என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு சாலை மறியல் செய்த பொதுமக்கள்.
    X
    காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு சாலை மறியல் செய்த பொதுமக்கள்.

    குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

    புங்கார் ஊராட்சியில் குடிநீர் சரிவர விநியோகிக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
    சத்தியமங்கலம்: 

    பவானிசாகர் அருகே உள்ளது புங்கார் ஊராட்சி. இந்த கிராமத்தில் சுமார் 800-க்கும்மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இவர்களுக்கு பவானி சாகர் அணையின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தண்ணீர் குறைந்த நேரம் மட்டுமே விநியோகம் செய்யப்படுவதாகவும், மேலும் குடிநீர் சரிவர விநியோகம் செய்யப்பட வில்லை என்றும் பொது மக்கள் குற்றம் சாட்டினர்.

    இது தொடர்பாக பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் பல முறை சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. 

    இதையடுத்து புங்கார் பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இன்று காலை காலி குடங்களுடன் திரண்டனர்.

    பின்னர்அவர்கள் பவானிசாகர்-புங்கார் மெயின்ரோட்டில் சாலை மறியல் செய்தனர். காலை 8 மணிக்கு சாலை மறியல் தொடங்கியதால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுப்பற்றி தெரிய வந்ததும் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியல் செய்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

    அப்போது அவர்கள் குடிநீர்  பிரச்சினை குறித்து புங்கார்ஊராட்சி மன்ற தலைவர்  ராஜேந்திரனிடம் பல முறை சொல்லியும்அவர் நடவடிக்கை எடுக்கவில்லை.  இதனால் எங்கள் பகுதியில் கடுமையான தண்ணீர் பிரச்சினை நிலவி வருகிறது. 

    எனவே குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.  
    Next Story
    ×