என் மலர்tooltip icon

    ஈரோடு

    • தீபாவளிக்கு ஜவுளி வாங்க ஈரோடு கடைவீதிகளில் இன்று வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
    • இதனால் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் முதல் மணிக்கூண்டு வரை கூட்ட நெரிசலால் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகை வரும் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு இன்னும் 8 நாட்களை இருப்பதால் தீபாவளியை கொண்டாட மக்கள் தயாராகி வருகிறா ர்கள். புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக மக்கள் தீபாவ ளியை வரவேற்பார்கள்.

    இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தீபாவளிக்கு ஜவுளி வாங்க ஈரோடு கடைவீதிகளில் இன்று வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    குறிப்பாக ஈரோடு மணிக்கூண்டு முதல் பன்னீர்செல்வம் பார்க் வரை சாலையின் இரு புறமும் ஏராளமான ஜவுளிக்கடைகள் உள்ளன. இதேப்போல ஈஸ்வரன் கோவில் வீதி, ஆர்.கே.வி. ரோடு வீதிகளில் ஏரா ளமான ஜவுளிக்கடைகள், நகை கடைகள் உள்ளன.

    தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் மக்கள் கடந்த சில நாட்களாக ஜவுளி வாங்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே இருந்தது. ஜவுளிக் கடைகளில் மக்கள் போட்டி கொண்டு துணிகளை வாங்கி சென்றனர்.

    இதேபோல் ஈரோடு ஜவுளி சந்தைகளிலும் இன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது. மற்ற இடங்களை காட்டிலும் இங்கு ஜவுளி விலை குறைவாக இருப்பதால் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    இதனால் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் முதல் மணிக்கூண்டு வரை கூட்ட நெரிசலால் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக பெண்கள் கூட்டம் அதிக மாகவே காணப்பட்டது.

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசை காட்டி விடக்கூடாது என்பதால் போலீஸ் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடி க்கைகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளன.

    மணிக்கூண்டு பகுதி, பன்னீர்செல்வம் பார்க், பஸ் நிலையம் உள்பட மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் 6 இடங்களில் போலீஸ் சார்பில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு கண்காணிப்பு கோபுரங்களிலும் சிசிடிவி கேமிரா பொருத்தப்ப ட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் நடவடி க்கைக்களை துல்லியமாக கண்காணிக்க முடியும். இதேபோல் இன்று நகைக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

    • தாளவாடி யில் இருந்து தலமலை செல்லும் வனச்சாலை நெய்தாளபுரம் அருகே காட்டாற்று வெள்ளம் சாலையை மூழ்கடித்து சென்றது.
    • தற்போது வெள்ளம் வடிந்த பிறகு சாலையில் மணல் குவியல் குவியலாக குவிந்துள்ளது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அங்குள்ள ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குளம், குட்டைகள் நிரம்பி வழிகிறது.

    அதேப்போல தொடர் மலை காரணமாக விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் விவசாய பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. தாளவாடி யில் இருந்து தலமலை செல்லும் வனச்சாலை நெய்தாளபுரம் அருகே காட்டாற்று வெள்ளம் சாலையை மூழ்கடித்து சென்றது.

    தற்போது வெள்ளம் வடிந்த பிறகு சாலையில் மணல் குவியல் குவியலாக குவிந்துள்ளது. இதனால் அவ்வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையை கடக்க முடியாமலும், கீழே விழுந்து அடிபடுவதும் நடந்து வருகிறது.

    எனவே சாலையில் குவிந்துள்ள மணலை அப்பு றப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
    • இதில் ஒரு ஊழியர் அங்கு செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட தீயை அணைத்தார்.

    பெருந்துறை:

    பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு தீ விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

    இதனை கருத்தில் கொண்டு பெருந்துறை தீயணைப்புத்துறையினர் பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில் ஊழியர்களுக்கு தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அவற்றை அணைக்க வேண்டும் என்பது குறித்து செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதில் ஒரு ஊழியர் அங்கு செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட தீயை அணைத்தார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெருந்துறை தீயணைப்பு துறை நிலைய அலுவலர் நவீன்தரன் செய்திருந்தார்.

    • கடந்த மூன்று நாட்களாக வெளுத்து வாங்கிய மழையால் அனைத்து ஏரிகளும் நிரம்பி வெள்ளநீர் வெளியேறி வருகின்றது.
    • அந்தியூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் தரைபாலத்தை கடக்க முற்பட்டார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக வெளுத்து வாங்கிய மழையால் அனைத்து ஏரிகளும் நிரம்பி வெள்ளநீர் வெளியேறி வருகின்றது. இந்த நிலையில் அந்தியூர் அருகே உள்ள அந்தியூர் பெரிய ஏரி உபரி நீர் வெளியேறி சாலையில் செல்ல முடியாத அளவுக்கு ஆர்ப்பரித்து சென்று கொண்டுள்ளது.

    இதனால் இன்று காலை வெள்ளி திருப்பூரில் இருந்து அந்தியூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் தரைபாலத்தை கடக்க முற்பட்டார். அப்போது பாதி வழியில் வரும் பொழுது வெள்ளத்தின் வேகம் அதிகரித்ததால் அவரால் மேற்கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு நீரில் இழுத்துச் செல்லப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஒன்று சேர்ந்து மனிதச் சங்கிலியாக கைகோர்த்து அந்த வாகனத்தில் வந்தவரை மீட்டு அவருடைய இருசக்கர வாகனத்தையும் மீட்டு அழைத்து வந்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    • பெருமாளுக்கு இன்று அதிகாலை பால், தயிர், இளநீர் உள்பட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    • சென்னிமலை பகுதியில் உள்ள பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர், மகாவிஷ்ணு கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு அபிேஷகம் மற்றும் வழிபாடு, பஜனை கள் நடந்தது.

    ஈரோடு:

    புரட்டாசி கடைசி சனி க்கிழமையை யொட்டி இன்று பெருமாள் கோவி ல்களில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்த னர்.

    ஈரோடு கோட்டை பெருமாளுக்கு புரட்டாசி சனிக்கிழமையை யொட்டி இன்று அதிகாலை சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டு இருந்தது. இதை யொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்தி ருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பவானி அருகே உள்ள பெருமாள் மலை பகுதியில் மலை மேல் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி மங்களகிரி பெருமாளுக்கு இன்று அதிகாலை பால், தயிர், இளநீர் உள்பட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மங்களகிரி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்ய ப்பட்டு மகா தீபாரதனை நடை பெற்றது.

    இதையொட்டி ஏராள மான பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து மங்களகிரி பெருமாள் கோவிலுக்கு வந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பக்தர்கள் பலர் மொட்டை அடித்து தங்கள் வேண்டுதல்களை நிறை வேற்றினர்.

    இதையொட்டி பக்தர்கள் நேற்று இரவு கோவில் அடிவார பகுதிகளில் கூடா ரம் அமைத்து தங்கினர். தொடர்ந்து அவர்கள் அங்கு பெருமாள் படம் வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

    தொடர்ந்து பக்தர்கள் செம்மாலை (பெரிய அளவி லான காலணி) மேள தாளங்கள் முழங்க எடுத்து வந்தனர். இதை அவர்கள் மலை மீது கோவில் அருகே உள்ள மரத்தில் கட்டி சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதையொட்டி இன்று அதிகாலை முதலே பவானி, ஈரோடு, சித்தோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பெருமாள் மலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். மலை மீது பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரி சனம் செய்தனர்.

    சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஆதி கேசவப் பெருமாள் சன்னதியில் உள்ள உற்சவர் மற்றும் மூலவருக்கு இன்று சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமையை யொட்டி சென்னிமலை பகுதியில் உள்ள பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர், மகாவிஷ்ணு கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு அபிேஷகம் மற்றும் வழிபாடு, பஜனை கள் நடந்தது.

    சென்னிமலை அடுத்துள்ள மேலப்பாளை யம் ஆதிநாரய ணப்பெரு மாள் கோவிலில் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கா ரம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன.

    ஈங்கூர் ரோட்டில் உள்ள செல்வ ஆஞ்சநேயர் மற்றும் விஸ்வ ரூப மகா விஷ்ணு ஆலயத்தில் காலை 7 மணிக்கு ஆஞ்சநேயர் மற்றும் மகாவிஷ்ணு விற்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. அதை தொடர்ந்து அலங்கார பூஜைகள் நடந்தது. முருங்கத்தொழுவு அணியரங்க பெருமாள் மலை கோவிலிலும் பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

    கோபி செட்டிபாளையம் சிவசண்முகம் வீதியில் உள்ள ஆதி அரங்கநாத பெருமாள் கோவிலில் நேற்று ஆற்றுக்குச் சென்று தீர்த்தம் கொண்டு வருதல் நிகழ்ச்சியும், திரு கோடி கம்பம் தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று காலை சுவாமி நீராடுதல் நிகழ்ச்சியும், கரகம் படைக்களம் அலங்க ரித்தல், கபால பூஜை, பெரும் பூஜை, அபிஷேக ஆரா தனைகள் பொங்கல் வைத்து பூஜைகள் ஸ்ரீவாரி கும்பிடுதல், சுவாமி மலையேறுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை மறு பூஜை விழா நடக்கிறது.

    மேலும் மூல வாய்க்கால் மலை ஸ்ரீதேவி பூதேவி கரி வரதராஜ பெருமாள், பாரியூர் ஆதிநாராயண பெருமாள், வரதராஜ பெருமாள், மொடச்சூர், கொளப்பலூர், அழுக்குளி மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை வழிபட்டனர்.

    மேலும் அந்தியூர் பேட்டை பெருமாள் கோவி லில் இன்று பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்ய ப்பட்டு திருப்பதி அலங்கா ரம் செய்யப்பட்டு இருந்தது.

    இதே போல் அந்தியூர் அழகுராஜ பெருமாள், தவிட்டு பாளையம் வரத ராஜ பெருமாள், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள வீரநாராயண பெருமாள், பெருந்துறை பிரசன்ன வெங்கட ரமண பெருமாள், சத்தியமங்கலம் ேகாட்டு வீராம்பாளையம் ெபருமாள், ஈரோடு சத்தி ரோடு கொங்கு பெருமாள் கோவில் உள்பட மாவட்ட த்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் இன்று காலை ஏராளமான பகதர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • சேகர் அதிகமாக மது குடித்து விட்டு குடிபோதையில் நீரோடை செல்லும் பாலத்தின் மேல் இரவு படுத்து உறங்கி உள்ளார்.
    • அப்போது குடி போதையில் நீரோடையில் தவறி விழுந்துள்ளார்.

    சென்னிமலை:

    சென்னிமலை-அரச்சலூர் ரோட்டில் உள்ளது வீரப்பம்பாளையம். இந்த பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 46). கூலி தொழிலாளி.

    இவர் சம்பவத்தன்று சென்னிமலை யூனியன், முருங்கத்தொழுவு ஊராட்சிக்குட்பட்ட கே.ஜி.வலசு அருகே செயல்படும் அரசு டாஸ்மாக் கடையில் மது குடித்துள்ளார்.

    பின்னர் சேகர் வீட்டிற்கு செல்லாமல் அளவிற்கு அதிகமாக மது குடித்து விட்டு குடிபோதையில் கே.ஜி., வலசில் இருந்து மேட்டூர் செல்லும் வழியில் உள்ள ரோட்டில் நீரோடை செல்லும் பாலத்தின் மேல் இரவு படுத்து உறங்கி உள்ளார்.

    அப்போது குடி போதையில் நீரோடையில் தவறி விழுந்துள்ளார். குடிபோதையில் இருந்த அவரால் நீந்த முடியவில்லை. இதனால் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சென்னிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ஈரோடு மாவட்ட இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கட்டண கோஷம் எழுப்பினர்.

    ஈரோடு:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. மற்றும் மாணவர் அணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. ஆகியோர் அறிவிப்பின்படி இந்தி திணிப்பு திட்டத்தையும், ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தையும் மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க. தலைவரும், முதல்-அமை ச்சருமான மு.க.ஸ்டாலின் ஆணைப்படி இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞரணி -மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதன்படி ஈரோடு மாவட்ட இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் தலைமை தாங்கினார். இளைஞரணி அமைப்பா ளர்கள் கே.இ.பிரகாஷ், சேகர், மாணவரணி அமைப்பாளர் திருவாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத் தலைவர் குறிஞ்சி சிவகுமார், அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. மாநகர செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட அறங்காவல் குழு தலைவர் எல்லபாளையம் சிவக்குமார், அந்தியூர் செல்வராஜ் எம்.பி, மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், பொருளாளர் பி.கே.பழனிச்சாமி, முன்னாள் சிட்கோ வாரிய தலைவர் சிந்து ரவிச்சந்திரன்,

    கோபி நகர் மன்ற தலைவரும், நகர செயலாளருமான என்.ஆர்.நாகராஜன், கோபி முன்னாள் நகர செயலாளர் மணிமாறன், பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியசாமி, டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் சிவபாலன், கோட்டைப்பகுதி செயலாளர் ராமச்சந்திரன்,

    பெரியார் நகர் பகுதி செயலாளர் அக்னி சந்துரு, வீரப்பன்சத்திரம் பகுதி செயலாளர் வீ.சி.நடராஜன், கவுன்சிலர்கள் புனிதா சக்திவேல், புவனேஸ்வரி பாலசுந்தரம், ஜெகதீஷ், சுகந்தி, கீதாஞ்சலி செந்தில்குமார், சுபலட்சுமி, தலைமைக் கழக பேச்சாளர் இளைய கோபால்,

    பொதுக்குழு உறுப்பினர் பொன்னுசாமி, வட்டச் செயலாளர் தங்கமணி, தொ.மு.ச. கவுன்சில் செயலாளர் கோபால், பொருளாளர் தங்கமுத்து உள் பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கட்டண கோஷம் எழுப்பினர். இதில் ஆயிரக்கணக்கான தி.மு.க. நிர்வாகிகள் திரண்டதால் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • கடந்த 2 மாதங்களாக வயிற்று வலி காரணத்தால் மாதம்மாள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
    • அருகில் உள்ள ஒரு அறையில் மாதம்மாள் தூக்கில் தொங்கியவாறு இருந்தார்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் அரச்சலூர் தச்சாங்காட்டு வலசு பகுதியை சேர்த்த சின்னசாமி. இவரது மனைவி மாதம்மாள் (48). கீரை வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்நிலையில் மாதம்மாள் கடந்த 2 மாதங்களாக வயிற்று வலி காரணத்தால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் இரவு உறங்க சென்றனர். பின்னர் சின்னசாமி காலை எழுந்து வெளியே வந்து பார்க்கும்போது கதவு வெளிப்பக்கம் தாழ்ப்பாள் இட்டு இருந்தது.

    உடனே அவர் மகனுக்கு போன் செய்து கதவை திறக்க வருமாறு கேட்டுள்ளார். பின்னர் கதவை திறந்து பார்க்கும் போது அருகில் உள்ள ஒரு அறையில் மாதம்மாள் தூக்கில் தொங்கியவாறு இருந்தார்.

    உடனடியாக அவரை இறக்கி பார்த்தபோது மாதம்மாள் இறந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோபிசெட்டிபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை ஆய்வு குழு அலுவலர் சாந்தி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர்.
    • புரோக்கர்களிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கு ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை ஆய்வு குழு அலுவலர் சாந்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் ரேகா, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் உட்பட 8 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை 5.30 மணி அளவில் வந்தனர்.

    பின்னர் அவர்கள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அலுவலகத்திற்குள் லஞ்ச ஒழிப்பு போலீசார் வந்தவுடன் உடனே அலுவலக கதவை பூட்டினர். பின்னர் அவர்கள் வட்டார போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வா ளர் கண்காணிப்பாளர்கள், அலுவலர்கள் அறையில் அதிரடியாக சோதனையிட்டனர்.

    சோதனை தொடங்கி யதும் அலுவலகத்தில் இருந்த அனைத்து செல்போன்களையும், அவர்களிடம் இருந்த ஓட்டுநர் உரிமம் போன்றவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் அலுவலகத்தில் இரண்டு புரோக்கர்கள் கையில் பணத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களிடமிருந்து ரூ.1.28 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் அவர்களிடமிருந்து துண்டு சீட்டு ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரம் இருந்ததாக கூறப்படுகிறது. இரவு 9.30 மணி வரைசோதனை நடைபெற்றது.

    பின்னர் அங்கிருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்று விட்டனர். இந்நிலையில் இன்று புரோக்கர்களிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் கைப்பற்றப்பட்ட துண்டு சீட்டையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

    • குண்டேரி ப்பள்ளம் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்து வந்தது.
    • இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து நிரம்பியது. இதனால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி வினோபா நகர் பகுதியில் குன்றி மலையடி வாரத்தில் 42 அடி உயரத்தில் கடந்த 1980-ம் ஆண்டு குண்டேரிப்பள்ளம் அணை கட்டப்பட்டது.

    இந்த அணைக்கு குன்றி, விளாங்கோம்பை, கடம்பூர், மல்லியம்மன் துர்கம், உள்ளிட்ட வனப்பகுதியில் பெய்யும் மழை நீரானது 10-க்கும் மேற்பட்ட காட்டாற்று பள்ளங்கள் வழியாக குண்டேரிப்பள்ளம் அணைக்கு தண்ணீர் வந்தடைகிறது.

    இந்த அணையில் உள்ள இரு பாசன வாய்க்கால்கள் மூலமாக குண்டேரி ப்பள்ளம், வினோபாநகர், கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர், இந்திராநகர், மோதூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2 ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    இந்நிலையில் குண்டேரி ப்பள்ளம் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்து வந்தது. மேலும் குண்டேரிப்பள்ளம் பகுதியில் மழையின் அளவு 75.20 மி.மீ மழை பெய்து உள்ளது.

    நேற்று காலை அணையின் நீர்மட்டம் 39 அடியாகவும், அணைக்கு நீர் வரத்து 30 கன அடியாகவும் இருந்தது. இந்நிலையில் மாலை வனப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக இரவு அணைக்கு நீர் வரத்து படிப்படியாக 2ஆயிரத்து 600 கன அடியாக அதிகரி த்தது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து நிரம்பியது. இதனால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இன்று காலை 6 மணி நிலவரப்படி குண்டேரி ப்பள்ளம் அணைக்கு நீர்வரத்தானது 1,759 கனஅடியாக இருந்தது. உபரி நீர் முழுமையாக வெளியேற்றப்படுவதால் ஆற்றின் வழியோரங்களில் உள்ள குண்டேரிப்பள்ளம், கொங்கர்பாளையம், வினோபாநகர், வாணிப்புத்தூர், இந்திரா நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    அதே நேரத்தில் குண்டேரிப்பள்ளம் அணையை சுற்றி உள்ள கிராம மக்கள் ஆபத்தை உணராமல் அணையில் இருந்து வெளியேறும் மீன்களை போட்டி போட்டுக்கொண்டு பிடித்து வருகின்றனர். பொதுப்ப ணித்துறை ஊழியர்கள் மற்றும் பங்களாப்புதூர் போலீசார் எச்சரிக்கை விடுத்தும் அதை கண்டு கொள்ளாமல் மீன் பிடித்து வருகின்றனர்.

    அணையில் இருந்து பெரிய அளவிலான காய்ந்த மரங்கள் காட்டாற்றில் அடித்து வரப்படும் நிலையில் மீன் பிடிக்கும் போது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அணை நிரம்பி வெள்ள நீர் வெளியேறும் காலங்களில் மீன் பிடிப்பதை பொதுப்பணித்துறையினர் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதேபோல் டி.என்.பாளையம் அருகே உள்ள பெருமுகை ஊராட்சியில் 500 ஏக்கர் பரப்பளவில் 15 அடி உயரத்தில் அமைந்துள்ளது சஞ்சீவராயன் குளம். நீர்பிடிப்பு பகுதிகளான கரும்பாறை, தொட்டகோம்பை உள்ளிட்ட வனப்பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.

    இதனால் 10 அடியாக இருந்த சஞ்சீவராயன் குளத்தின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து இன்று அதிகாலை குளத்திற்கு வரும் 500 கன அடி உபரி நீர் முழுமையாக வெளியேறியது. தற்போது உபரிநீர் படிப்படியாக குறைந்து வருகிறது.

    இன்றும் மழை பெய்தால் நீர்வரத்து அதிகமாகும் என்பதால் இந்த குளத்தை சுற்றியுள்ள கிராமங்களான கள்ளிப்பட்டி, கணக்க ம்பாளையம், பகவதிநகர், வளையபாளையம், சைபன் புதூர், எரங்காட்டூர், சின்ன காளியூர், காளியூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் மீண்டும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 101.54 அடியாக உள்ளது.நேற்று அணைக்கு வினாடிக்கு 2,115 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று மேலும் அதிகரித்து 5844 கனஅடியாக நீர் வரத்து வருகிறது.

    அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1500 கன அடி என மொத்தம் 1,600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் 33.50 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.46 அடியாக உள்ளது. இந்த அணையும் நிரம்பும் தருவாயில் உள்ளது.

    மற்றொரு பிரதான அணையான பெரும்பள்ளம் அணை 22.97 அடியில் உள்ளது.தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள அணைகள் நீர்நிலைகள் நிரம்பி வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
    • அவர்களது சட்டை பாக்கெட்டில் ரோஸ் கலர் சீட்டில் எண் எழுதி வெளி மாநில லாட்டரி சீட்டுகளை பரிசு விழும் என விற்பனை செய்தது தெரியவந்தது.

    பவானி:

    பவானி அந்தியூர் மெயின் ரோடு பொன்காட்டார் கடை அருகில் பவானி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பவானி அருகில் உள்ள ஜம்பை, நல்லிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த தாண்டான் (46) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அய்யாசாமி (46) என்பது தெரியவந்தது.

    அவர்களது சட்டை பாக்கெட்டில் ரோஸ் கலர் சீட்டில் எண் எழுதி வெளி மாநில லாட்டரி சீட்டுகளை பரிசு விழும் என விற்பனை செய்தது, செல்போன் மூலம் விற்பனை செய்தது தெரியவ ந்ததை தொடர்ந்து 2 பேரையும் பவானி போலீசார் கைது செய்தனர். 5 சீட்டுகள் பறிமுதல் செய்தனர்.

    • கொடுமுடி அரசு மருத்துவ மனையில் சி.கே.சரஸ்வதி எம்.எல்.ஏ. திடீர் ஆய்வினை மேற்கொண்டார்.
    • தாலுகா மருத்துவ மனையாக கொடுமுடி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்ட போதும் அதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏதும் இல்லாமல் உள்ளன.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம், கொடுமுடி அரசு மருத்துவ மனையில் சி.கே.சரஸ்வதி எம்.எல்.ஏ. திடீர் ஆய்வினை மேற்கொண்டார். ஆய்வின் போது ஆய்வகம், நோயாளிகள் படுக்கையறைகள், அவசர மருத்துவ பிரிவு, மருந்தகம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ள பகுதிகள் அனைத்திற்கும் சென்று ஆய்வு மேற்கொ ண்டார்.

    ஆய்வுக்கு பின் சரஸ்வதி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:

    தாலுகா மருத்துவ மனையாக கொடுமுடி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்ட போதும் அதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏதும் இல்லாமல் உள்ளன.

    மொத்தம் 6 பொது மருத்துவர்கள், ஒரு பல் மருத்துவர், ஒரு சித்தா மருத்துவர் உட்பட 8 மருத்து வர்கள் பணியமர்த்தப்பட்ட போதிலும் அவர்களுக்கு அடிக்கடி பணி மாறுதல் கொடுக்கப்படுவதால் அவர்களால் தொடர்ந்து பணியாற்ற முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது,

    இதனால் நோயா ளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட முடிவதில்லை, எலும்பு முறிவு மருத்துவர் ஒருவர் பணி நியமனம் செய்யப்ப ட்டுள்ளார், ஆனால் எக்ஸ்ரே எடுக்கும் வசதி, எக்ஸ்ரே மெஷின் கிடையாது.

    இதனால் ஏழை நோயாளிகள் வெளியில் பணம் கொடுத்து எக்ஸ்ரே எடுத்து வரும் நிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆய்வகங்களில் உள்ள மெஷின்கள் மற்றும் உபகரணங்கள் மிகவும் பழுதான நிலையில் உள்ளது. சில மிஷின்கள் இயங்குவதில்லை.

    அதேபோல் விபத்து ஏற்பட்டு அவசர சிகி ச்சைக்கு வருபவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்க முடிவதில்லை. இதனால் மக்கள் கரூர் மற்றும் ஈரோடு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.

    கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் செய்யக்கூடிய ஸ்கேன் மெஷின் இங்கு இயங்குவதில்லை. இதனால் கர்ப்பிணி பெண்கள் வெளியே சென்று பணம் கொடுத்து ஸ்கேன் எடுத்து வரும் நிலை உள்ளது. மேலும் இங்கே பிரேத பரிசோதனைகள் முறையாக நடைபெற்று வருகின்றன.

    ஆனால் அடையாளம் தெரியாதவர் பிரேதங்களை பரிசோதனை செய்து அவர்களுக்கு பாதுகாப்பாக வைக்க குளிர்சாதன வசதி கொண்ட பிரீசர் பாக்ஸ் இந்த மருத்துவமனையில் இல்லாமல் ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

    எப்பொழுதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த மருத்துவ–மனை தாலுகா மருத்துவ–மனையாக தரம் உயர்த்தப் பட்ட போதும் மிகவும் குறைந்த எண்ணி க்கையில் நோயாளிகள் வந்து செல்வது அவர்களு க்கான சிகிச்சை பெறக்கூடிய வசதிகள் இல்லாமல் இருப்பதும் பொதுமக்க ளிடையே பெருத்த கவலை உருவாக்கியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் இது குறித்து சட்டமன்றத்தில் வலியுறுத்தி அனைத்து வசதி களையும் பெற்று தருவதாகவும் கூறினார். ஆய்வின்போது மருத்துவ அலுவலர் ரேவதி, டாக்டர்.பேபி, சித்த டாக்டர் இந்துமதி, பல் டாக்டர் கீதா மற்றும் செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், உள்ளூர் பிரமுகர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×