என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
வாலிபர் சிறையில் அடைப்பு
குளிப்பதை வீடியோவாக எடுத்து காட்டி மிரட்டி இளம்பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த வாலிபரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
ஈரோடு:
குளிப்பதை வீடியோவாக எடுத்து காட்டி மிரட்டி இளம்பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த வாலிபரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பாதிரன் கோட்டையை சேர்ந்தவர் கண்ணன் (வயது 29). திருமணமாக வில்லை. இவர் ஈரோடு சூரம் பட்டி வலசு அணைக்கட்டு பகுதியில் இறைச்சி கடை வைத்து ள்ளார். அங்கு தனியாக வீடு எடுத்து வசித்து வருகிறார்.
அவரது எதிர்வீட்டில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த திருமணம் ஆகாத 26 வயது இளம்பெண் ஒருவர் தங்கியிருந்து போட்டி தேர்வுக்கு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று இளம்பெண் தனது வீட்டில் குளித்து கொண்டிருந்தார். அதனை கண்ணன் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டார்.
இதனை கவனித்த அந்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கண்ணன் அந்த பெண்ணிடம் செல் போனை காண்பித்து இதில் நீ குளிப்பதையும், உடை மாற்றுவதையும் வீடியோவாக படம் எடுத்து வைத்திருக்கிறேன்.
நான் கூப்பிடும் போதெல்லாம் நீ என் ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும் இல்லையென்றால் இந்த வீடியோவை சமூக வலைத் தளங்களில் போட்டு உன் மானத்தை வாங்கி விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
மேலும் இது குறித்து வெளியே கூறினால் உன்னை கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன அந்த இளம்பெண் கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் கண்ணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து அந்த இளம்பெண் சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வீட்டிற்குள் அத்துமீறி நுழைதல், பெண் குளிப்பதை ஆபாசமாக போட்டோ எடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த கண்ணனை கைது செய்தனர்.
பின்னர் கண்ணன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story






