என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சொத்து தகராறில் தந்தையை கீழே தள்ளி கொன்ற மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கீழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவா் குப்பன் (வயது 70) தொழிலாளி. இவருக்கு 4 மகன்கள், 1 மகள் உள்ளனர். குப்பன் தனது குடும்ப சொத்தான 1½ ஏக்கர் நிலத்தை பாகப்பிரிவினை செய்து கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் குப்பனின் 3-வது மகன் ஆறுமுகம் என்பவர் தனது குழந்தைகள் பெயரில் 50 சென்ட் நிலத்தை குப்பனிடம் இருந்து எழுதி வாங்கி கொண்டார்.

    இது பற்றி அறிந்த 2-வது மகன் சின்னவன் என்பவர் தனது தந்தை குப்பனிடம் சென்று ஆறுமுகத்தின் குழந்தைகளுக்கு சொத்து எழுதி கொடுத்தது பற்றி கேட்டு்ள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த சின்னவன் தனது தந்தை குப்பனை தள்ளிவுள்ளார். இதில் மயக்கமடைந்த குப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் சின்னவன் தள்ளிவிட்டதில் குப்பன் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலைக்குச் சென்ற கூலித்தொழிலாளியை விஷ வண்டு கடித்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே தியாகை ஊராட்சியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52) கூலித்தொழிலாளி, இவர் நேற்று தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அதே பகுதியில் பெரியநாயகி அம்மன் கோவில் அருகே மரக்கன்றுகள் நடுவதற்காக முட்புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவரது காலில் விஷ வண்டு கடித்தது.

    இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் இவரை தியாகதுருகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் மோட்டார் சைக்கிளில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆறுமுகம் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இதுகுறித்து அவரது மனைவி சாந்தாயி தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலைக்குச் சென்ற கூலித்தொழிலாளியை விஷ வண்டு கடித்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார்.
    • உணவு கலப்படம் மற்றும் உணவு கலப்படத்தை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே வீரசோழபுரத்தில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் தனியார் கல்லூரி இணைந்து உலக உணவு பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுகந்தன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கதிரவன், அன்புபழனி, இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பாஸ்கரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள், அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்தும், உணவு கலப்படம் மற்றும் உணவு கலப்படத்தை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து உணவு பாதுகாப்பு குறித்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் கல்லூரி மாணவிகள் பலரும் கலந்துக்கொண்டனர். முடிவில் துணை முதல்வர் சுரேஷ் நன்றி கூறினார்.

    • இந்திய மருத்துவ சங்க தலைவர் மகுடமுடி, செயலாளர் சுரேஷ் ராஜ், பொருளாளர் தரணி கவாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • 200- க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டன.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வன் உஷா தலைமை தாங்கினார். இந்திய மருத்துவ சங்க தலைவர் மகுடமுடி, செயலாளர் சுரேஷ் ராஜ், பொருளாளர் தரணி கவாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவர் நேரு வரவேற்றார். இதில் சுமார் 200- க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டன. அப்போது பேராசிரியர் செல்வராஜ், இணை பேராசிரியர்கள் ஷமீம், அணிதா ராணி, அனுசுயா, சௌமியா, ராஜ்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    • உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி முதியவர் மயங்கி விழுந்தார்.
    • அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினார்கள்.

    உளுந்தூர்பேட்டை:

    உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளாப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை(வயது 60)இவரும் அந்தப் பகுதியை சேர்ந்த மேலும் சில நபர்களும் அந்த ஊரில் நடைபெற உள்ள சாகை வார்த்தல் திருவிழாவிற்காக மாரியம்மன் கோவிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு க்கொண்டிருந்தனர்.

    அண்ணாமலை கோவிலின் மேல்புறத்தில் சுத்தம் செய்து கொண்டிருந்த போது அங்கிருந்த ஒயரை எடுத்துப் போட முயன்று உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி அவர் மயங்கி விழுந்தார்.

    இந்த நிலையில் அண்ணாமலையை மீட்டு அக்கம் பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினார்கள். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற உளுந்தூ ர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சங்கராபுரம் அருகே மூட்டு வலி காரணமாக வேதனை அடைந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சங்கராபுரம்:

    சங்கராபுரம் அருகே அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முனியன் (வயது 65). விவசாயி. இவருக்கு மூட்டு வலி அதிகமாக இருந்து வந்துள்ளது. இதனால் மனமுடைந்த முனியன் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், முனியன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிணற்றில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
    • கிணற்றில் இருந்து வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மணிநதி ஆற்றுப்பாலம் அருகே உள்ள ஒரு கிணற்றில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.

    தகவல் அறிந்த சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ரமேஷ்குமார் தலைமையிலான வீரர்கள் மூலம் கிணற்றில் இருந்து வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் கருநீலகலர் சட்டைஅணிந்திருந்தார். அவர் யார? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் இறந்தவர் யார்? அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரதுசாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என விசாரணை செய்து வருகின்றனர்.

    • சிறுமியை திருமணம் செய்து கொண்ட அருள் பிரகாஷ் மற்றும் சிறுமி கள்ளக்குறிச்சியில் தங்கியுள்ளதாக உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.
    • சிறுமியை கடத்தி திருமணம் செய்தது தொடர்பாக டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுமி அந்த பகுதியில் படித்து வந்தார். இந்நிலையில் ரோடுமாம்புதூர் பகுதியைச் சேர்ந்த அருள்பிரகாஷ் (வயது 24) ஜேசிபி எந்திர டிரைவர். இவருக்கும் அந்த சிறுமிக்கும் இடையில் காதல் மோகம் ஏற்பட்டது.

    இது சிறுமியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் சிறுமியை கண்டித்து உளுந்தூர்பேட்டை அருகே பாண்டூர் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் சிறுமியை தங்க வைத்து படிக்க வைத்து வந்தனர். அங்கு படித்துவந்த சிறுமியை கடந்த மூன்று மாதம் முன்னரே அருள்பிரகாஷ் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை கடத்திச் சென்றார். இதில் அருள்பிரகாஷ் சிறுமியை கேரளாவிற்கு கடத்திச்சென்று அங்கு அவரை திருமணம் செய்து கொண்டார்.

    தற்போது சிறுமியை திருமணம் செய்து கொண்ட அருள் பிரகாஷ் மற்றும் சிறுமி கள்ளக்குறிச்சியில் தங்கியுள்ளதாக உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.

    தகவலின்பேரில் உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் அருள் செல்வம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருள்பிரகாஷ் இடமிருந்து சிறுமியை மீட்டனர். மேலும் போலீசார் அருள்பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • சங்கராபுரம் விபத்தில் காய்கறி வியாபாரி பலியானார்.
    • சங்கராபுரம் அருகே விபத்தில் காய்கறி வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (40). காய்கறி வியாபாரி. இவர் மோட்டார் சைக்கிளில் பூட்டை கிராமத்திலிருந்து வீட்டிற்கு வந்துகொண்டிருந்தர். சங்கராபுரம் மும்முனை சந்திப்பு பகுதியில் வந்தபோது, மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக அங்கிருந்த ஒரு ஜவுளி கடையின் இரும்பு கேட் மீது மோதியது.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
    • டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழந்தார்.

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பூராகவன். இவரது மனைவி பிரேமா (45). கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த பிரேமா வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார்.

    இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • சங்கராபுரம் அருகே 50 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
    • சாராயம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சங்கராபுரம்:

    சங்கராபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், இளங்கோ தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கொசப்பாடி கிராமத்தை சேர்ந்த இளகாந்தம் (வயது 57) என்பவர் தனது வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைபார்த்த போலீசாா், அவரை கைது செய்து, அவரிடமிருந்து 50 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த செல்வம் (40) என்பவர் கொசப்பாடி ஏரிகோடி பாலம் அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரையும் போலீசார் கைது செய்து, 55 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் பாவளம் கிராமத்தில் சாராயம் விற்றதாக அதே பகுதியை சேர்ந்த ஆராயி (55) என்பவரையும் போலீசாா் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    ×