சாலையில் குவிந்துள்ள மணல்

தாளவாடி யில் இருந்து தலமலை செல்லும் வனச்சாலை நெய்தாளபுரம் அருகே காட்டாற்று வெள்ளம் சாலையை மூழ்கடித்து சென்றது.தற்போது வெள்ளம் வடிந்த பிறகு சாலையில் மணல் குவியல் குவியலாக குவிந்துள்ளது.
சாலையில் குவிந்துள்ள மணல்
Published on

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் தாளவாடி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அங்குள்ள ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குளம், குட்டைகள் நிரம்பி வழிகிறது.

அதேப்போல தொடர் மலை காரணமாக விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் விவசாய பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. தாளவாடி யில் இருந்து தலமலை செல்லும் வனச்சாலை நெய்தாளபுரம் அருகே காட்டாற்று வெள்ளம் சாலையை மூழ்கடித்து சென்றது.

தற்போது வெள்ளம் வடிந்த பிறகு சாலையில் மணல் குவியல் குவியலாக குவிந்துள்ளது. இதனால் அவ்வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையை கடக்க முடியாமலும், கீழே விழுந்து அடிபடுவதும் நடந்து வருகிறது.

எனவே சாலையில் குவிந்துள்ள மணலை அப்பு றப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com