search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    4 மையங்களில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு எழுத்து தேர்வு
    X

    4 மையங்களில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு எழுத்து தேர்வு

    • எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை
    • குமரி மாவட்டத்தில் இன்று நடைபெறுகிறது

    நாகர்கோவில் :

    2023-ம் ஆண்டுக்கான தாலுகா ஆயுதப்படை தமிழ்நாடு சிறப்பு பட்டாலி யன் ஆகியவற்றில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் ஆண், பெண் பதவிகளுக்கான முதன்மை தேர்வு இன்று நடந்தது.

    குமரி மாவட்டத்தில் 4 மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வு எழுதுவதற்கு 3,884 பேர் விண்ணப் பித்திருந்தனர். நாகர் கோவில் பொன் ஜெஸ்லி என்ஜினீ யரிங் கல்லூரியில் உள்ள தேர்வு மையம் பெண்களுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆனால் காலை 7 மணிக்கு தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையத்திற்கு வந்திருந்தனர்.

    தேர்வு எழுத வந்த பெண்களை 8.30 மணிக்கு பிறகு போலீசார் தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதித்தனர். பலத்த பரிசோதனைக்கு பிறகு தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப் பட்டதையடுத்து தேர்வு எழுத வந்த பெண்கள் தங்களது உறவினர்களிடம் செல்போனை ஒப்படைத்து விட்டு சென்றனர். சிலர் அதற்கான ஒதுக்கப்பட்ட அறையில் செல்போனை வழங்கிவிட்டு தேர்வு மையத்திற்குள் சென்றனர். வாட்ச் அணிந்து செல்வ தற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

    வாட்டர் பாட்டில் கொண்டு செல்வதற்கும் போலீசார் அனுமதிக்க வில்லை. ஹால் டிக்கெட்டை கொண்டு செல்வதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப் பட்டது. தேர்வு எழுத வந்த பெண்கள் அணிந்திருந்த காலணிகளை கழற்றியும் போலீசார் பரிசோதனை செய்தனர். பலத்த பரி சோதனைக்கு பிறகு உள்ளே சென்ற பெண்கள் தங்களுக்கு எந்த அறை ஒதுக்கப்பட்டி ருந்தது என்பது குறித்த விவரம் அறிவிப்பு பல கைகள் வைக்கப்பட்டு இருந்தது.

    அதை பார்த்து பெண்கள் தேர்வு மையத்திற்குள் சென்றனர். தேர்வு மையத்திற்குள் மற்றவர்கள் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. தேர்வு மையத்திற்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இறச்சகுளம் அமிர்தா என்ஜினீயரிங் கல்லூரி, சுங்கான் கடை புனித சேவியர் என்ஜினீயரிங் கல்லூரி, தோவாளை சி.எஸ்.ஐ. என்ஜினீயரிங் கல்லூரி ஆகியவற்றில் தேர்வு நடந்தது. தேர்வு எழுதுவதற்கு இங்கு ஏராளமான வாலிபர்கள், பட்டதாரிகள் வந்திருந்தனர். இவர்களும் பலத்த பரிசோதனைக்கு பிறகு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    தேர்வு மையங்களில் குமரி மாவட்ட சீருடை பணியாளர் தேர்வு கண்காணிப்பு அதிகாரியும், ஆயுதப்படை டி.ஐ.ஜி.யுமான விஜயலட்சுமி மாவட்ட போலீஸ் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் ஆய்வு செய்தனர். காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 12.30 மணிக்கு முடிவடைந்தது. தேர்வு முடிந்த பிறகு பெரும்பாலான பெண்கள் தேர்வு மையத்திற்கு வெளியே மதியம் நடை பெறும் தேர்வை எழுது வதற்கு காத்திருந்தனர்.

    அவர்களுக்கு தேவை யான உணவை அவரது பெற்றோர் வாங்கி வைத்து விட்டு வெளியே காத்தி ருந்தனர். மொழி தகுதி தேர்வு மாலை 3.30 மணி முதல் 5.10 மணி வரை நடக்கிறது. போலீஸ் துறையில் பணிபுரிந்து தேர்வு எழுதுபவர்கள் மற்றும் பணியின்போது இறந்த அவரது வாரிசுகள் தேர்வுகளில் எழுதினால் அவர்களுக்கு அதே மாவட்டத்தில் தேர்வு எழுதுவதற்கு அனுமதி வழங்கவில்லை.

    வேறு மாவட்டத்தில் தேர்வு எழுத ஒதுக்கீடு செய்யப்பட்டி ருந்தது. அதன் அடிப்படை யில் வேறு மாவட்டத்தில் இருந்து ஒரு சிலர் குமரி மாவட்டத்திற்கு தேர்வு எழுத வந்திருந்தனர். குமரி மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்திற்கு தேர்வு எழுத பலர் சென்றிருந்தனர்.

    Next Story
    ×