என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 கடைகளுக்கு சீல்
    X
    2 கடைகளுக்கு சீல்

    திருக்கோவிலூர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை - 2 கடைகளுக்கு சீல்

    திருக்கோவிலூர் பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் வைத்த போலீசார் 134 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூர் பகுதிக்குட்பட்ட ஒருசில கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு புகார் சென்றது. அதன்பேரில் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் திருக்கோவிலூர் பகுதிக்குட்பட்ட பெட்டிக்கடைகள், மளிகைக் கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 

    அப்போது திருக்கோவிலூர் பஸ் நிலையம் அருகே உள்ள கோபி என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடையில் இருந்த 134 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, கோபியை கைது செய்தனர்.

    இதேபோல் டி.கே.மண்டபம் கிராமத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 16 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்ததுடன், அந்த கடையின் உரிமையாளர் உண்ணாமலையை கைது செய்தனர். மேலும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த மேற்கண்ட 2 கடைகளையும் பூட்டி தாசில்தார் குமரன் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
    Next Story
    ×