என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரம் ஈரோடு என்ற புதிய இணையதளத்தினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.
    X
    ஈரம் ஈரோடு என்ற புதிய இணையதளத்தினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.

    ஈரம் ஈரோடு என்ற புதிய இணையதளம் வசதி

    ஈரோடு மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் “ஈரம் ஈரோடு” என்ற புதிய இணையதளத்தினை தொடங்கி வைத்தார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி  மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் “ஈரம் ஈரோடு”  என்ற புதிய இணையதளத்தினை தொடங்கி வைத்தார்.

    ஈரம் ஈரோடு என்ற இணையதளமானது ஈரோடு மாவட்டத்தில் உள்ள அணைகள், நீர் சேகரிப்பு கட்டமைப்புகள், தடுப்பணைகள் மற்றும் நீர்நிலைகள் ஆகியவற்றின் விபரங்களை அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் குளங்கள் சீரமைப்பு, மரம் நடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நடைபெற்று வரும் பணிகளான தடுப்பணை களின் கட்டுமான பணிகள், கீழ்பவானி அமைப்பை நவீனப்படுத்துதல், அத்தி க்கடவு அவிநாசிதிட்டம், பெரும்பள்ளம் ஓடை சீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் திட்டம், மொடக்குறிச்சி கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகியவற்றை பொதுமக்கள் https://eeramerode.in என்ற இணைப்பில் தாங்களே அறிந்து கொள்ளலாம்.

    ஈரம் ஈரோடு  என்ற இந்த இணையதளமானது ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மைமற்றும் தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை மற்றும் ஈரோடு மாநகராட்சி ஆகிய துறைகளின் செயல்பாடுகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பினை உள்ளடக்கி இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி), திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மதுபாலன் உள்படதொடர்புடையதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஈரம் ஈரோடு என்ற புதிய இணையதளத்தினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி), திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மதுபாலன் உள்பட பலர் உடன் உள்ளனர்.
    Next Story
    ×