என் மலர்
கள்ளக்குறிச்சி
மும்பையில் இருந்து நர்சிங் தேர்வு எழுத வந்த நர்சிங் மாணவி மாயமானது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்டாச்சிமங்கலம்:
தியாகதுருகம் அருகே உள்ள பிரிதிவிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் மனைவி ஜெயலட்சுமி(வயது 25). இவர் தற்போது தனது கணவருடன் மும்பையில் வாசினகா பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நர்சிங் தேர்வு எழுதுவதற்காக கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சொந்த ஊரான பிரிதிவிமங்கலத்துக்கு வந்த ஜெயலட்சுமி தேர்வை எழுதி விட்டு கடந்த 6-ந் தேதி மும்பை செல்வதற்காக அவரது மாமனார் ராஜியிடம் கூறிவிட்டு தியாகதுருகம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.
ஆனால் அவர் இதுவரை மும்பைக்கு வந்து சேரவில்லை என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஜெயலட்சுமியை தேடி வருகிறார்கள்.

சங்கராபுரத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்:
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுக்கத் அலி தலைமையிலான போலீசார் கொசப்பாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தபோது அவர் புகையிலை பொருட்களை வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் அந்த வாலிபர் செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்த பாரத்(வயது 27) என்பதும், சங்கராபுரத்தில் உள்ள மளிகை கடையில் புகையிலை பொருட்களை வாங்கியதும் தெரியவந்தது. இதையடுத்து பாரத்தை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல்செய்தனர். மேலும் இவர் கொடுத்த தகவலின் பேரில் சங்கராபுரம் பூட்டைசாலையில் உள்ள மளிகை கடை வியாபாரி பாக்கம்புதூரை சேர்ந்த தேவேந்திரன்(வயது 32) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 820 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மூங்கில்துறைப்பட்டு அருகே விவசாயி வீட்டில் நகை,பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூங்கில்துறைப்பட்டு:
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள கானாங்காடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விவசாயி ராஜேஷ்கண்ணா(வயது 51). சம்பவத்தன்று இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 50 பவுன் நகை, 13 கிலோ வெள்ளி, ரூ.23 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து வடபொன்பரப்பி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை பிடிப்பதற்காக துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் உலகநாதன், திருமால், ஜெயச்சந்திரன் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளுக்கு பிரிந்து சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்:
சங்கராபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஊராங்காணி சுடுகாடு பகுதியில் அதே ஊரை சேர்ந்த தங்கராசு (வயது 41), ராஜீவ்காந்தி ( 38) ஆகியோர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதைபார்த்த போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
மூங்கில்துறைப்பட்டு அருகே மூதாட்டி உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பமாக நகைக்காக அவரை அவரது பேரனே கொலை செய்தது தெரியவந்துள்ளது.
மூங்கில்துறைப்பட்டு:
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள வடமாமந்தூர் தக்கா பகுதியை சேர்ந்தவர் அலிமா பீ(வயது 70). இவர் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். மேலும் அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை காணவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் அலிமா பீ பேரனான சல்மான் (26) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
இதில் அலிமா பீயை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
செலவுக்கு பணம் இல்லாமல் இருந்தேன். இந்த நிலையில் நான் எனது பாட்டி வீட்டுக்கு சென்றேன். அப்போது அவர் வீட்டில் தனியாக இருந்தார். இதையடுத்து பாட்டியை கொலை செய்து அவரது நகையை திருட முடிவு செய்தேன். அதன்படி நான் கல்லை எடுத்து எனது பாட்டி என்றும் பாராமல் அவரை அடித்து கொலை செய்தேன்.
பின்னர் அவரின் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை திருடினேன். அந்த நகையை எனது உறவினரான சவுகத்அலி (39) என்பவரிடம் கொடுத்து அடமானம் வைத்து அதன் மூலம் கிடைத்த பணத்தை இருவரும் பிரித்து கொண்டோம்.
இவ்வாறு வாக்குமூலத்தில் சல்மான் கூறியிருந்தார்.
இதையடுத்து சல்மான் மற்றும் சவுகத்அலியை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து நகை, 2 மோட்டார் சைக்கிள்கள், ரூ.31 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. நகைக்காக பாட்டியை பேரனே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூங்கில்துறைப்பட்டு அருகே தேள் கடித்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூங்கில்துறைப்பட்டு:
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ரங்கப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி மகன் ராஜேந்திரன் (வயது 40). சம்பவத்தன்று இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரை தேள் கடித்து விட்டது. இதில் வலியால் அலறிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயியை கட்டிப்போட்டு நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களின் உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வெளியானது. இது தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் அருகே உள்ள பழங்கூர் குப்பத்து மேடு கிராமத்தை சேர்ந்தவர் செல்வநாதன் (வயது 86), விவசாயி. சம்பவத்தன்று இவர் இரவு வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, செல்வநாதனை கத்திமுனையில் கட்டிப்போட்டு, பீரோவில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் ஆகியோர் உத்தரவின்படியும் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாபு, சப்- இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொள்ளை நடத்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு, கொள்ளையர்கள் 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கொள்ளையர்கள் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவுக்கான இணைப்பை மட்டும் துண்டித்து விட்டு சென்றுள்ளனர்.
ஹார்டுடிஸ்கை எடுத்துச் செல்லவில்லை. இதனால் அந்த ஹார்டுடிஸ்கில் கொள்ளையர்களின் முகம் பதிவாகி இருக்கிறது. கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரும் 20 முதல் 25 வயதுடையவர்கள். கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர் ஒருவரது கையில் சின்னா என பச்சை குத்தப்பட்டுள்ளது. ஆகவே கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை புகைப்படமாக மாற்றி கிராமம் தோறும் கொடுத்து கொள்ளையர்கள் பற்றி விசாரித்து வருகிறோம். மேலும் இந்த கொள்ளை கும்பல் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். தகவல் தெரிவிப்பவரின் பெயர் ரகசியம் காக்கப்படும். கூடிய விரைவில் இந்த கொள்ளை கும்பல் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
திருக்கோவிலூர் பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் வைத்த போலீசார் 134 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் பகுதிக்குட்பட்ட ஒருசில கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு புகார் சென்றது. அதன்பேரில் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் திருக்கோவிலூர் பகுதிக்குட்பட்ட பெட்டிக்கடைகள், மளிகைக் கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது திருக்கோவிலூர் பஸ் நிலையம் அருகே உள்ள கோபி என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடையில் இருந்த 134 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, கோபியை கைது செய்தனர்.
இதேபோல் டி.கே.மண்டபம் கிராமத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 16 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்ததுடன், அந்த கடையின் உரிமையாளர் உண்ணாமலையை கைது செய்தனர். மேலும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த மேற்கண்ட 2 கடைகளையும் பூட்டி தாசில்தார் குமரன் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
மூங்கில்துறைப்பட்டு அருகே பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரி மாணவ-மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மூங்கில்துறைப்பட்டு:
மூங்கில்துறைப்பட்டு அருகே மூலக்காடு கிராமத்தில் அரசு மாதிரி பள்ளி உள்ளது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல பள்ளி நேரத்துக்கு போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் காலை, மாலை நேரங்களில் கூட்ட நெரிசலுடன் பெரும் சிரமங்களுக்கு இடையே பஸ்சில் பயணம் மேற் கொண்டு வந்தனர். மேலும் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிக்கு வந்து செல்ல முடியாமலும் தவித்தனர்.
இதனால் பாதிக்கப்பட்ட மாதிரி பள்ளி மாணவ-மாணவிகள் நேற்று காலை 10 மணிக்கு பள்ளி அருகே உள்ள சேராப்பட்டு சாலையில் ஒன்று திரண்டதோடு, பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வலியுறுத்தி திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குர்ஷித்பாஷா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மாணவர்கள், பள்ளி நேரத்துக்கு போதிய பஸ் வசதி இல்லாததால், குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளிக்கு வந்து செல்ல முடியவில்லை. இதனால் கல்வி பயில்வதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆகவே பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்ற போலீசார், இதுபற்றி போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் பேசி கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மாணவர்கள் மறியலை கைவிட்டு, அங்கிருந்து வகுப்பறைகளுக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் சேராப்பட்டு சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி அருகே திருமணம் செய்துகொள்வதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகம் போலீஸ் சரகம் வடதொரசலூர் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தியாகதுருகத்தில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த சிறுமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மகன் டிராக்டர் டிரைவர் வெங்கடேசன் (வயது 23) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் வெங்கடேசன் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்தார். இதற்கிடையில் அந்த சிறுமி கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி விடுமுறையின்போது, கேரள மாநிலம் மாகி பகுதிக்கு வீட்டு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு வீட்டு வேலையில் ஈடுபட்டிருந்த சிறுமி மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் சிறுமியை அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி 2 மாதம் கர்ப்பம் அடைந்துள்ளாக கூறியுள்ளனர்.
இது தொடர்பாக கேரள மாநிலம் மாகி போலீஸ் நிலையத்திற்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. மாகி போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தி அங்கு வழக்குப்பதிவு செய்து, அந்த வழக்கை கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மாற்றியுள்ளனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மூலம் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வழக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி மற்றும் போலீசார் 16 வயது சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய டிராக்டர் டிரைவர் வெங்கடேசன் என்பவரை நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

உளுந்தூர்பேட்டையில் கல்லூரி பேராசிரியர் வீட்டில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வேஸ்வரன்(வயது 36.) உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு தனியார் பெண்கள் கல்லூரியில் துணைப் பேராசிரியராக பணிபுரிந்து வரும் இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கும்பகோணத்திற்கு சென்றார்.
பின்னர் மீண்டும் அங்கிருந்து குடும்பத்துடன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவில் போடப்பட்ட பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. அதில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமொழியன் தலைமையிலான போலீசார் கொள்ளை நடந்த வீ்ட்டை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகை மற்றும் தடயங்களை சேகரிக்கப்பட்டது. மேலும் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
கல்லூரி பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் உளுந்தூர்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருக்கோவிலூர் அருகே லாட்டரி சீட்டு வியாபாரியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் பகுதியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்று வந்த கீழையூர் பொங்கமேட்டுத்தெருவைச் சேர்ந்த பச்சமுத்து மகன் தமிழ்ச்செல்வன் (வயது 31) என்பவரை திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இவரது குற்ற செயலை தடுக்கும் வகையில் தமிழ்செல்வனை குண்டர் தடு்ப்பு சட்டத்தில் கைது செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஜியாவுல் ஹக் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதைஏற்று கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின் பேரில் தமிழ்ச்செல்வனை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதுபற்றி சிறையில் இருக்கும் தமிழ்செல்வனிடம் போலீசார் தெரிவித்தனர்.