என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை
கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சித்தோடு:
கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மோசிகீரனார் சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மனைவி மாது என்கிற மாதேஸ்வரி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி விட்டது.
இவர்களது 3&வது மகள் மணிபாலாவுக்கும் சித்தோடு முதலியார் வீதியை சேர்ந்த கணேசன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு கை குழந்தை உள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று கணேசன் மற்றும் மணிமாலாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் மனம் உடைந்த காணப்பட்ட மணிமாலா சித்தோட்டில் உள்ள அவரது வீட்டில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு கொண்டார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மணிமாலா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






