என் மலர்tooltip icon

    ஈரோடு

    விபத்தில் 9-ம் வகுப்பு மாணவன் பவியானதை அடுத்து விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் செந்தில்குமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
    ஈரோடு:

    விபத்தில்  9-ம் வகுப்பு மாணவன்  பவியானதை அடுத்து விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் செந்தில்குமார்  என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    ஈரோடு பி.பி.அக்ரஹாரம் அன்னை சத்யா நகர், வி.ஜி.பி. நகரை சேர்ந்தவர் அலாவுதீன் பாஷா. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.  இதில்  மூத்த மகன் முகமது ரியாசுதீன் (வயது 14). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். 

    இந்நிலையில் நேற்று மாலை முகமது ரியாசுதீன் பள்ளி முடிந்து அக்ரஹாரம் வண்டிப் பேட்டையை கடந்து தனது வீட்டுக்கு சைக்கிளில் சென்று கொண்டி ருந்தார்.
     
    அப்போது முகமது ரியாசுதீனுக்கு பின்னால் அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக அரசு பஸ் ரியாசுதீன் சைக்கிள் மீது மோதியது.

    இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த முகமது ரியாசுதீன் மீது பஸ்சின் பின்புற சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே ரியாசுதீன் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கருங்கல் பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரியாசுதீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் செந்தில்குமார்(39) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே இன்று  ரியாசுதீன் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக் கப்பட்டது.உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    பவானி லட்சுமி நகர் பகுதியில் காரில் கடத்தி வரப்பட்ட 500 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    சித்தோடு:

    பவானி லட்சுமி நகர் பகுதியில் காரில் கடத்தி வரப்பட்ட 500 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பவானி அருகே உள்ள லட்சுமி நகர் சேலம்-கோவை பைபாஸ் சாலையில் சித்தோடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் கார் ஒன்றில் ஓசூரில் இருந்து திருப்பூர் கொண்டு செல்ல சுமார் 300 கிலோ முதல் 500 கிலோ எடை வரை குட்கா பொருட்கள் கொண்டு செல்லபடுவதாக சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முருகையன், சப்&இன்ஸ்பெக்டர் வடிவேல்குமார் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரின் உள்ளே சுமார் 500 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

    பின்னர் போலீசார் விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, சாலிகிராமம் பகுதியை சேர்ந்த மாதேசன் (32) என்பதும்,  விற்பனைக்காக தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாதேசனை கைது செய்தனர்.
     
    மேலும் அவரிடம் இருந்த 500 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    அணையில் இருந்து பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
    ஈரோடு:

    அணையில் இருந்து பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. 

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. 

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாகவே நீர்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. 

    மேலும் நீர்வரத்தை காட்டிலும் அணையில் இருந்து பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. 

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 88.50 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 723 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 

    அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும் என மொத்தம் 700 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    புங்கார் ஊராட்சியில் குடிநீர் சரிவர விநியோகிக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
    சத்தியமங்கலம்: 

    பவானிசாகர் அருகே உள்ளது புங்கார் ஊராட்சி. இந்த கிராமத்தில் சுமார் 800-க்கும்மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இவர்களுக்கு பவானி சாகர் அணையின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தண்ணீர் குறைந்த நேரம் மட்டுமே விநியோகம் செய்யப்படுவதாகவும், மேலும் குடிநீர் சரிவர விநியோகம் செய்யப்பட வில்லை என்றும் பொது மக்கள் குற்றம் சாட்டினர்.

    இது தொடர்பாக பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் பல முறை சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. 

    இதையடுத்து புங்கார் பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இன்று காலை காலி குடங்களுடன் திரண்டனர்.

    பின்னர்அவர்கள் பவானிசாகர்-புங்கார் மெயின்ரோட்டில் சாலை மறியல் செய்தனர். காலை 8 மணிக்கு சாலை மறியல் தொடங்கியதால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுப்பற்றி தெரிய வந்ததும் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியல் செய்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

    அப்போது அவர்கள் குடிநீர்  பிரச்சினை குறித்து புங்கார்ஊராட்சி மன்ற தலைவர்  ராஜேந்திரனிடம் பல முறை சொல்லியும்அவர் நடவடிக்கை எடுக்கவில்லை.  இதனால் எங்கள் பகுதியில் கடுமையான தண்ணீர் பிரச்சினை நிலவி வருகிறது. 

    எனவே குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.  
    ஊஞ்சலூர் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. இதில் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
    கொடுமுடி:

    ஊஞ்சலூர் மாரியம்மன்  கோவில் தேர் திருவிழா நடந்தது. இதில் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

    கொடுமுடி அருகே ஊஞ்சலூரில்  பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் குண்டம், தேர்  திருவிழா நடைபெறும்.

    இந்த ஆண்டு கடந்த 8-ந் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. அன்றைய தினமே கம்பம் நடுதல் நிகழ்ச்சியும் நடை பெற்றது.

    கடந்த 13-ந் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. தொடர்ந்து தினசரி அம்மன் திருவீதி உலா மற்றும் அம்மனுக்கு மஹா தீபாராதனை காட்டப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டு வந்தது.  23-ந் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நேற்று மாலை தேரை  ஊஞ்சலூர் கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ், கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். 

    முன்னதாக கிராம பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலரையும், கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டரையும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 

    இன்று மஞ்சள் நீராட்டுடன் பதினெட்டு நாள் குண்டம், தேர் திருவிழா நிறைவு பெற்றது.
    ஈரோடு மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவுபடி கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவுறுத்தல் படி அரசு நிலங்களில் நீண்ட காலமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டு வருகின்றன.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில்  நீதிமன்ற உத்தரவுபடி கலெக்டர் கிருஷ்ணனுண்ணி  அறிவுறுத்தல் படி  அரசு நிலங்களில் நீண்ட காலமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்டிடங்கள்  இடித்து அகற்றப்பட்டு வருகின்றன. 

    அதன்படி ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாலை புறம்போக்கு நிலத்தில் 6 வீடுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. 

    அந்த ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

    நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ராணி தலைமையில் வருவாய்த்துறையினர், நெடுஞ்சாலை துறையினர் மற்றும் போலீசார் உதவியோடு ஜே.சி.பி. எந்திரம் மூலம் அந்த 6 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள், பள்ளிகள் உட்பட 420 மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள், பள்ளிகள் உட்பட 420 மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

    கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத் துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக் கைகளை எடுத்து வருகின்றனர். 

    ஒவ்வொரு சனிக்கிழமையும் தமிழகத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி நாளை மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 

    ஈரோடு மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல், 2-ம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.  

    அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள், பள்ளிகள் உட்பட 420 மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

    இப்பணியில், 66 வாகனங்கள், 1,680 பணியா ளர்கள் ஈடுபடுகின்றனர். மேலும், 15 முதல், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி சிறப்பு முகாம்களில் நாளை செலுத்தப்படும். 

    இந்த வாய்ப்புகளை, பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    உல்லாச வீடியோ வெளியானதால் வாலிபர் அவமானத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாராவது அவரை கொலை செய்து உடலை தூக்கில் தொங்க விட்டார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள மெட்டல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் பசுவண்ணா (35). இவர் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்த நிலையில் இவர் ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ கடந்த வாரம் முகநூலில் வெளியானது. இதுப்பற்றி தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்த பசுவண்ணா மனம் உடைந்து காணப்பட்டார்.

    இந்த நிலையில் இவர் தனது தோட்டத்து வீட்டில் இன்று காலை பிணமாக தொங்கி கொண்டு இருப்பதாக தாளவாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    உல்லாச வீடியோ வெளியானதால் பசுவண்ணா அவமானத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாராவது அவரை கொலை செய்து உடலை தூக்கில் தொங்க விட்டார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் பசுவண்ணா பெண்ணுடன் உல்லாசமாக இருந்த போது அவரே தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்து இருந்தது தெரியவந்தது. அந்த வீடியோவை அவரது நண்பர் ஒருவர் முகநூலில் வெளியிட்டதும் தெரியவந்துது. எனவே அவர் யார்? என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பவானி கோர்ட்டில் தகாதவார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்த நெடுஞ்சாலைதுறை பெண் உதவி பொறியாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குள்ளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருக்கு பாட்டப்பன், குழந்தைவேல் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கிருஷ்ணன் தனது 2-வது மகன் குழந்தைவேலுக்கு தனக்கு சொந்தமான 3½ ஏக்கர் நிலத்தை கடந்த 1999-ம் ஆண்டு உயில் எழுதி வைத்தார்.

    இதையடுத்து சொத்தில் தங்களுக்கும் பங்கு கேட்டு பாட்டப்பன் தரப்பில் பவானி உரிமையியல் நீதிமன்றத்தில் கடந்த 2013-ம்ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு இந்த வழக்கில் குழந்தைவேலுக்கு சாதமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் பாட்டப்பனின் மகள் சந்திரா (55) என்பவர் தனது தந்தைக்கு ஆதரவாக நீதிமன்றத்துக்கு சென்று மனு கொடுத்தார். அந்த மனுக்கள் திருப்பி அனுப்ப பட்டது. ஆனாலும் சந்திரா அடிக்கடி கோர்ட்டுக்கு வந்து ஊழியர்களை பணிசெய்ய விடாமல் தகராறு செய்து வந்தார்.

    இதே போல் நேற்றும் சந்திரா பவானி கோர்ட்டுக்கு வந்து தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்தார். இதைடுத்து பவானி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற தலைமை எழுத்தர் சாந்தி என்பவர் பவானி போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திராவை கைது செய்தனர். கைதான சந்திரா கடலூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறார். கைதான சந்திரா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

    அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம்-தேர்த்திருவிழா நடை பெற உள்ளது. இதனையடுத்து 29-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியும், 30-ந் தேதி காலை 11 மணிக்கு கொடியேற்றும் நடைபெற உள்ளது.
    அந்தியூர்:

    அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம்-தேர்த்திருவிழா நடை பெற உள்ளது. இதனையடுத்து 29-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியும், 30&ந் தேதி காலை 11 மணிக்கு கொடியேற்றும் நடைபெற உள்ளது.

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே புகழ்பெற்ற பழமை யான பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறவில்லை.

    இந்த நிலையில் இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 17-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதனையடுத்து நேற்று மகிஷாசுர வர்தனம் எனும் எருமைக்கிடாய் வெட்டும் நிகழ்வு நடைபெற்றது. 

    இதனையடுத்து 29-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியும், 30-ந் தேதி காலை 11 மணிக்கு கொடியேற்றும் நடைபெற உள்ளது.

    அன்றைய தினத்திலிருந்து அம்மன் பூத வாகனம், நரி வாகனம், சிம்ம வாகனம், ஹம்ச வாகனம், யானை வாகனம், சட்டத் தேர் புஷ்ப பல்லாக்கு வாகனங்களில் தினந்தோறும் சாமி வீதி உலா அந்தியூர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். 

    இதனைத்தொடர்ந்து அடுத்த மாதம் 6&ந் தேதி காலை குண்டம் திருவிழா நடைபெற உள்ளது. 

    இதில் அந்தியூர், சங்கராபாளையம், புதுப்பாளையம், தவிட்டுப்பாளையம், சின்னத்தம்பி பாளையம், எண்ணமங்கலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து குண்டம் இறங்குவார்கள்.

    அதனைத்தொடர்ந்து 8-ந் தேதி மாலை தேர் திருவிழா தொடங்கி 11-ந் தேதி வரை அம்மன் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து தேர் நிலையை வந்து அடையும். 

    தொடர்ந்து 12-ந் தேதி பரிவேட்டை வெகு விமர்சையாக நடைபெறும். 13-ந் தேதி  வசந்தோற்சவம் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவுபெறும்.

    கொடுமுடி அருகே ஊஞ்சலூரில் காவிரி கரையோரம் மிகவும் பழமையான பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல், குண்டம் இறங்குதல், திருத்தேர் வடம்பிடித்தல் திருவிழா நடைபெறும்.
    கொடுமுடி:

    கொடுமுடி அருகே ஊஞ்சலூரில் காவிரி கரையோரம் மிகவும் பழமையான பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல், குண்டம் இறங்குதல், திருத்தேர் வடம்பிடித்தல் திருவிழா நடைபெறும். 

    இந்த ஆண்டும் கடந்த 8-ந்தேதி பூச்சாட்டுதலுடன் திருத்தேர்விழா தொடங்கி நடந்து வந்தது. அன்றைய தினமே கம்பம் நடுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

    அன்றிலிருந்து தினமும் பெண்கள் அதிகாலை காவிரி ஆற்றுக்கு சென்று நீராடி ஈர உடையுடன் குடத்தில் நீர் எடுத்து வந்து கம்பத்துக்கு ஊற்றி வழிபட்டு வருகின்றனர்.

    13-ந்தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. 14-ந்தேதி கொடியேற்றம், கிராம சாந்தி நடைபெற்றது. அதனை தொடர்ந்து தினமும் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. 

    இதையொட்டி பெண்கள் அனைவரும் வீடுகளில் இருந்து தட்டுகளில் பூக்கள் கொண்டு வந்து அம்மனுக்கு முன்பு கொட்டி வழிபட்டனர். 

    இதனை தொடர்ந்து அம்மனுக்கு மஹா தீபாராதனை காட்டப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. 

    சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் அன்று அம்மனை வழிபட்டனர். அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. 

    தொடர்ந்து நேற்று முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் அறுபது அடி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

    இந்நிகழ்ச்சியில் சுமார் 50-க்கு மேற்பட்டவர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி ஈர உடையுடன் கரகம் எடுக்கும் முறைதாரர் முன் வர கோவிலுக்கு வந்தனர். 

    கோவிலின் முன்புறம் அமைக்கப்பட்டு இருந்த குண்டத்தில் கரகம் எடுக்கும் முறைதாரர் முதலில் இறங்க அதனை தொடர்ந்து பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செய்தனர். இன்று மாலை திருத்தேர் வடம்பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    குளிப்பதை வீடியோவாக எடுத்து காட்டி மிரட்டி இளம்பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த வாலிபரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
    ஈரோடு:

    குளிப்பதை வீடியோவாக எடுத்து காட்டி மிரட்டி இளம்பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த வாலிபரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பாதிரன் கோட்டையை சேர்ந்தவர் கண்ணன் (வயது 29). திருமணமாக வில்லை. இவர் ஈரோடு சூரம் பட்டி வலசு அணைக்கட்டு பகுதியில் இறைச்சி கடை வைத்து ள்ளார். அங்கு தனியாக வீடு எடுத்து வசித்து வருகிறார்.

    அவரது எதிர்வீட்டில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த திருமணம் ஆகாத 26 வயது இளம்பெண் ஒருவர் தங்கியிருந்து  போட்டி தேர்வுக்கு படித்து வருகிறார். 

    சம்பவத்தன்று இளம்பெண் தனது வீட்டில் குளித்து கொண்டிருந்தார். அதனை கண்ணன் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டார்.

    இதனை கவனித்த அந்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கண்ணன் அந்த பெண்ணிடம் செல் போனை காண்பித்து இதில் நீ குளிப்பதையும், உடை மாற்றுவதையும் வீடியோவாக படம் எடுத்து வைத்திருக்கிறேன்.

    நான் கூப்பிடும் போதெல்லாம் நீ என் ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும் இல்லையென்றால் இந்த வீடியோவை சமூக வலைத் தளங்களில் போட்டு உன் மானத்தை வாங்கி விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

    மேலும் இது குறித்து வெளியே கூறினால் உன்னை கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன அந்த இளம்பெண் கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் கண்ணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து  அந்த இளம்பெண் சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 

    அதன்பேரில் போலீசார் வீட்டிற்குள் அத்துமீறி நுழைதல், பெண் குளிப்பதை ஆபாசமாக போட்டோ எடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த கண்ணனை கைது செய்தனர்.

    பின்னர் கண்ணன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஈரோடு கிளை  சிறையில் அடைக்கப்பட்டார்.
    ×