரசு தொடக்கப் பள்ளி மற்றும் களியக்காவிளை தொடக்க பள்ளியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தொடங்கி வைத்தார்.

    முதலமைச்சரின் காலை உணவு திட்ட நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிகள் மற்றும் கல்வி துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • இன்று காலை நாகர்கோவில் நாகராஜா கோவிலில் சிறப்பு வழிபாடு
    • பொன்.செல்வராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நாகர்கோவில்: தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு நாகர்கோவில் மாநகர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் இன்று காலை நாகர்கோவில் நாகராஜா கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மாவட்ட செயலாளர் இந்தியன் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் ராஜன், மாவட்ட பொருளாளர் பொன்.செல்வராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாவட்ட துணை செயலாளர்கள் ராஜேஷ், கேப்டன் எஸ். ஜெகன், ராஜமோகன், ஆனிஸ் அலெக்ஸ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அசோக், மணிகண்டன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கயிலை டி. மதிமுருகன், பொன்னுசுவாமி, மனோகரன், மணிகண்டன், ராஜேஷ், மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் பத்மநாபன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வைகுண்டராஜா, ஒன்றிய செயலாளர் சிவானந்த், கிழக்கு பகுதி செயலாளர் நாஞ்சில் வெங்கட், மேற்கு பகுதி செயலாளர் ராஜன், வடக்கு பகுதி செயலாளர் ராஜாமணி, தெற்கு பகுதி செயலாளர் மறவை எஸ்.நாராயணன். கணபதிபுரம் பேரூர் செயலாளர் ரவீந்திரன், புத்தேரி ஊராட்சி அய்யப்பன், கனியாகுளம் ஊராட்சி விஜி, மேலசங்கரன்குழி ஊராட்சி செந்தில்குமார், எள்ளு விளை ஊராட்சி விக்னேஷ், ராஜாக்கமங்கலம் ஊராட்சி தயானந்தன், மகளிர் அணி ஜெயா,அபூர்வகனி, தீபா, சாந்தி, லெட்சுமி மற்றும் மாவட்ட ஒன்றிய, பகுதி, பேரூர், ஊராட்சி கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்ட னர்.

    • விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி மும்மத கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு
    • விஜயகாந்த் பெயரில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது

    நாகர்கோவில் : தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி மும்மத கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடந்தது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாவட்ட செயலாளர் அமுதன் தலைமையில் விஜயகாந்த் பெயரில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பின்னர் குளச்சல் காணிக்கை மாதா ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. குளச்சல் அக்கறை பள்ளிவாசலில் தொழுகையும் நடந்தது. நிகழ்ச்சியில் அவை தலைவர் அய்யாதுரை, பொருளாளர் முத்துக்குமார், துணை செயலாளர்கள் செல்வகுமார், சுடலையாண்டி பிள்ளை, வளர்மதி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் மாரியப்பன், ஒன்றிய செயலாளர்கள் புகாரி, டெல்வின், நாகராஜன், தங்ககிருஷ்ணன், பரமராஜா, மைக்கேல் ரத்தினம், மாவட்ட அணி நிர்வாகிகள் துரை, பாபு, மகளிர் அணி நிர்வாகிகள் பாக்கியவதி, பாப்பா, கலாவதி, நீலாவதி, விஜயா, பேரூர் செயலாளர்கள் பரமாத்மா, நவாஸ்கான், கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • குழித்துறையில் வக்கீலாக உள்ளார்.
    • சொத்து சம்மந்தமாக ஏற்கனவே முன்விரோதம் உள்ளது

    நாகர்கோவில் : புதுக்கடை அருகே கழுநெட்டான் விளை பகுதியை சேர்ந்தவர் பாக்ய டென்னிஸ். இவரது மகன் பக்தசிங் (வயது 34). இவர் குழித்துறையில் வக்கீலாக உள்ளார். இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்த குபிபாலன் (47). இவர்களுக்குள் சொத்து சம்மந்தமாக ஏற்கனவே முன்விரோதம் உள்ளது. இதனால் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் மீதும் புதுக்கடை போலீஸ் நிலையத்தில் வழக்குகள் பதிவாகியுள்ளன.

    இந்த நிலையில் சம்பவத்தன்று பக்தசிங் தனது வீட்டருகில் நிற்கும் போது குபிபாலன் மற்றும் அவரது மனைவி சந்திரிகா ஆகியோர் சேர்ந்து ஆயுதங்களால் பக்த சிங்கை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பக்தசிங் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குமரி மாவட்டம் சித்திரங்கோட்டில் சுமார் 10-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது.
    • கல், எம்.சான்ட், என்.சான்ட், ஜல்லி ஆகியவை ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு செல்கிறது

    நாகர்கோவில்: குமரி மாவட்டம் சித்திரங்கோட்டில் சுமார் 10-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து தினமும் பகல், இரவு நேரங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் கல், எம்.சான்ட், என்.சான்ட், ஜல்லி ஆகியவை ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு செல்கிறது. கனிம வளங்களை பெரிய எந்திரம் மூலம் உடைத்து பெரிய டாரஸ் லாரிகளில் ஏற்றி செல்கிறார்கள். இந்த வாகனங்கள் அனைத்தும் பாதுகாப்பற்ற முறையில் அதிவேகமாக செல்கிறது. இதனால் ரோடுகள் வெகு விரைவில் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மேலும் அதிக விபத்துக்களும் நடைபெறுகிறது. சித்திரங்கோட்டில் இருந்து செல்லும் டாரஸ் லாரிகள் அண்டூர், வெண்டலிகோடு, மாமூடு, காவஸ்தலம் வழியாக சென்று வருகிறது. மாலை வேளைகளில் அதிவேகமாக செல்வதால் அதிக அளவில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இந்த வாகனங்களில் ஜல்லி கொண்டு செல்லும்போது மேல் பகுதி முழுவதும் தார்ப்பாய் போட்டு மூடி தான் செல்ல வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால் எந்த வாகனமும் இதை பின்பற்றுவது இல்லை.

    நேற்று இரவு 8 மணி அளவில் சித்திரங்கோட்டில் இருந்து டாரஸ் லாரியில் ஜல்லி ஏற்றி சென்று கொண்டு இருந்தது. அதன் மேற்பகுதி தார்ப்பாய் வைத்து மூடவில்லை. லாரியின் பின் பக்கம் போரில் சிறிய அளவு ஓட்டை இருந்து இருக்கிறது. லாரி வெண்டலிகோடு தாண்டி செல்லும்போது வண்டியில் இருந்து ஜல்லி ஓட்டை வழியாக ரோட்டில் கொட்டியது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு லாரியில் இருந்து ஜல்லி கற்கள் ரோட்டில் சிதறி விழுந்தது. லாரியின் பின்னால் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தனர். இதனை அறிந்த மாமூடு பகுதியில் லாரி வரும்போது அந்த பகுதி பொதுமக்கள் லாரியை மடக்கி பிடித்தார்கள். பின்னால் வந்த கனரக வாகனங்களையும் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி னார்கள். இதனால் பொது மக்களுக்கும், லாரி டிரை வருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே தகவல் அறிந்து குலசேகரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்து டாரஸ் லாரியை அனுப்பி வைத்தனர். இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ரோட்டில் சிதறி கிடைக்கும் ஜல்லியை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். லாரியை போலீசார் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • வாலிபர் ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக காதல் ஏற்பட்டது
    • மாணவி காதலனை தொடர்ந்து சந்தித்து வந்தார்.

    நாகர்கோவில் : குளச்சல் பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் மார்த்தாண்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் ஏரோநாட்டிங்கல் என்ஜினீ யரிங் படித்து வந்தார். இவருக்கும், செட்டியார் மடம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக காதல் ஏற்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து மாணவியை அவர்கள் கண்டித்தனர். ஆனால் மாணவி காதலனை தொடர்ந்து சந்தித்து வந்தார். இதை அறிந்த பெற்றோர் மாணவிக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்தனர். இந்த நிலையில் மாணவி வீட்டை விட்டு மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் குளச்சல் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று மாணவி தனது காதலனுடன் போலீசில் தஞ்சம் அடைந்தார்.

    தாங்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் எங்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து தங்களை பிரிக்க நினைப்பதாகவும் இதற்கு பாதுகாப்பு வேண்டும் என்று மாணவி போலீசாரிடம் கூறினார். போலீசார் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் போலீஸ் நிலை யத்திற்கு வந்தனர். மாண விக்கு 18 வயது பூர்த்தியாகி விட்டதால் அவர் விருப்பப்படி தான் நடந்து கொள்ள முடியும் என்று போலீசார் கூறினார் கள். இதையடுத்து மாணவி காதலனோடு செல்ல தயாரானார்.

    அப்போது போலீசார் அவரது காதல னின் ஆதார் கார்டை சரி பார்த்தபோது அவருக்கு 20 வயதானது தெரியவந்தது. காதலனுக்கு திருமண வயது எட்டவில்லை என்பதால் மாணவி அவருடன் அனுப்ப போலீசார் மறுப்பு தெரி வித்தனர். மாணவிக்கு அறி வுரைகளை கூறி அவர்களது பெற்றோருடன் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர். பின்னர் மாணவி போலீஸ் நிலையத்தில் இருந்து அவரது பெற்றோருடன் வெளியே புறப்பட்டு சென்றார். போலீஸ் நிலையத்திற்கு வெளியே பெற்றோர் அவரை அழைத்து செல்வ தற்காக காரில் தயார் நிலை யில் இருந்தனர். காரின் அருகே சென்ற மாணவி திடீரென பெற்றோர் பிடியில் இருந்து தப்பி ஓடினார். அங்கு தயார் நிலையில் மோட்டார் சைக்கிளில் நின்ற தனது காதலனுடன் ஏறி மீண்டும் ஓட்டம் பிடித்தார். இதை எதிர்பாராத பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து மீண்டும் மாணவியை போலீ சார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குளச்சல் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.

    • 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
    • குமரி மாவட்டத்தில் 375 பள்ளிகளில் உள்ள 28,337 மாணவ-மாணவிகள் பயன்பெற உள்ளனர்.

    நாகர்கோவில் : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. குமரி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிக்குட்பட்ட 42 பள்ளிகளில் உள்ள 3994 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து இந்த திட்டம் தற்பொழுது விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. அனைத்து நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகள் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து இன்று முதல் அங்குள்ள மாணவ-மாணவிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் குமரி மாவட்டத்தில் உள்ள மேலும் 333 பள்ளிகளில் படிக்கும்24,343 மாணவ-மாணவிகளுக்கு இந்த திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலமாக குமரி மாவட்டத்தில் 375 பள்ளிகளில் உள்ள 28,337 மாணவ-மாணவிகள் பயன்பெற உள்ளனர். முதலமைச்சரின் காலை உணவு திட்ட தொடக்க விழா நிகழ்ச்சி தோவாளை ஊராட்சி ஒன்றியம், மாதவலாயம் ஊராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் நடந்தது. விழாவில் காலை உணவு திட்டத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசிய தாவது:-

    எங்கு படித்தோம் என்பது முக்கியமல்ல எப்படி படித்தோம் என்பதே முக்கியமாகும்.அரசு பள்ளியில் படித்த பலரும் சாதனையாளர்களாக வந்துள்ளார்கள். அதேபோல் மாணவர்களாகிய நீங்களும் பல்வேறு துறைகளில் தங்களது சாதனைகளை படைக்க வேண்டும். ஒரு தவறான சம்பவம் நடந்து விட்டால் அந்த சம்பவத்தை கூட ஒரு நிமிடத்தில் உலகம் முழுவதும் பரப்பும் அளவிற்கு சமூக ஊடகங்கள் வளர்ந்து விட்டது. எனவே சமூக ஊடகங்களை நம்பி மாணவர்கள் இருக்கக்கூ டாது. நீட் தேர்வில் தோல்வி அடைந்தால் மாணவர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் நடந்து வரு கிறது. இது மிகப்பெரிய தவறான செயலாகும். அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் சிலர் ஒரு லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் ஒரு சில தனியார் பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நாங்கள் அதிகம் சம்பளம் வாங்கும் ஆசிரியரிடம் படிப்பதாக கூற வேண்டும். ஏன் இப்படி என் சொல்கிறேன் என்றால் சிலர் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நான் இந்த பள்ளியில் படிக்கிறேன் அந்தப் பள்ளியில் படிக்கிறேன் என்று கூறுவார்கள். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் முதல் மதிப்பெண் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அனைவரும் முதல் மதிப்பெண் வாங்க வேண்டும் என்றால் எப்படி முடியும். சந்திரயான் மிகப்பெரிய வெற்றி அடைய செய்ததும் தமிழகத்தை சார்ந்தவர்கள் தான் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். எந்த பாடமாக இருந்தாலும் அந்த பாடத்தை விருப்ப பாடமாக எடுத்து படித்தால் நீங்கள் சாதனை படைக்கலாம். பயாலஜி போன்ற எத்தனையோ பாடங்கள் உள்ளது. இதை படிப்பதன் மூலமாக நீங்கள் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்யலாம். அரசு பள்ளியில் படிப்பதை நாம் பெருமையாக கருத வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் தாய் உள்ளத்தோடு காலை உணவு திட்டத்தை தந்துள்ளார்கள். காலையில் வேலைக்கு செல்லும் பெற்றோர்கள்

    தங்களது குழந்தைக்கு உணவு தயார் செய்து கொடுக்க முடியாத நிலை ஏற்படும்.இந்த காலை உணவு திட்டத்தின் மூலமாக குழந்தைகள் பயன்பெறு வார்கள். இந்தஅற்புதமான திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார். இந்ததிட்டத்தை செலவாக கருதாமல் மூலதனமாக கருதுவதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.

    குமரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தை தூய்மையான மாவட்டமாக கொண்டு வர குப்பை இல்லா குமரி என்ற இயக்கத்தை நடத்தி வருகிறோம். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை மாணவ-மாணவிகள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கலெக்டர் ஸ்ரீதர், மேயர் மகேஷ், ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், திட்ட இயக்குனர் பாபு, முதன்மை கல்வி அதிகாரி முருகன், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் ஷேக்செய்யது அலி, மாதவலாயம் ஊராட்சி மன்ற தலைவர் ரெஜினா ராஜேஷ், துணை தலைவர் பீர் முகமது, தோவாளை ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வன், குமரி மாவட்ட தி.மு.க. தொழிலாளர் அணி அமைப்பாளர் இ.என்.சங்கர், மாணவரணி அமைப்பாளர் அருண் காந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மேயர்-ஆணையாளர் பேச்சுவார்த்தை
    • மாநகராட்சி குறைதீர்க்கும் நாள் கூட்டம்

    நாகர்கோவில், ஆக.24-நாகர்கோவில் மாநகராட்சி மக்களின் குறைகளை தீர்த்து வைக்கும் வகையில் வாரந்தோறும் வியாழக்கிழமை குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

    மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். ஆணையர் ஆனந்த் மோகன் முன்னிலை வகித்தார். இதில் வீட்டு வரி, குடிநீர் வரி, நில அளவு, சொத்து வரி, ஆக்கிரமிப்பு அகற்றுவது உள்பட மொத்தம் 34 மனுக்கள் பெறப்பட்டன.

    வைராவிளை ஊர் தலைவர் செந்தில்குமார் தலைமையில் ஏராள மானோர் இன்று மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்திருந்தனர். இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் சற்று பரபரப்பு நிலவியது.

    பின்னர் அவர்கள் மேயர் மகேசை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் மாநகராட்சி 50-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக தர்மபுரம் ஊராட்சி மூலம் மாநகராட்சி பகுதியை ஆக்கிரமிக்கும் நோக்கில் ஒரு பெயர் பலகையை வைத்துள்ளனர். இது தொடர்பாக நாங்கள் ஆணையர் உள்பட பல்வேறு துறை அதிகாரி களுக்கு புகார் மனு அளித்திருந்தோம்.

    புகார் மனுவை விசாரித்த ஆணையர், தர்மபுரம் ஊராட்சி செயல் அலுவலரிடம், வைராவிளை ஊரில் அமைக்கப்பட்டிருக்கும் பெயர் பலகையை அகற்றுவதற்கு கடிதம் அனுப்பியும், பெயர் பலகை இதுவரை அகற்றப்படவில்லை. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து பெயர் பலகையை அகற்ற வேண்டும். இதே இடத்தில் மாநகராட்சி சார்பில் புதிய பெயர் பலகை அமைக்க இருப்பதாக தகவல் தெரிய வருகிறது.

    ஊர் பெயரிட்டு புதிய பலகை அமைக்கும் பட்சத்தில் இரு ஊர்களுக்கு இடையே கலவரம் ஏற்பட்டு சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த இடத்தில் ஏற்கனவே இரு ஊர்களின் திருவிழாவின் போது மின்விளக்குகள் அமைப்பதில் பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பிரச்சினைக்குரிய இடத்தில் எந்த பெயர் பலகையும் இடம் பெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து மேயர் மகேஷ் மற்றும் ஆணையர் ஆனந்த் மோகன் ஆகியோர் வைராவிளை ஊர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு ஊர் மக்களையும் அழைத்து சமரசம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து ஊர் மக்கள் அனைவரும் அங்கிருந்து சென்றனர்.

    ×