என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாழைத்தோட்டத்தில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து அணைத்த காட்சி.
    X
    வாழைத்தோட்டத்தில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து அணைத்த காட்சி.

    மின்கம்பி அறுந்து விழுந்து வாழைதோட்டத்தில் தீ விபத்து

    பவானி அருகே மின்கம்பி அறுந்து விழுந்து வாழைதோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 ஆயிரம் மதிப்பிலான வாழைகள் சேதமானது.
    பவானி: 

    பவானி அருகே மின்கம்பி அறுந்து விழுந்து வாழைதோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 ஆயிரம் மதிப்பிலான வாழைகள் சேதமானது.

    பவானி அருகே உள்ள ஜம்பை மாமரத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (36). 

    இவருக்கு செந்தமான வாழைத்தோட்டம் ஜம்பை& சத்தி மெயின் ரோட்டில் உள்ளது.

    இந்நிலையில் சம்பவத் தன்று மாலை திடீரென கார் மேகம் சூழ்ந்து பலத்த காற்று வீசியது. 

    இதனால் தோட்டத்தின் வழியே சென்ற மின்கம்பி அறுந்து விழுந்து. 

    இதனால் காய்ந்த நிலையில் உள்ள வாழை சருகின் மீது பட்டதால் தீ பற்றியது.

    உடனே இது குறித்து பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

    தகவலின் பேரில் நிலைய அலுவலர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவயிடத்திற்கு சென்று தீயை மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.

    தீ விபத்தில் சுமார் 5 ஆயிரம் மதிப்பிலான வாழைகள் சேதம் அடைந்தது.
    Next Story
    ×