என் மலர்
ஈரோடு
கட்டிட பொருட்களை திருடிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
கட்டிட பொருட்களை திருடிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னிமலை அடுத்த ஈங்கூர் ரோடு முருங்கை காடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (42).
இவர் ஈரோடு பி.பி.அக்ரஹாரம் அடுத்த பாட்சாயே தோட்டம் பகுதியில் காண்டிராக்டர் வேலை செய்து வருகிறார். இதற்காக கட்டிடப் பொருட்கள் அங்கு போட்டு வைத்திருந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக காவலாளி இரவு நேர சாப்பாட்டுக்கு சென்று விட்டு வந்து பார்க்கும் போது கட்டிட பொருட்கள் மாயமாகி இருப்பது தெரியவந்தது.
யாரோ மர்ம நபர் ஆட்கள் இல்லாத நேரத்தில் நோட்டமிட்டு கைவரிசை காட்டி வந்தனர்.
சம்பவத்தன்று இரவும் 4 சென்ட்ரிங் பைப்புகள் திருடு போயிருந்தது.
நேற்று காலை மோட்டார்சைக்கிளில் 2 பேர் அந்த சென்ட்ரிங் பைப்புகளை வைத்து கொண்டு சென்றதை கோவிந்தராஜ் பார்த்தார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த மோட்டார் சைக்கிளை மடக்கி பிடித்தனர்.
ஆனால் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
பின்பகுதியில் உட்கார்ந்து வந்த ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த கவுதம் (21) என்பவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவரை கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில் கவுதம் திருடியதை ஒப்புக்கொண்டார்.
திருடிய பொருட்களை ஆர்.என்.புதூரில் உள்ள சந்திரசேகர் என்பவரின் பழைய இரும்பு பொருட்கள் கடையில் போட்டு பணம் வாங்கி வந்ததை ஒப்புக்கொண்டார்.
மேலும் தப்பி சென்ற அவர் பெயர் வசந்த் என்றும் கூறினார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறையில் ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறையில் ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெருந்துறை அக்ரஹார வீதியை சேர்ந்த ஜானி பாட்ஷா. இவரது மனைவி குர்ஷிதா பேகம் (வயது 65). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
குர்ஷிதா பேகம் தினமும் காலை மார்க்கெட்டுக்கு சென்று காய்கறிகளை வாங்கி வீட்டிற்கு வருவது வழக்கம். இதேபோன்று சம்பவத்தன்று காய்கறிகளை வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
ஈரோடு ரோட்டையும் அக்ரஹார வீதியையும் இணைக்கும் குறுக்கு சந்து வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர் கழுத்தில் அணிந் திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர்.
குர்ஷிதா பேகம் சங்கிலியை கைகளில் பிடித்து கொண்டதால் பாதி சங்கிலி அறுந்து மர்மநபர் கைகளிலும், மீதி சங்கிலி இவர் கைகளிலும் சிக்கியது. பாதி சங்கிலியை பறித்து கொண்ட மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர்.
பின்னர் இது தொடர்பாக குர்ஷிதா பேகம் பெருந் துறை போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பவானி அருகே மின்கம்பி அறுந்து விழுந்து வாழைதோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 ஆயிரம் மதிப்பிலான வாழைகள் சேதமானது.
பவானி:
பவானி அருகே மின்கம்பி அறுந்து விழுந்து வாழைதோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 ஆயிரம் மதிப்பிலான வாழைகள் சேதமானது.
பவானி அருகே உள்ள ஜம்பை மாமரத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (36).
இவருக்கு செந்தமான வாழைத்தோட்டம் ஜம்பை& சத்தி மெயின் ரோட்டில் உள்ளது.
இந்நிலையில் சம்பவத் தன்று மாலை திடீரென கார் மேகம் சூழ்ந்து பலத்த காற்று வீசியது.
இதனால் தோட்டத்தின் வழியே சென்ற மின்கம்பி அறுந்து விழுந்து.
இதனால் காய்ந்த நிலையில் உள்ள வாழை சருகின் மீது பட்டதால் தீ பற்றியது.
உடனே இது குறித்து பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் நிலைய அலுவலர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவயிடத்திற்கு சென்று தீயை மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.
தீ விபத்தில் சுமார் 5 ஆயிரம் மதிப்பிலான வாழைகள் சேதம் அடைந்தது.
ஈரோடு விற்பனைக்குழு- பெருந்துறை ஒழுங் குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம், ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் மின்னணு பணப்பரிவர்த்தனை விழிப்புணர்வு முகாம் ஆகியவற்றினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
ஈரோடு:
ஈரோடு விற்பனைக்குழு- பெருந்துறை ஒழுங் குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம், ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் மின்னணு பணப்பரிவர்த்தனை விழிப்புணர்வு முகாம் ஆகியவற்றினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியதாவது:-
ஈரோடு விற்பனைக் குழுவில் செயல்படும் 18 ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் ஈரோடு மாவட்ட த்தின் முக்கிய வணிகப் பயிர்களில் ஒன்றான மஞ்சளுக்கு என பெருந்துறை வட்டம் கருமாண்டி செல்லி பாளையம் பேரூராட்சியில் 15,200 மெ.டன் கொள்ளளவு உடைய கிடங்குகள், மஞ்சள் தரம் பிரிப்பு மையம் சூரிய உலர்த்தி மற்றும் நவீன சோதனைக் கூடங்களை உள்ளடக்கிய தரம் உயர்த்தப்பட்ட ஒருங்கிணைந்த மஞ்சள் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது.
புவிசார் குறியீடு பெற்றதும் உலகளவில் புகழ் பெற்றதுமான ஈரோடு மஞ்சளை இந்தியா முழுவதும் சந்தைப்படுத்திடவும் மின்னணு முறையில் ஏலம், மின்னணு பரிவர்த்தனை ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையிலும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டம் மூலம் மஞ்சள் ஏலம் நடத்தப்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டம் சந்தை திட்ட பயன்பாட்டினை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இடையே பரவலாக்கம் செய்திடும் வகையிலும் தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டம் செயலி பயன்படுத்துவதில் உள்ள இடர்பாடுகளைகளையும் வகையிலும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஒருங்கிணைந்ததிறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் மின்னணு பணப்பரிவர்த் தனை விழிப்புணர்வு முகாம் ஆகியவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஈரோடு மாவட்டத்தில் சுமார் 10,500 ஏக்கர் அளவில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. தென்னை விளையும் பரப்பினை கருத்தில் கொண்டும் தென் னை விவசாயிகள் தங்களது வினைபொருட்களுக்கு போதிய விலை கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றை சந்தை படுத்துவதில் ஏற்படும் போக்குவரத்து செலவுகள் மற்றும் காலவிரயம் ஆகியவற்றை குறைக்கும் வகையிலும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் இதனை பயன்படுத்திகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தீ பந்தம் நிகழ்ச்சியில் ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
ஈரோடு மாவட்டம் சிவகிரியில் பழமை வாய்ந்த பொன்காளியம்மன் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் பங்குனி மாதம் இக்கோவிலில் பொங்கல் விழா நடைபெறும். அதன்படி இந்தாண்டு பொங்கல் விழா கடந்த 15-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து தினசரி பொன்காளியம்மனுக்கு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்று வந்தன. 20-ந் தேதி வேலாயுத சுவாமி கோவிலில் இருந்து பொன் காளியம்மன் கோவிலுக்கு அம்மன் அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து நேற்று பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து பூஜை செய்து வழிபட்டனர். அதனை தொடர்ந்து நள்ளிரவு 1 மணி அளவில் குதிரை துள்ளல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதை தொடர்ந்து அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. அப்போது கோவிலை சுற்றி உள்ள நான்கு சாலைகளிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தும் வகையில் சிறியவர் முதல் பெரியவர் வரை கைகளில் தீ பந்தம் ஏந்தி அம்மனை வழிபட்டனர்.
இந்த தீ பந்தம் நிகழ்ச்சியில் ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து தினசரி பொன்காளியம்மனுக்கு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்று வந்தன. 20-ந் தேதி வேலாயுத சுவாமி கோவிலில் இருந்து பொன் காளியம்மன் கோவிலுக்கு அம்மன் அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து நேற்று பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து பூஜை செய்து வழிபட்டனர். அதனை தொடர்ந்து நள்ளிரவு 1 மணி அளவில் குதிரை துள்ளல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதை தொடர்ந்து அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. அப்போது கோவிலை சுற்றி உள்ள நான்கு சாலைகளிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தும் வகையில் சிறியவர் முதல் பெரியவர் வரை கைகளில் தீ பந்தம் ஏந்தி அம்மனை வழிபட்டனர்.
இந்த தீ பந்தம் நிகழ்ச்சியில் ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப் பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
ஈரோடு:
பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப் பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதார மாக உள்ளது பவானி சாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
பவானிசாகர் அணை யின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாகவே நீர்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது.
மேலும் நீர்வரத்தை காட்டிலும் அணையில் இருந்து பாசனத்துக்காகவும், குடி நீருக்காகவும் அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப் பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப் படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 88.49 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 709 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதேபோல் குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கன அடியும் என மொத்தம் 700 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் “ஈரம் ஈரோடு” என்ற புதிய இணையதளத்தினை தொடங்கி வைத்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் “ஈரம் ஈரோடு” என்ற புதிய இணையதளத்தினை தொடங்கி வைத்தார்.
ஈரம் ஈரோடு என்ற இணையதளமானது ஈரோடு மாவட்டத்தில் உள்ள அணைகள், நீர் சேகரிப்பு கட்டமைப்புகள், தடுப்பணைகள் மற்றும் நீர்நிலைகள் ஆகியவற்றின் விபரங்களை அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் குளங்கள் சீரமைப்பு, மரம் நடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நடைபெற்று வரும் பணிகளான தடுப்பணை களின் கட்டுமான பணிகள், கீழ்பவானி அமைப்பை நவீனப்படுத்துதல், அத்தி க்கடவு அவிநாசிதிட்டம், பெரும்பள்ளம் ஓடை சீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் திட்டம், மொடக்குறிச்சி கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகியவற்றை பொதுமக்கள் https://eeramerode.in என்ற இணைப்பில் தாங்களே அறிந்து கொள்ளலாம்.
ஈரம் ஈரோடு என்ற இந்த இணையதளமானது ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மைமற்றும் தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை மற்றும் ஈரோடு மாநகராட்சி ஆகிய துறைகளின் செயல்பாடுகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பினை உள்ளடக்கி இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி), திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மதுபாலன் உள்படதொடர்புடையதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஈரம் ஈரோடு என்ற புதிய இணையதளத்தினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி), திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மதுபாலன் உள்பட பலர் உடன் உள்ளனர்.
பெருந்துறை அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த மயில்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
பெருந்துறை அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த மயில்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சீனாபுரத்தில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் நேற்று இரவு 7 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. விஷம் கலந்த உணவை சாப்பிட்டதால் மயில்கள் இறந்ததா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்பது குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை.
இதுகுறித்து திங்களூர் போலீசாருக்கும், பெருந்துறை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்த மயில்கள் உடல்களை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக எடுத்து சென்றனர். பிரேதப் பரிசோதனை முடிவில் தான் மயில்கள் எவ்வாறு இருந்தது என தெரியவரும்.
இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழாயொட்டி கிடா வெட்டி மக்கள் வழிபாடு செய்தனர்.
அந்தியூர்:
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழாயொட்டி கிடா வெட்டி மக்கள் வழிபாடு செய்தனர்.
அந்தியூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா பூச்சாட்டு விழாவுடன் தொடங்கி நடந்து வருகிறது.
விழாவையொட்டி அம்மனுக்கு தினமும் பால், தயிர், இளநீர் உள்பட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
தெர்டர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்து வருகிறார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசுரமர்த்தனம் என்கிற எருமைக் கிடா வெட்டும் விழா இன்று காலை நடந்தது. இதில் அந்தியூர் மற்றும் சற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து வரும் 6-ந் தேதி குண்டம் விழா நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்குகிறார்கள். 7-ந் தேதி தேர் திருவிழா நடக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் 30 மலைகிராம அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்பட உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் 30 மலைகிராம அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்பட உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலை கிராம பகுதிகளில் செயல்படும் அரசு பள்ளிகள், மலை கிராம வாழ்க்கை தரம் உயர்த்துவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கூடுதல் கலெக்டர் மதுபாலன் கூறியதாவது:&
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களில் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத் தப்பட உள்ளது. குறிப்பாக கல்வி, மருத்துவம், குடிநீர் ஆகியவற்றுக்கு முக்கி யத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது.
சமவெளி பகுதிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் திறனுக்கு இணையாக மலைகிராம மாணவர்கள் கல்வி திறனையும் மேம்படுத்த ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது.
மாவட்டத்தில் மலைக்கிராமங்களில் உள்ள 30 அரசு பள்ளிகளில் தலா ரூ.2 லட்சம் செலவில் மொத்தம் ரூ.60 லட்சம் செலவில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்பட உள்ளது. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சி.எஸ்.ஆர். நதி மூலம் இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இதேபோல் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் ஊரகப் பகுதிகளில் 100 இடங்களில் நர்சரி பண்ணைகள் அமைக்கப் பட உள்ளது. ஊராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் நர்சரி பண்ணைகள் அமைக்கப்பட்டு அந்தந்த பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழுவினரிடம் ஒப்படைக்கப்படும்.
மகளிர் சுய உதவிக் குழுவினர் நர்சரிகளை பராமரித்து நாற்றுகளை பொது மக்களுக்கு விற்று வருமானம் ஈட்டிக் கொள்ளலாம். இந்த நர்சரியில் முருங்கை கீரை, வகைகள் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்து கொண்ட நாற்றுகள் வழங்கப்படும். இதன் மூலம் அவரவர் வீடுகளிலேயே சமையலுக்கு தேவையான காய்கறி கீரைகளை தாங்களாகவே பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 15 வயது முதல் 18 வயதுடைய 70 ஆயிரத்து 730 சிறுவர்களுக்கு கொரோனா 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்
ஈரோடு:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டது.
முதலில் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன் பிறகு 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
பின்னர் 45 வயதுக்கு மேற்பட்ட பொது மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக கொரோனா தாக்கம் ஏற்பட்டாலும் லேசான அறிகுறிகளையே அவர்கள் குணம் அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வைரஸ் வேகமாக பரவியதால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து 12 முதல் 18 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது.
இதில் முதற்கட்டமாக 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி கடந்த ஜனவரி மாதம் தொடக்கத்தில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
ஈரோடு மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்கள் மொத்தம் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 161 பேர் உள்ளனர்.
இவர்களுக்கு அந்தந்த பள்ளியிலேயே கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 86,939 சிறுவர்களுக்கு கொரோனா முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது 83 சதவீதமாகும்.
இந்நிலையில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28 நாட்கள் கடந்த சிறுவர்களுக்கு 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி மாவட்டத்தில் இதுவரை 15 வயது முதல் 18 வயதுடைய 70 ஆயிரத்து 730 சிறுவர்களுக்கு கொரோனா 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இது 70.48 சதவீதமாகும்.
இதேப்போல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 16 லட்சத்து 32 ஆயிரத்து 244 பேர் செலுத்தி கொண்டுள்ளனர். இது 90.22 சதவீதமாகும்.
2-ம் தவணை தடுப்பூசியை இதுவரை மாவட்டத்தில் 12 லட்சத்து 87 ஆயிரத்து 872 பேர் செலுத்தியுள்ளனர். இது 71.99 சதவீதமாகும்.
2 தவணை தடுப்பூசி களையும் சேர்த்து மொத்தம் 29 லட்சத்து 20 ஆயிரத்து 116 பேர் செலுத்தி கொண்டதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் 12 முதல் 14 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
கோடை காலம் என்பதால் காட்டன் ரகங்களுக்கு கிராக்கி ஏற்பட் டுள்ளதாகவும், இன்னும் வரும் வாரங்களில் காட்டன் ரகங்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறினர்.
ஈரோடு:
ஈரோடு ஜவுளி சந்தை வாரந்தோறும் செவ்வாய் கிழமை நடைபெற்று வருகின்றது. ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வருவது வழக்கம்.
கொரோனா தாக்கம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், நூல் விலை உயர்வு போன்ற காரணமாக கடந்த சில வாரங்களாக விற்பனை மந்த நிலையில் இருந்து வந்தது.
குறிப்பாக மொத்த வியாபாரிகள் வராத நிலையில், சில்லரை வியாபாரம் மட்டுமே கை கொடுத்து வந்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற சந்தையில் மொத்த வியாபாரம் 40 சதவீதம் அளவுக்கு நடைபெற்றதால் ஜவுளி சந்தை வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதே அளவுக்கு சில்லரை வியாபாரமும் நடந்ததாக வியாபாரிகள் கூறினர்.
குறிப்பாக காட்டன் ரக சேலைகள், நைட்டிகள், லுங்கி, பனியன் உள்ளிட்டவைகளின் விற்பனை அமோகமாக நடைபெற்றதாகவும், காட்டன் ரக சேலைகள் பெரும்பாலும் விற்று தீர்ந்து விட்டதாக வியாபாரிகள் கூறினர்.
கோடை காலம் என்பதால் காட்டன் ரகங்களுக்கு கிராக்கி ஏற்பட் டுள்ளதாகவும், இன்னும் வரும் வாரங்களில் காட்டன் ரகங்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறினர்.






