என் மலர்
நீங்கள் தேடியது "பிறந்த நாளையொட்டி"
- விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி மும்மத கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு
- விஜயகாந்த் பெயரில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது
நாகர்கோவில் : தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி மும்மத கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடந்தது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாவட்ட செயலாளர் அமுதன் தலைமையில் விஜயகாந்த் பெயரில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பின்னர் குளச்சல் காணிக்கை மாதா ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. குளச்சல் அக்கறை பள்ளிவாசலில் தொழுகையும் நடந்தது. நிகழ்ச்சியில் அவை தலைவர் அய்யாதுரை, பொருளாளர் முத்துக்குமார், துணை செயலாளர்கள் செல்வகுமார், சுடலையாண்டி பிள்ளை, வளர்மதி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் மாரியப்பன், ஒன்றிய செயலாளர்கள் புகாரி, டெல்வின், நாகராஜன், தங்ககிருஷ்ணன், பரமராஜா, மைக்கேல் ரத்தினம், மாவட்ட அணி நிர்வாகிகள் துரை, பாபு, மகளிர் அணி நிர்வாகிகள் பாக்கியவதி, பாப்பா, கலாவதி, நீலாவதி, விஜயா, பேரூர் செயலாளர்கள் பரமாத்மா, நவாஸ்கான், கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.






