என் மலர்tooltip icon

    ஈரோடு

    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் இன்று தொடங்கியது
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் இன்று தொடங்கியது

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவி லில் ஆண்டு தோறும் மாசி மாதம் குண்டம் திருவிழா நடந்து வருகிறது. 

    இந்தாண்டுக்கான குண்டம் விழா நேற்று (திங்கட் கிழமை) இரவு   பூச்சாட்டு விழாவுடன் தொடங் கியது. விழாவை யொட்டி பக்தர்கள் கோவிலுக்கு வந்து பூக்கள் வழங்கி தரிசனம் செய்தனர்.

    இதையொட்டி அதிகாலை முதலே தமிழக பக்தர்கள் மட்டுமின்று கர்நாடகா மாநில பக்தர் களும் ஏராளமானோர் கோவி லுக்கு வந்திருந்தனர். பெண் பக்தர்கள் கோவில் முன்பு விளக்கேற்றி வழிபட்டனர். மேலும் பக்தர்கள் குண்டம் வளர்க்கம் இடத்தில் உப்பு, மிளகு, மஞ்சள், குங்குமம் போட்டு பண்ணாரி யம்மனை தரிசனம் செய் தனர்.

    இதை தொடர்ந்து இன்று அதிகாலை அம்மனுக்கு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங் காரம் செய்யப் பட்டது.

    இதை தொடர்ந்து இன்று (புதன்கிழமை) இரவு பண் ணாரியம்மன் கோவிலில் இருந்து பண் ணாரியம்மன் மற்றும் சருகு மாரியம்மன் கோவில் சப்பரங்கள் திருவீதி உலா தொடங்குகிறது.

    இன்று இரவு சிக்கரசம்பாளையத்துக்கு அம்மன் சப்பரம் செல்கிறது. அங்கு இரவு தங்க வைக்கப் பட்டு நாளை காலை அங்கு இருந்து பல்வேறு கிராமங்களுக்கு அம்மன் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து வரும் 15-ந் தேதி வரை அம்மன் சப்பரம் புறப் பாடு நடக்கிறது.

    இதை தொடர்ந்து வரும் 21-ந் தேதி இரவு குண்டம் வளர்க்கப்படுகிறது. 22-ந் தேதி அதிகாலை கோவிலில் குண்டம் விழா நடக்கிறது. மேலும் 23-ந் தேதி இரவு புஷ்ப ரதமும், 24-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 25-ந் தேதி திருவிளக்கு பூஜையும், 28-ந் தேதி மறு பூஜையும் நடக்கிறது.
    மகளிர் தினத்தையொட்டி ஈரோட்டில் மகளிர் அஞ்சலகம் தொடக்கம்.
    ஈரோடு:

    மகளிர் தினத்தையொட்டி ஈரோட்டில் மகளிர் அஞ்சலகம் தொடக்கம்.

    சர்வதேச மகளிர் தினத் தையொட்டி தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மேற்கு மண்டலத்தில் 11 துணை அஞ்சல் அலுவலகங்கள் அனைத்து மகளிர் அஞ்சலகம் என அறிவிக்கப் படுகிறது.

    அதன்படி ஈரோடு கோட்டத்தில் ஈரோடு கிழக்கு துணை அஞ்சலகம் அனைத்து மகளிர் அஞ்சலகம் என அறிவிக் கப்பட்டுள்ளது. இனி இந்த அலுவலகத்தில் பெண் ஊழியர்கள் மட்டுமே பணியில் நியமிக்கப் படுவார்கள்.

    இந்த தபால் நிலையத் தில் உள்ள அனைத்து ஊழியர்களும், அதாவது துணை அஞ்சலக அதிகாரி, அஞ்சல் உதவியாளர், தபால் எடுத்து வருபவர் என அனைத்து பணி களையும் பெண்களே மேற் கொள்வார்கள்.

    இச்சூழலில் ஒரு மாதகால அஞ்சல் சேமிப்பு கணக்கு பிரசாரம், இந்திய தபால் 75 ஆண்டுகள் தீர்வு, பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்னும் தலைப்பில் அனைத்து வயது பெண்கள், பெண் குழந்தை களுக்கான அஞ்சல் சேமிப்பு கணக்குகள் திறப்பதை மையமாகக் கொண்டு தொடங்கப் பட்டுள்ளது. 

    அஞ்சல் ஆயுள் காப்பீடு மேளா, சிஎஸ்சி பரிவர்த்தனைகள், ஆதார் முகாம்களுடன் சிறப்பு கணக்கு திறப்பு முகாம் நடக்க உள்ளது என ஈரோடு அஞ்சல் கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம், தேர்த்திருவிழா நடைபெறுவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.
    அந்தியூர்:

    அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம், தேர்த்திருவிழா நடைபெறுவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே மிகவும் பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் மற்றும் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இக்கோவில் திருவிழாவை காண மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து பக்தர்கள் குண்டம் இறங்கி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி சாமி தரிசனம் செய்து செல்வார்கள். 

    இந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோவில் பண்டிகை நடை பெறவில்லை. இதனால் பக்தர்கள் பண்டிகை தினத்தன்று குண்டம் முன் நின்று சாமி தரிசனம் மட்டும் செய்து சென்றார்கள்.

    இதனை அடுத்து இந்த ஆண்டு கொரோனா பரவல் குறையத் தொடங்கியது. இதனால் பண்டிகை நடைபெறுவது குறித்து பத்ரகாளியம்மன் கோவில் அலுவலகத்தில் கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவி தலைமையில் வெங்கடாஜலம்  எம்.எல்.ஏ.,
    கோவில் உதவி ஆணை யாளர் அன்னக்கொடி, செயல் அலுவலர் சரவணன், பவானி டி.எஸ்.பி. கார்த்திகேயன், அந்தியூர் இன்ஸ்பெக்டர் மனோகரன், தாசில்தார் விஜயகுமார், அந்தியூர் பிரிவு இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலையில் கோவில் முதன்மை தாரர்கள் மற்றும் சுகாதா ரத்துறை, தீயணைப்பு துறை தொலைத்தொடர்புத் துறை, காவல்துறை மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

    இதில் பண்டிகை நடத்துவது குறித்தும், கொரோனா விதி முறைகளை கடைப்பிடித்து பண்டிகை நடத்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகள் பண்டிகை நடைபெறாததால் இந்த ஆண்டு பண்டிகை நடைபெறும் என்று அந்தியூர் பகுதி மக்களும், பக்தர்களும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    கோபி அருகேஇளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோபி:

    கோபி அருகேஇளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    திருப்பூர் மாவட்டம் அவினாசி காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி தமிழ் செல்வி (23). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் தமிழ் செல்வி சம்பவத்தன்று கோபி அருகே உள்ள கெட்டி செவியூர் பகுதியில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு வந்தார். அவர் திடீரென வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டின் விட்டத்தில் துப்பட்டவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதை கண்ட அக்கம் பக் கத்தினர் போலீ சாருக்கு தகவல் கொடுத் தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தமிழ் செல்வி உடலை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் என்ன காரணத் துக்காக தற்கொலை செய்து கொண்டார்? எனபது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பர்கூர் மலைப்பகுதியில் மாடுகளுக்கு தீவனம் வெட்ட சென்ற விவசாயியை கரடி தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இந்த மலைப்பகுதியில் மான், கரடி, யானை, செந்நாய் உள்பட ஏராளமான வன விலங்குகள் உள்ளன.

    இந்த நிலையில் பர்கூர் வனப்பகுதியையொட்டி உள்ள சோழகனை செட்டில்மென்ட் பகுதியை சேர்ந்தவர் ஈறையன் (50). விவசாயி. இவர் மாடுகளை வளர்த்து வருகின்றார். நேற்று மாலை அவர் சோளக்கணை செட்டில்மெண்ட் பகுதியில் மாடுகளுக்கு தீவனம் வெட்டுவதற்கு காப்புக்காடு என்ற பகுதிக்கு சென்றார்.

    அப்போது அந்த பகுதியில் கரடி ஒன்று வந்தது. அதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் தப்பிக்க முயன்றார். ஆனால் ஈறையனை அந்த கரடி திடீரென தாக்கியது. இதனால் அவர் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் வந்து கரடியை போராடி விரட்டினர். இதில் அவர் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.

    இது குறித்து பர்கூர் வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பர்கூர் வனச் சரக அலுவலர் மணிகண்டன், வனவர் அருண்குமார் ஆகியோர் தலைமையில் வனக்காவலர் வெங்கடேசன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    அவர்கள் படுகாயம் அடைந்த ஈறையனை மீட்டு பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கொடுமுடி அருகே ஆடு திருடிய வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
    கொடுமுடி:

    கொடுமுடி அருகே உள்ள சிட்டப்புள்ளாபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (31). இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். 

    சம்பவத்தன்று ஆடுகளை வழக்கம் போல் பட்டியில் கட்டி வைத்து விட்டு வீட்டுக்குள் தூங்கி கொண்டு இருந்தார். 

    அப்போது நாய்கள் குறைக்கும் சத்தம் கேட்டது. அவர் வெளியே வந்து பார்த்தார். 

    அப்போது வாலிபர் ஒருவர் வீட்டின் அருகே ஒரு ஆட்டை திருடி கொண்டு தனது பைக்கில் வைத்து கொண்டு தப்பிக்க முயன்றார்.

    உடனே ராஜேஸ்குமார்  அவரை பிடித்து கொண்டு திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். அக்கம் பக்கம் இருந்தவர்கள் அங்கு வந்து அந்த வாலிபரை படித்து கொடுமுடி போலீசில் ஒப்படைத்தனர். 

    போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் கரூர்   ராஜிவ் காந்தி நகரை சேர்ந்த ராஜேஷ் (36) என தெரிய வந்தது. போலீசார் அவர் மீது வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ணாரி கோவில் குண்டம் விழாவுக்கு மாட்டு வண்டிகளில் வருவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் மனு கொடுத்தனர்.
    சத்தியமங்கலம்:

    பண்ணாரி கோவில் குண்டம் விழாவுக்கு மாட்டு வண்டிகளில் வருவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் மனு கொடுத்தனர்.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா ஆண்டு தோறும்  நடைபெற்று வருகிறது. இதில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். 

    இந்த நிலையில் இந்தாண்டுக்கான குண்டம் விழா இன்று இரவு பூச்சாட்டு விழாவுடன் தொடங்குகிறது. வரும் 22&ந் தேதி பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் இறங்கும் திருவிழா நடக் கிறது.

    இதில்  ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்து கிறார்கள். விழவை யொட்டி ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மாட்டு வண்டிகளில் கோவிலுக்கு வந்து குண்டம் இறங்கி நேர்த்திகடன் செலுத் துவார்கள். தொடர்ந்து மாடுகளையும் குண்டம் இறங்க செய்வார்கள்.

    இந்த நிலையில் திம்பம் மலைபாதையில் இரவு நேர போக்குவரத்து தடை உள்ளதால் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் விதமாக குண்டம் திருவிழாவின் போது மாட்டுவண்டிகளில் வர அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சத்திய மங்கலம், பவானிசாகர், கோபி செட்டிபாளையம், புளியம்பட்டி, அன்னூர், சரவணம்பட்டி உள்பட பல்வேறு  பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கோபி செட்டிபாளையம் கோட்டாச்சியர் பழனிதேவியிடம் மனு கொடுத்தனர்.

    அதில் பண்ணாரியம்மன் கோவில் குண்டம்  விழா வரும் 22&ந் தேதி நடக்கிறது.  விழாவுக்கு பக்தர்கள் மற்றும் விவசாயிகள் மாட்டு வண்டிகளில் வருவது வழக்கம்.  

    எனவே விழாவுக்கு  மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளில் விவசாயிகள் வருவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
    பவானிசாகர் அணையில் நீர்வரத்தை காட்டிலும் அணையில் இருந்து பாசனத்துக்காகவும் குடிநீருக்காகவும் அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது
    ஈரோடு:

     பவானிசாகர் அணையில் நீர்வரத்தை காட்டிலும் அணையில் இருந்து பாசனத்துக்காகவும் குடிநீருக்காகவும் அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. 

    கடந்த சில நாட்களாகவே நீர்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது.

    மேலும் நீர்வரத்தை காட்டிலும் அணையில் இருந்து பாசனத்துக்காகவும் குடிநீருக்காகவும் அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. 

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 91.91 அடியாக இருந்தது. 

    அணைக்கு விநாடிக்கு 1055 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு  500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப் பட்டு வருகிறது. 

    இதேபோல் குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2300 கன அடி வீதம் என மொத்தம் 3000 கன அடி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. 
    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 85 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு  மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 85 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். 

    பலர் உயிரிழந்தனர். இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. 

    அதன் பயனாக மாவட்டத்தில் பாதிப்பு குறைய தொடங்கியது. இந்நிலையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம் அடைந்தது.
     
    இந்நிலையில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று மாவட்டத்தில் வேகமாகப் பரவி மூன்றாவது அலையை ஏற்படுத்தியது. இதில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலர் பாதிக்கப்பட்டனர். 

    தினசரி பாதிப்பு ஆயிரத்து 400 வரை உயர்ந்தது. முதியவர்கள் பலர் உயிரிழந்தனர். தாக்கத்தை குறைக்கும் வகையில் மாவட்டத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

    தினசரி கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டு தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் நோயின் தன்மைக்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட்டது. 

    மூன்றாவது அலையில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறியே இருந்ததால் அவர்கள் மருத்துவர்களின் பரிந்துரைபடி வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று குணம் அடைந்தனர். 

    இந்நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி, 15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி மாவட்டத்தில் தீவிரப்படுத்தப்பட்டது. 

    இதன் காரணமாக மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. 

    குறிப்பாக கடந்த ஒரு மாதமாக தினசரி பாதிப்பு ஒவ்வொரு நாளும் குறைந்து வருகிறது. 

    நேற்று முன்தினம் ஆயிரம் பேருக்கு மேற்கொண்ட சோதனையில் வெறும் 4  பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 641 ஆக உயர்ந்துள்ளது. 

    ஒரே நாளில் பாதிப்பிலிருந்து 23 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

    மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்து  822 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 85 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    மாவட்டத்தில் பாதிப்பு குறைந்து விட்டதால் மக்களிடம் கொரோனா பற்றிய அச்சம் குறைந்து விட்டது. பெரும்பாலான பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முக கவசம் அணிந்து வருவதில்லை. இதேப்போல் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடை பிடிப்பதும் இல்லை. 

    மக்கள் இந்த விஷயத்தில் அலட்சியமாக இருக்கக் கூடாது என்றும் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என சுகாதாரத் துறையினர் வலியுறுத்தி உள்ளனர். 

    இதேபோல் காய்ச்சல் சளி இருந்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
    பெருந்துறையில் மனைவி மற்றும் மகனை கொலை செய்ய முயன்ற டிரைவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்
    பெருந்துறை:

    பெருந்துறையில் மனைவி மற்றும் மகனை கொலை செய்ய முயன்ற டிரைவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

    பெருந்துறை கருமாண்டி செல்லி பாளையம், வெள்ளியம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெக நாதன். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கு திருமணமாகி பவித்ரா (24). என்ற மனைவியும், சுதர்சன் (6) மகனும், தர்ஷினி (1)என்ற மகளும் உள்ளனர். ஜெகநாதன் வீட்டிற்கு சரியாக வராமல் இருந்து வந்துள்ளார். மேலும் வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்தார்.

    இதனால் பவித்ரா தனது 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு பெற்றோரின் வீட்டின் அருகே தனியாக குடியிருந்து வருகிறார்.  மேலும் ஜெகநாதன் அடிக்கடி வேறு ஒரு பெண்ணுடன் போனில் பேசிக்கொண்டு இருந்தார். 

    இது தொடர்பாக பவித்ராவுக்கும், ஜெகநாத னுக்கு இடையே  தகராறு ஏற்பட்டு வந்தது. இதே போல் தகராறு ஏற்பட்ட போது ஜெகநாதன் மகன் சுதர்சனின் கழுத்தில் காலை வைத்து கொல்ல முயற்சித்துள்ளார்.

    இதனை கண்ட பவித்ரா சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவனை காப்பாற் றினர்.  பின்னர் அவர்கள் ஜெகநாதனை சத்தம் போட்டு வீட்டை விட்டு வெளியேற்றினர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் வீட்டிற்கு வந்த ஜெகநாதன் மனைவியை திட்டி சண்டை போட்டுள்ளார். பின்னர் துப்பட்டாவை எடுத்து மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளார். 

    பவித்ரா சத்தம் போடவே அவரது பெற்றோர் விரைந்து வந்து பார்த்தபோது பவித்ரா மயங்கி கிடந்தார். ஜெகநாதன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். 

    உடனடியாக பவித்ராவை அவரது பெற்றோர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இது குறித்து பவித்ரா கொடுத்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகநாதனை தேடி வந்தனர். 

    இந்த நிலையில் பெருந்துறை போலீசாருக்கு ஜெகநாதன் திருப்பூர் அடுத்துள்ள இடுவாய் பகுதியில் உள்ள அவரது தங்கை வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

    உடனடியாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெகநாதனை கைது செய்து பெருந்துறை கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். 

    நீதிபதி அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் அவர் கோபி சிறையில் அடைக்கப்பட்டார்.
    குண்டேரிப்பள்ளம் வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேரை வனத்துறையினர் கைது செய்து துப்பாக்கி, தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.
    டி.என்.பாளையம்:

    குண்டேரிப்பள்ளம் வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேரை கைது செய்து துப்பாக்கி, தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு மாவட்டம் டி.என். பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட குண் டேரிப்பள்ளம் அணை பகுதியில் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதி உள்ளது. 

    இங்கு ஏராளமான மான், யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்த வனப்பகுதியில் சிலர் துப்பாக்கியுடன் வன  விலங்குகளை வேட்டையாட சுற்றி திரிவதாக டி.என்.பாளையம் வனச்சரகர் கணேஷ் பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து வனச்சரகர் தலைமையிலான வனத்துறையினர் குண்டேரிப்பள்ளம் அணை அருகே உள்ள வனப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் துப்பாக்கியுடன் இரண்டு 2 பேர் சுற்றி திரிவதை கண்ட வனத்துறையினர், அந்த அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    அதைத்தொடர்ந்து பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள்  கொங்கர்பாளையத்தை சேர்ந்த சங்கர் (36), வினோபாநகரை சேர்ந்த குமார் (25) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரும் வனப்பகுதியில் உள்ள மான் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டை யாடுவதற்காக வனப்பகுதிக்கு துப்பாக்கியுடன் வந்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் இருந்து நாட்டு துப்பாக்கி, தோட்டா மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வேட்டைக்கு பயன்படுத்தும் டார்ச் லைட் உள்ளிட்ட பொருட்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட பேரையும் வனத் துறையினர்  நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தி சிறை யில் அடைக்க உள்ளனர்.

    சட்ட விரோதமாக வனவிலங்குகளை வேட்டையாட எவ்வாறு துப்பாக்கி களை தயார் செய்கின்றனர் என்பது குறித்து வனத்துறையினர் கூறும் போது, நாட்டு துப்பாக்கியின் பழைய மாடல்களை வைத்து லேத் வொர்க் செய்து வைத்துக் கொண்டு வனவிலங்குகளை வேட்டை யாட பயன்படுத்து வதோடு, ஒரே இடத்தில் தான் இதுபோன்ற சட்ட விரோத மாக நாட்டு துப்பாக்கி தயார் செய்யப் பட்டு பயன்படுத்தி வருகின் றனர் என்றனர்.

    மேலும் அவர்களை காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே வன விலங்குகளை வேட்டை யாடும் கும்பலை முழுமையாக கண்டறிய வாய்ப்பு உள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சித்தோடு:

    கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு மோசிகீரனார்  சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மனைவி மாது என்கிற மாதேஸ்வரி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி விட்டது.

    இவர்களது 3&வது மகள் மணிபாலாவுக்கும் சித்தோடு முதலியார் வீதியை சேர்ந்த கணேசன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு கை குழந்தை உள்ளது.

    இந்நிலையில் சம்பவத்தன்று கணேசன்  மற்றும் மணிமாலாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனால் மனம் உடைந்த  காணப்பட்ட மணிமாலா சித்தோட்டில் உள்ள அவரது வீட்டில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு கொண்டார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். 

    அங்கு சிகிச்சை பலனின்றி மணிமாலா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ×