என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடிபோதையில் நீரோடையில் தவறி விழுந்து கூலி தொழிலாளி பலி
- சேகர் அதிகமாக மது குடித்து விட்டு குடிபோதையில் நீரோடை செல்லும் பாலத்தின் மேல் இரவு படுத்து உறங்கி உள்ளார்.
- அப்போது குடி போதையில் நீரோடையில் தவறி விழுந்துள்ளார்.
சென்னிமலை:
சென்னிமலை-அரச்சலூர் ரோட்டில் உள்ளது வீரப்பம்பாளையம். இந்த பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 46). கூலி தொழிலாளி.
இவர் சம்பவத்தன்று சென்னிமலை யூனியன், முருங்கத்தொழுவு ஊராட்சிக்குட்பட்ட கே.ஜி.வலசு அருகே செயல்படும் அரசு டாஸ்மாக் கடையில் மது குடித்துள்ளார்.
பின்னர் சேகர் வீட்டிற்கு செல்லாமல் அளவிற்கு அதிகமாக மது குடித்து விட்டு குடிபோதையில் கே.ஜி., வலசில் இருந்து மேட்டூர் செல்லும் வழியில் உள்ள ரோட்டில் நீரோடை செல்லும் பாலத்தின் மேல் இரவு படுத்து உறங்கி உள்ளார்.
அப்போது குடி போதையில் நீரோடையில் தவறி விழுந்துள்ளார். குடிபோதையில் இருந்த அவரால் நீந்த முடியவில்லை. இதனால் அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சென்னிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story