என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
ஈரோடு மாவட்டத்தில் 30 மலைகிராம அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்
ஈரோடு மாவட்டத்தில் 30 மலைகிராம அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்பட உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் 30 மலைகிராம அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்பட உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலை கிராம பகுதிகளில் செயல்படும் அரசு பள்ளிகள், மலை கிராம வாழ்க்கை தரம் உயர்த்துவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கூடுதல் கலெக்டர் மதுபாலன் கூறியதாவது:&
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களில் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத் தப்பட உள்ளது. குறிப்பாக கல்வி, மருத்துவம், குடிநீர் ஆகியவற்றுக்கு முக்கி யத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது.
சமவெளி பகுதிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் திறனுக்கு இணையாக மலைகிராம மாணவர்கள் கல்வி திறனையும் மேம்படுத்த ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது.
மாவட்டத்தில் மலைக்கிராமங்களில் உள்ள 30 அரசு பள்ளிகளில் தலா ரூ.2 லட்சம் செலவில் மொத்தம் ரூ.60 லட்சம் செலவில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்பட உள்ளது. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சி.எஸ்.ஆர். நதி மூலம் இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இதேபோல் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் ஊரகப் பகுதிகளில் 100 இடங்களில் நர்சரி பண்ணைகள் அமைக்கப் பட உள்ளது. ஊராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் நர்சரி பண்ணைகள் அமைக்கப்பட்டு அந்தந்த பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழுவினரிடம் ஒப்படைக்கப்படும்.
மகளிர் சுய உதவிக் குழுவினர் நர்சரிகளை பராமரித்து நாற்றுகளை பொது மக்களுக்கு விற்று வருமானம் ஈட்டிக் கொள்ளலாம். இந்த நர்சரியில் முருங்கை கீரை, வகைகள் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்து கொண்ட நாற்றுகள் வழங்கப்படும். இதன் மூலம் அவரவர் வீடுகளிலேயே சமையலுக்கு தேவையான காய்கறி கீரைகளை தாங்களாகவே பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






