என் மலர்
ஈரோடு
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த முளியனூர் கிராமத்தில் 16 வயது சிறுமிக்கு திருமணம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு புகார் வந்தது.
இதன்பேரில் அம்மாபேட்டை முளியனூர் கிராமத்தில் இருந்த 16 வயது சிறுமியிடம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர்களை பிரியாதேவி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
அப்போது அந்த சிறுமி 11-ம் வகுப்பு படித்து வருவதாகவும், கடந்த மாதம் 17-ந் தேதி அவரது விருப்பம் இல்லாமல் சிறுமியின் தாய் சேலம் மாவட்டம் மோலப்பாளையம் அழைத்துச் சென்று கனகராஜ் (25) என்பவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததாக அதிர்ச்சியான தகவலை தெரிவித்தார்.
கனகராஜ் விவசாய கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இதையடுத்து ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் பவானி மகளிர் போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் குழந்தைகள் திருமண தடைச் சட்டம், பாலியல் வன்கொடுமையில் இருந்து குழந்தைகளை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை திருமணம் செய்த கனகராஜ் மற்றும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை வேகமாக பரவி வந்தது. பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தி அவை நீட்டிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய தேவையான மளிகை காய்கறி கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை செயல்பட முதலில் அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் தொற்றின் வேகம் அதிகரித்ததன் காரணமாக காய்கறி மளிகை கடை செயல்படவும் அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து மளிகைக்கடைகளின் நேரத்தை குறைத்து இயக்க வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட அனைத்து வியாபாரிகள் சார்பில் இன்று முதல் மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என அறிவித்துள்ளனர்.

இதேபோல் மாநகர் பகுதியில் உள்ள 2250 மளிகைக் கடைகள் இன்று காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்திருந்தது. 1 மணிக்கு பிறகு அனைத்து மளிகை கடைகளும் அடைக்கப்பட்டன. இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகனிடம் அனுமதி கடிதம் அளித்து உள்ளனர்.
பொதுமக்கள் நலனுக்காகவும், வியாபாரிகளின் நலனுக்காகவும் எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில இணைச்செயலாளர் சிவனேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நடவடிக்கையை பொதுமக்களும் வரவேற்றுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள ஒழலக்கோவில் ஊராட்சியில் சின்ன செட்டிபாளையம், நல்லகட்டி பாளையம், மலையம்பாளையம் உள்ளி ட்ட பகுதிகளில் கொரோனா தாக்கம் தீவிரமாக பரவி வருகிறது.
மேலும் இந்த ஒழலக்கோவில் ஊராட்சி திருப்பூர் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதால் திருப்பூர் தொழிற்சாலைகளுக்கும், பின்னலாடை நிறுவனங் களுக்கும் பணிக்கு செல்லும் பணியாளர்கள் ஒழலக் கோவில் ஊராட்சி வழியாக கோபி, நம்பியூர், ஈரோடு, சித்தோடு பகுதிகளுக்குச் சென்று வருவதால் தொற்று அதிகமாக பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப் படுகிறது.
இந்நிலையில் ஒழலக்கோவில் பகுதியில் ஊராட்சி சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடை பெற்றது. இதில் வரும் 14-ந் தேதி வரை ஒழலக் கோவில் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும். ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் மருந்து கடைகள் ,பெட்ரோல் பங்க், பால் கொள்முதல் நிலையங்கள் தவிர காய்கறி, மளிகை கடைகள், உணவகங்கள், இறைச்சி கடைகள், வியாபார நிறுவனங்கள், விசைத்தறிக் கூடங்கள், இதர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு இருக்கும்.
மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும் திருப்பூரில் இருந்து யாரும் வராத வாறு எல்லைப்பகுதிகள் மூடப்பட்டு வெளி ஆட்கள் யாரும் வரவேண்டாம் எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு படி தற்போது ஒழலக்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-ம் அலை வேகமாக பரவி வருகிறது. சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களுக்கு போட்டியாக ஈரோட்டில் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழக அரசின் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது.
இதனால் தினசரி பாதிப்பில் முதலிடத்தில் இருந்து வந்த சென்னை தற்போது 3-ம் இடம் சென்றுள்ளது. ஆனால் அதே சமயம் ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து தினசரி பாதிப்பு அதிகரித்து வந்ததால் கடந்த சில நாட்களாக 2-ம் இடம் பிடித்து வருகிறது.
நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தின் மேலும் 1,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 69 ஆயிரத்து 485 ஆக உயர்ந்துள்ளது. இன்றைக்குள் 70 ஆயிரத்தை கடந்து விடும்.
ஒரே நாளில் 2,003 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 54 ஆயிரத்து 742 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 459 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது மாவட்டம் முழுவதும் 14,284 கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முதலில் மாநகர் பகுதியில் அதிகமாக பரவிய தொற்று தற்போது கிராமப்புற பகுதியில் கொத்துக்கொத்தாக பரவி வருகிறது.
கிராமப்புற பகுதிகளில் மக்கள் இன்னும் அலட்சியமாக இருந்து வருகின்றனர். காய்ச்சல், சளி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லாமல் அருகில் இருக்கும் மருந்து கடைகளில் மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர். இதனால் தற்காலிகமாக காய்ச்சல், சளி சரியானாலும் அடுத்த ஒரு வாரத்தில் மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனால் சில நேரங்களில் அவர்களைக் காப்பாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. இது போக காய்ச்சல், சளி போன்ற அறிகுறி உள்ளவர்கள், கொரோனா பரிசோதனை கொடுத்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் வெளியில் மற்றவர்களுடன் சர்வசாதாரணமாக நடமாடுகின்றனர். இதனால் நோய்தொற்று வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் கவுந்தப்பாடி ஓடத்துறை ஊராட்சிக்குட்பட்ட பனங்காட்டூர், பட்டையக்காளிபாளையம், சூரியம்பாளையம், பாலப்பாளையம், கோவில்பாளையம், நஞ்ச கவுண்டன்பாளையம், மேற்கு காலனி உட்பட 18 கிராமங்கள் உள்ளது.
இந்த கிராமங்களில் 10 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். விவசாயம் மற்றும் கூலி வேலைக்கு செல்பவர்கள் இங்கு அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதிகளில் வெளியூர் வேலைக்கு சென்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.
ஆனால் அவர்கள் வீட்டில் தனிமையில் இல்லாமல் ஊர் சுற்றியதால் தொற்று வேகமாக பரவியது. இதையடுத்து அந்த பகுதிகளுக்கு கலெக்டர் கதிரவன் சென்று ஆய்வு மேற்கொண்டார். வீட்டில் தனிமையில் இல்லாதவர்களை மருத்துவ மனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தார். அதைத் தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் முதலில் 50 பேருக்கு தொற்று உறுதியானது.
இதையடுத்து ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் ஒரு சிலர் மருத்துவமனையிலும், ஒரு சிலர் வீடுகளிலும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அனைத்தும் தடுப்புகள் அமைத்து அடைக்கப்பட்டு போலீசார், வருவாய்த் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மேலும் இந்த பகுதியில் மருத்துவ குழுவினரும் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். இதேபோல் சத்தியமங்கலம், அந்தியூர், பவானி, கோபி போன்ற தாலுகா பகுதியில் உள்ள கிராமங்களிலும் தொற்று தற்போது அதிகரித்து வருகிறது.
ஈரோடு மாநகராட்சியில் கொரோனா பாதித்த பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு வீரப்பன்சத்திரம், பாப்பாத்திக்காடு, முனிசிபல் காலனி, அன்னை சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைத்து தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அந்த பகுதிகளில் மாநகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.
ஈரோடு:
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வர தொடங்கிய நிலையில், ஈரோடு மாவட்டத்தில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.
தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த சென்னை பெரு நகரமே நேற்று முன்தினம் தொற்று குறைந்து, 3-வது இடத்திற்கு சென்றது. இதனால், தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டோர் மாவட்டத்தில் 2-ம் இடத்தில் இருந்த கோவை முதலிடத்திற்கும், 3-ம் இடத்தில் இருந்த ஈரோடு 2-ம் இடத்தையும் பிடித்தது.
ஈரோடு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராமப்பகுதிகள் என அனைத்து பகுதிகளிலும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் பாதிப்பு தன்மைக்கேற்ப வீடுகளிலும், முகாம்களிலும் தனிமைப்படுத்தப்பட்டனர். அதிக பாதிப்புகள் உடையவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில், ஈரோடு மாநகராட்சி பகுதியில் தொற்று பரவாமல் இருந்த இடங்களில் புதிதாக தொற்று பரவ தொடங்கியுள்ளது. இதனால், ஒரே வீதி, தெருக்களில் 5-க்கும் மேற்பட்ட குடும்பத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டால் அப்பகுதி நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டது.
இதில் மேலும் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்ட அடுத்தடுத்து வசித்து வந்ததாக ஈரோடு முனிசிபல்காலனி அடுத்த பாப்பாத்திக்காடு, கருங்கல் பாளையம், வீரப்பன் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்ட தடுப்புகள் அமைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டது. இதில், பாப்பாத்திக்காடு பகுதியில் 9 பேருக்கு நேற்று ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் கூறியதாவது:-
ஈரோடு மாநகரில் கொரோனா தொற்றால் தினசரி 400 முதல் 420 பேர் பாதிக்கப்படுகின்றனர். அங்கு நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். தொற்றினை முன்னதாக கண்டறிய வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளோருக்கு அந்த பகுதியிலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
அதன்பேரில், நேற்று முன்தினம் 300 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் வீட்டிலேயே தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அங்கு தடுப்புகள் அமைத்து தனிமைப்படுத்தி வருகிறோம். இதன்பேரில்,நேற்று நிலவரப்படி ஈரோடு மாநகராட்சியில் 45 இடங்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவும், தினசரி சுகாதார பணியாளர்கள் மூலம் மருத்துவ ஆலோசனைகளும், மருந்துகளும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் காய்ச்சல் சளி உள்ளதா என மாநகர் பகுதியில் தினமும் 1.30 லட்சம் வீடுகளை 200 மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் 1200 தன்னார்வலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு:
ஈரோடு மாநகர் பகுதியில் காந்திஜி ரோடு, அரசு தலைமை மருத்துவமனை வளாகம், சூளை, சூரம்பட்டி, கொல்லம்பாளையம், சின்ன மார்க்கெட் பகுதி உள்பட 11 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
மற்ற உணவகங்களை விட இங்கு விலை குறைவு என்பதால் எப்போதும் அம்மா உணவகங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக ஏழை தொழிலாளர்கள், வறுமையில் உள்ள முதியவர்கள் அம்மா உணவகங்களில் வயிறார சாப்பிட்டு பசியாறி வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கு காலத்திலும் அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. உணவகங்களில் அமர்ந்து சாப்பிடுவதற்கு பதிலாக பார்சலில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது கொரோனா 2-ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக ஏராளமான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு ஆறுதலாக அம்மா உணவகங்கள் இருந்து வருகின்றன.
இந்த நிலையில் ஈரோடு மாநகர் பகுதியில் செயல்படும் 11 அம்மா உணவகங்களில் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.
வரும் 14-ந் தேதி ஊரடங்கு முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவசமாக பொதுமக்களுக்கு உணவு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு ஆகும் செலவை தெற்கு மாவட்ட தி.முக ஏற்றுள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தொடர் உற்பத்தி தொழிற்சாலைகள் தவிர மற்ற அனைத்தும் தொழிற்சாலைகள், விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில் நேற்று முதல் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ள தமிழக அரசு, ஏற்றுமதி நிறுவனங்கள் மட்டும் 10 சதவீத தொழிலாளர்களை கொண்டு இயங்கலாம் என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் ஈரோட்டில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பாகவே விசைத்தறி உரிமையாளர்கள் தாமாக முன்வந்து உற்பத்தியை நிறுத்தினர்.
ஒரு சில விசைத்தறி கூடங்கள் மட்டும் செயல்பட்டு வந்தது. பின்னர் அரசு ஊரடங்கு அறிவித்த பிறகு முழுமையாக மூடப்பட்டன. ஈரோட்டில் பெரியசேமூர், மாணிக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அரசின் கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறி விசைத்தறிகள் இயக்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் சென்றது.
இதையடுத்து நேற்று மாநகராட்சி அதிகாரிகள், வருவாய் துறையினர் பெரிய சேமூர் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 7 விசைத்தறி கூடங்கள் அரசின் உத்தரவை மீறி செயல்பட்டு வந்ததோடு தொழிலாளர்கள் முககவசம் இன்றி பணியாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து 7 விசைத்தறி கூடங்களுக்கும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்ததோடு அபராதமும் விதித்தனர். இந்நிலையில், அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்படும் விசைத்தறிகள் மற்றும் தொழிற்சாலைகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-ம் அலை வேகம் எடுத்துள்ளது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை தினசரி பாதிப்பில் 3-ம் இடத்தில் இருந்து வந்த ஈரோடு மாவட்டம் நேற்று சென்னையை பின்னுக்குத் தள்ளி 2-ம் இடம் பிடித்துள்ளது.
தினசரி பாதிப்பை போன்று தினசரி உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. முதலில் மாநகர் பகுதியில் வேகமாக பரவிய தொற்று தற்போது கொத்து, கொத்தாக, கிராமப்புற பகுதியில் தீவிரமாக பரவி வருகிறது. நேற்று சுகாதார துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் ஒரே நாளில் 1,694 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 66 ஆயிரத்து 274 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 2,078 பேர் நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமைடந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்து 347 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 10 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இதனால் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 435 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் 15 ஆயிரத்து 492 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
பவானி ஓடத்துறை ஊராட்சி, மேல் காலனி கிராமத்தில் 260 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயக் கூலித் தொழிலாளர்கள் நிறைந்த இந்த கிராமத்தில் 116 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்த கிராமத்தின் எல்லைகளின் 4 புறமும் சீல் வைக்கப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதிக்குள் வெளியாட்கள் நுழையவும், இங்கிருந்து வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வருவாய்த்துறை சார்பில் இந்த கிராமத்தில் உள்ள 260 குடும்பத்தினருக்கும் ஒரு வார காலத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, டீ தூள், காய்கறிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் சுகாதார துறையினர் அங்கு முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.
இதேபோல் சத்தியமங்கலம், அந்தியூர், கோபி உள்ளிட்ட ஊர்களில் உள்ள கிராம பகுதிகளிலும் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று மாநகர் பகுதியில் மட்டும் 420 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள 1,274 பேர் கிராமப்புற பகுதியை சேர்ந்தவர்கள் தான். கிராமப்புற பகுதியை சேர்ந்த பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முககவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-ம் அலை வேகம் எடுத்துள்ளது. சென்னை, கோவை போன்ற பெருநகரங்களுக்கு போட்டியாக ஈரோட்டில் தினசரி பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதே போல் தினமும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.
ஈரோட்டில் கடந்த 3 தினங்களாக தினசரி பாதிப்பு குறைந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் தினசரி பாதிப்பு திடீரென கூடியது. இந்நிலையில் நேற்று தினசரி பாதிப்பு சற்று குறைந்துள்ளது. சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் ஒரே நாளில் 1,569 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது நேற்று முன்தினத்தை விட 50 குறைவாகும். இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 64 ஆயிரத்து 596 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1,721 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 48 ஆயிரத்து 269 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் குணம் அடைந்து வருபவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதே நேரம் கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் கொரோனா எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதியவர்கள் அதிக அளவில் உயிரிழந்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 9 பெண்கள் உள்பட 24 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 425 ஆக உயர்ந்தது. தற்போது மாவட்டம் முழுவதும் 15 ஆயிரத்து 902 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்று பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக குறைய தொடங்கியுள்ளது. இருப்பினும் தினசரி உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மக்கள் அறிகுறி தென்பட்ட உடனேயே மருத்துவரை முறையாக அணுகி அதற்கான சிகிச்சைகள் பெறாதது தான்.
ஈரோடு மாநகர் பகுதியில் ஓரளவு மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளனர். ஆனால் கிராமப்புறங்களில் இன்னமும் காய்ச்சல், சளி இருந்தால் அருகிலுள்ள மருந்துக்கடைகளில் மருந்து வாங்கி சாப்பிடுகின்றனர். காய்ச்சல், சளி முற்றியதும் மருத்துவமனையை நாடுகின்றனர். இதனால் அவர்களை காப்பாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.
எனவே கிராமப் பகுதியைச் சேர்ந்தவர்கள் யாருக்காவது காய்ச்சல், சளி இருந்தால் உடனே தாமதிக்காமல் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இதேபோல் முககவசம், சமூக இடைவெளியை முறையாக கடைபிடியுங்கள் என அதிகாரிகள் கூறினர்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் நேற்று சுகாதார துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலின்படி, கோவையில் 2 ஆயிரத்து 810 பேரும், சென்னையில்1,971 பேரும், அதற்கு அடுத்தபடியாக ஈரோடு மாவட்டத்தில் புதிதாக மேலும் 1,619 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இவர்களில் சிலர் வீட்டு தனிமையிலும், சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 63 ஆயிரத்து 27 ஆக உயர்ந்தது.
இதற்கிடையில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த 80 வயது முதியவர் கடந்த மாதம் 5-ந்தேதியும், சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 53 வயது ஆண் 15-ந் தேதியும், ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 55 வயது ஆண் 20-ந்தேதியும், 65 வயது முதியவர், 35 வயது பெண் மற்றும் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது மூதாட்டி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 66 வயது மூதாட்டி ஆகியோர் கடந்த 25-ந் தேதியும் இறந்தனர்.
மேலும் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்து 47 வயது ஆண் கடந்த 29-ந் தேதியும், ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 63 வயது முதியவர் 31-ந்தேதியும், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 54 வயது ஆண் 2-ந்தேதியும், 68 வயது முதியவர் மற்றும் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 37 வயது ஆண் ஆகியோர் கடந்த 3-ந்தேதியும் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 401 ஆக உயர்ந்தது.
அதேநேரம் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 1,616 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 46 ஆயிரத்து 548 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர்.
இதேபோல் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்து உள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று உள்ள 16 ஆயிரத்து 78 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விசாரணையில் அவர்கள், சிவகங்கை மாவட்டம் மஜித் ரோடு 5-வது வீதியை சேர்ந்த செரிப் (வயது 28), கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமார் நகரை சேர்ந்த செந்தில் (37) ஆகியோர் என்பதும், இவர்கள் கர்நாடக மாநில மதுவை ரெயிலில் கடத்தி அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக ஈரோடு வழியாக கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர் மேலும் அவர்களிடம் இருந்த 68 கர்நாடகா மாநில மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல், பெங்களூரு-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில், கர்நாடகா மதுபாட்டில்களை கடத்தி வந்த கர்நாடகா மாநிலம் பங்கார்பேட்டை சுபாஸ் நகரை சேர்ந்த சுதர்சன் (28), ஸ்ரீநாத் (39) ஆகியோரை ஈரோடு ரெயில்வே போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 145 மதுபான பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.






