என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    குண்டம், தேர்த்திருவிழா நடைபெறுவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை

    அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம், தேர்த்திருவிழா நடைபெறுவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.
    அந்தியூர்:

    அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம், தேர்த்திருவிழா நடைபெறுவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே மிகவும் பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் மற்றும் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இக்கோவில் திருவிழாவை காண மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து பக்தர்கள் குண்டம் இறங்கி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி சாமி தரிசனம் செய்து செல்வார்கள். 

    இந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோவில் பண்டிகை நடை பெறவில்லை. இதனால் பக்தர்கள் பண்டிகை தினத்தன்று குண்டம் முன் நின்று சாமி தரிசனம் மட்டும் செய்து சென்றார்கள்.

    இதனை அடுத்து இந்த ஆண்டு கொரோனா பரவல் குறையத் தொடங்கியது. இதனால் பண்டிகை நடைபெறுவது குறித்து பத்ரகாளியம்மன் கோவில் அலுவலகத்தில் கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவி தலைமையில் வெங்கடாஜலம்  எம்.எல்.ஏ.,
    கோவில் உதவி ஆணை யாளர் அன்னக்கொடி, செயல் அலுவலர் சரவணன், பவானி டி.எஸ்.பி. கார்த்திகேயன், அந்தியூர் இன்ஸ்பெக்டர் மனோகரன், தாசில்தார் விஜயகுமார், அந்தியூர் பிரிவு இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலையில் கோவில் முதன்மை தாரர்கள் மற்றும் சுகாதா ரத்துறை, தீயணைப்பு துறை தொலைத்தொடர்புத் துறை, காவல்துறை மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

    இதில் பண்டிகை நடத்துவது குறித்தும், கொரோனா விதி முறைகளை கடைப்பிடித்து பண்டிகை நடத்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகள் பண்டிகை நடைபெறாததால் இந்த ஆண்டு பண்டிகை நடைபெறும் என்று அந்தியூர் பகுதி மக்களும், பக்தர்களும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    Next Story
    ×