என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    உல்லாச வீடியோ முகநூலில் வெளியானதால் வாலிபர் தற்கொலை
    X
    உல்லாச வீடியோ முகநூலில் வெளியானதால் வாலிபர் தற்கொலை

    தாளவாடியில் உல்லாச வீடியோ முகநூலில் வெளியானதால் வாலிபர் தற்கொலை

    உல்லாச வீடியோ வெளியானதால் வாலிபர் அவமானத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாராவது அவரை கொலை செய்து உடலை தூக்கில் தொங்க விட்டார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள மெட்டல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் பசுவண்ணா (35). இவர் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்த நிலையில் இவர் ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ கடந்த வாரம் முகநூலில் வெளியானது. இதுப்பற்றி தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்த பசுவண்ணா மனம் உடைந்து காணப்பட்டார்.

    இந்த நிலையில் இவர் தனது தோட்டத்து வீட்டில் இன்று காலை பிணமாக தொங்கி கொண்டு இருப்பதாக தாளவாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    உல்லாச வீடியோ வெளியானதால் பசுவண்ணா அவமானத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாராவது அவரை கொலை செய்து உடலை தூக்கில் தொங்க விட்டார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் பசுவண்ணா பெண்ணுடன் உல்லாசமாக இருந்த போது அவரே தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்து இருந்தது தெரியவந்தது. அந்த வீடியோவை அவரது நண்பர் ஒருவர் முகநூலில் வெளியிட்டதும் தெரியவந்துது. எனவே அவர் யார்? என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×