என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

    பெருந்துறையில் ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    பெருந்துறை:

    பெருந்துறையில் ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பெருந்துறை அக்ரஹார வீதியை சேர்ந்த ஜானி பாட்ஷா. இவரது மனைவி குர்ஷிதா பேகம் (வயது 65). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
     
    குர்ஷிதா பேகம் தினமும் காலை மார்க்கெட்டுக்கு சென்று காய்கறிகளை வாங்கி வீட்டிற்கு வருவது வழக்கம். இதேபோன்று சம்பவத்தன்று காய்கறிகளை வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். 

    ஈரோடு ரோட்டையும் அக்ரஹார வீதியையும் இணைக்கும் குறுக்கு சந்து வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த  2 பேர் அவர் கழுத்தில் அணிந் திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர்.

    குர்ஷிதா பேகம் சங்கிலியை கைகளில் பிடித்து கொண்டதால் பாதி சங்கிலி அறுந்து மர்மநபர் கைகளிலும், மீதி சங்கிலி இவர் கைகளிலும் சிக்கியது. பாதி சங்கிலியை பறித்து கொண்ட மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    பின்னர் இது தொடர்பாக குர்ஷிதா பேகம் பெருந் துறை போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×