என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
கட்டிட பொருட்களை திருடிய வாலிபர் கைது
கட்டிட பொருட்களை திருடிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
கட்டிட பொருட்களை திருடிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னிமலை அடுத்த ஈங்கூர் ரோடு முருங்கை காடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (42).
இவர் ஈரோடு பி.பி.அக்ரஹாரம் அடுத்த பாட்சாயே தோட்டம் பகுதியில் காண்டிராக்டர் வேலை செய்து வருகிறார். இதற்காக கட்டிடப் பொருட்கள் அங்கு போட்டு வைத்திருந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக காவலாளி இரவு நேர சாப்பாட்டுக்கு சென்று விட்டு வந்து பார்க்கும் போது கட்டிட பொருட்கள் மாயமாகி இருப்பது தெரியவந்தது.
யாரோ மர்ம நபர் ஆட்கள் இல்லாத நேரத்தில் நோட்டமிட்டு கைவரிசை காட்டி வந்தனர்.
சம்பவத்தன்று இரவும் 4 சென்ட்ரிங் பைப்புகள் திருடு போயிருந்தது.
நேற்று காலை மோட்டார்சைக்கிளில் 2 பேர் அந்த சென்ட்ரிங் பைப்புகளை வைத்து கொண்டு சென்றதை கோவிந்தராஜ் பார்த்தார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த மோட்டார் சைக்கிளை மடக்கி பிடித்தனர்.
ஆனால் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
பின்பகுதியில் உட்கார்ந்து வந்த ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த கவுதம் (21) என்பவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவரை கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில் கவுதம் திருடியதை ஒப்புக்கொண்டார்.
திருடிய பொருட்களை ஆர்.என்.புதூரில் உள்ள சந்திரசேகர் என்பவரின் பழைய இரும்பு பொருட்கள் கடையில் போட்டு பணம் வாங்கி வந்ததை ஒப்புக்கொண்டார்.
மேலும் தப்பி சென்ற அவர் பெயர் வசந்த் என்றும் கூறினார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






