என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் இன்று தொடங்கியது
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் இன்று தொடங்கியது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவி லில் ஆண்டு தோறும் மாசி மாதம் குண்டம் திருவிழா நடந்து வருகிறது.
இந்தாண்டுக்கான குண்டம் விழா நேற்று (திங்கட் கிழமை) இரவு பூச்சாட்டு விழாவுடன் தொடங் கியது. விழாவை யொட்டி பக்தர்கள் கோவிலுக்கு வந்து பூக்கள் வழங்கி தரிசனம் செய்தனர்.
இதையொட்டி அதிகாலை முதலே தமிழக பக்தர்கள் மட்டுமின்று கர்நாடகா மாநில பக்தர் களும் ஏராளமானோர் கோவி லுக்கு வந்திருந்தனர். பெண் பக்தர்கள் கோவில் முன்பு விளக்கேற்றி வழிபட்டனர். மேலும் பக்தர்கள் குண்டம் வளர்க்கம் இடத்தில் உப்பு, மிளகு, மஞ்சள், குங்குமம் போட்டு பண்ணாரி யம்மனை தரிசனம் செய் தனர்.
இதை தொடர்ந்து இன்று அதிகாலை அம்மனுக்கு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங் காரம் செய்யப் பட்டது.
இதை தொடர்ந்து இன்று (புதன்கிழமை) இரவு பண் ணாரியம்மன் கோவிலில் இருந்து பண் ணாரியம்மன் மற்றும் சருகு மாரியம்மன் கோவில் சப்பரங்கள் திருவீதி உலா தொடங்குகிறது.
இன்று இரவு சிக்கரசம்பாளையத்துக்கு அம்மன் சப்பரம் செல்கிறது. அங்கு இரவு தங்க வைக்கப் பட்டு நாளை காலை அங்கு இருந்து பல்வேறு கிராமங்களுக்கு அம்மன் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து வரும் 15-ந் தேதி வரை அம்மன் சப்பரம் புறப் பாடு நடக்கிறது.
இதை தொடர்ந்து வரும் 21-ந் தேதி இரவு குண்டம் வளர்க்கப்படுகிறது. 22-ந் தேதி அதிகாலை கோவிலில் குண்டம் விழா நடக்கிறது. மேலும் 23-ந் தேதி இரவு புஷ்ப ரதமும், 24-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 25-ந் தேதி திருவிளக்கு பூஜையும், 28-ந் தேதி மறு பூஜையும் நடக்கிறது.
Next Story






