என் மலர்
ஈரோடு
- முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற புதியதாக விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தொகை அனுமதிக்கப்படும்.
ஈரோடு:
முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற புதியதாக விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் தகுதிகள் பெற்று இருப்பின் விண்ணப் பிக்கலாம். ஆண் குழந்தை யின்றி 2 பெண் குழந்தைகள் (2-வது பெண் குழந்தைக்கு 3-வயதுக்குள்) அல்லது ஒரு பெண் குழந்தை இருப்பின் (3-வயதுக்குள்).
பெற்றோர்களில் ஒருவரில் 40 வயதிற்குள் குடும்பநல அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம் மிகாமல் பெற்று இருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தொகை அனுமதிக்கப்படும்.
ஏற்கனவே இத்திட்டத்தில் பயனடைந்து முதலீட்டு பத்திரம் பெற்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்களின் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் சம்மந்தப்பட்டவரின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் ஆகியவற்றுடன் வரும் 30-ந் தேதிக்குள் சம்மந்தப்பட்ட வட்டாரத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலக களப்பணி யாளர்களை அணுகுமாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.
- மொடச்சூர் தான்தோன்றி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.
- அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
கோபி:
கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் தான்தோன்றி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு நடைபெற்றது.
கும்பாபிஷேக விழா 6-ந் தேதி கிராம சாந்தியுடன் தொடங்கியது. 7-ந் தேதி கணபதி பூஜையும், 8-ந் தேதி பவானி நதியில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 9-ந் தேதி யாகசாலை தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து 10-ந் தேதி 2-ம் கால யாக பூஜையும், சுவாமிகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சியும், கலசங்கள் யாகசாலையில் இருந்து புறப்படுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று காலை 7 மணிக்கு நடந்தது.
அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 10 மணிக்கு மகா அபிஷேகமும், கோ தரிசனமும், தச தரிசனமும், மகாதீப ஆராதனையும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு தான்தோன்றியம்மன் உற்சவர் திருவீதி உலா நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். கொட்டும் மழையிலும் ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.
- பவானி அருகே உள்ள லட்சுமி நகர் காவிரி ஆற்று பாலம் வழியாக வந்து கொண்டு இருந்தனர்.
- அப்போது விஸ்வநாதன் மோட்டார் சைக்கிளை ஓரத்தில் நிறுத்தி விட்டு திடீரென மனைவி கண் முன்னே புதிய காவிரி ஆற்று பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்தார்.
பவானி:
திருப்பூருரை சேர்ந்தவர் விஸ்வநாதன் (38). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் அயன் செய்யும் காண்டி ராக்ட் எடுத்து வேலை செய்து வருகிறார்.
இவர் பெங்களூரை சேர்ந்த சந்தியா என்பவரை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருகிறார். இவர்க ளுக்கு லாவண்யா என்ற 7 வயது பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறபபடுகிறது. இதனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ெதாடர்ந்து தகராறு ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று திருப்பூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் விஸ்வநாதன் தனது மனைவிக்கு கவுன்சி லிங் தர தரக்கோரி புகார் அளித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த மனைவி சந்தியா பெங்களூர் சென்று வருவதாக கூறி னார்.
இதையடுத்து மனைவி யை விசுவநாதன் பெங்களூ ரில் விட்டு விட்டு வருவதாக கூறினார். இதை தொடர்ந்து கணவன்- மனைவி மற்றும் மகள் என 3 பேரும் மோட்டார் சைக்கிளில் பெங்களூருவுக்கு சென்ற னர். அவர்கள் மோட்டார் சைக்கிளில் வரும் போது மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரி கிறது.
இந்த நிலையில் அவர்கள் ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள லட்சுமி நகர் காவிரி ஆற்று பாலம் வழியாக வந்து கொண்டு இருந்தனர். அப்போது விஸ்வநாதன் மோட்டார் சைக்கிளை ஓரத்தில் நிறுத்தி விட்டு திடீரென மகைவி கண் முன்னே புதிய காவிரி ஆற்று பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்தார்.
இது குறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தீய ணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து குமாரபாளையம் தீய ணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து அவர்கள் காவிரி ஆற்றில் அவரை தேடினர்.
இதை தொடர்ந்த இன்று தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் இன்று 2-வது நாளாக காவிரி ஆற்றில் விஸ்வநாதனை தேடி வரு கிறார்கள். அவரது கதி என்ன என தெரியவில்லை.
- ரெயில் பெட்டியில் பயணித்த 3 இளம் பெண்களிடம் 3 வாலிபர்கள் பேசி கொண்டிருந்தனர்.
- ரெயில் ஈரோடு தாண்டி சென்று கொண்டிருந்தபோது அந்த 3 வாலிபர்களுக்கும் பல் டாக்டர் தீபக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
ஈரோடு:
கேரள மாநிலம் கொல்லம் கடக்கல் பகுதியை சேர்ந்தவர் தீபக் (46). பல் டாக்டர். சம்பவத்தன்று கொச்சு வேலி-மைசூர் செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் மேற்கொண்டார்.
அதே ரெயில் பெட்டியில் பயணித்த 3 இளம் பெண்களிடம் 3 வாலிபர்கள் பேசி கொண்டிருந்தனர். ரெயில் ஈரோடு தாண்டி சென்று கொண்டிருந்தபோது அந்த 3 வாலிபர்களுக்கும் பல் டாக்டர் தீபக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த 3 வாலிபர்களும் தீபக்கை தாக்கினர். இது குறித்து தீபக் பெங்களூரு ரெயில்வே போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகார் ஈரோடுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து ஈரோடு ரெயில்வே போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோபிசெட்டிபாளையம் மேட்டு வலவு பகுதியில் வந்த போது அந்த வழியாக வந்த ஒரு லாரி எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது.
- இதில் தூக்கி வீசப்பட்டு சின்ன ராசாத்தி படுகாயம் அடைந்தார்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் தொட்டி பாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னராஜ். இவரது மனைவி சின்ன ராசாத்தி (52). கூலி வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் பார்த்திபன் என்பவருடன் மொபட்டில் சின்ன ராசாத்தி சென்று கொண்டு இருந்தார். அவர்கள் கோபிசெட்டி பாளையம் மேட்டு வலவு பகுதியில் வந்த போது அந்த வழியாக வந்த ஒரு லாரி எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு சின்ன ராசாத்தி படுகாயம் அடைந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டி பாளை யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்ன ராசாத்தி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- மொடக்குறிச்சி, கொடுமுடி, ஊஞ்சலூர், சிவகிரி, அரச்சலூர், சோலார், கணபதிபாளையம், போன்ற பகுதிகளில் அதிகாலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது.
- அம்மாபேட்டை, நெரிஞ்சுபேட்டை, பவானி, சித்தோடு, கவுந்தப்பாடி, பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இரவு வரை பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. கோபிசெட்டிபாளையம், ஈரோடு, பெருந்துறை, வரட்டுப்பள்ளம், சென்னிமலை, தாளவாடி, பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
குறிப்பாக வரட்டு பள்ளம், பெரும்பள்ளம், குண்டேரி பள்ளம் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் இந்த அணைகள் தனது முழு கொள்ளளவில் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில் இன்று மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் இருந்தே சாரல் மழை பெய்து வருகிறது. ஈரோடு மாநகர பகுதியில் நேற்று மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
இன்று காலை 8.30 மணி முதல் இருந்து சாரல் மழை தொடர்ந்து பெய்தது. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், பெற்றோர்கள் கடும் அவதி அடைந்தனர்.
பள்ளிகள் அனைத்தும் செயல்பட்டதால் குழந்தைகளை மழையில் கூட்டி செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் பெற்றோர்களுக்கு ஏற்பட்டது. பல இடங்களில் பெற்றோர்கள் குடைப்பிடித்தபடி தங்களது பிள்ளைகளை மழையில் சிரமம் பட்டு பள்ளிகளுக்கு அழைத்து சென்றனர். கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் கடும் அவதி அடைந்தனர்.
இதேபோல் மொடக்குறிச்சி, கொடுமுடி, ஊஞ்சலூர், சிவகிரி, அரச்சலூர், சோலார், கணபதிபாளையம், போன்ற பகுதிகளில் அதிகாலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது.
மேலும் அம்மாபேட்டை, நெரிஞ்சுபேட்டை, பவானி, சித்தோடு, கவுந்தப்பாடி, பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:-
கோபி-8.20, ஈரோடு-6, பெருந்துறை-3, வரட்டு பள்ளம்-3.4, சென்னி மலை-2, தாளவாடி-1.60.
- பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து இன்று வினாடிக்கு 684 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
- இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.44 அடியாக உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாக பெய்து வருகிறது. அதன்படி நீலகிரி மலைப்பகுதியிலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வந்தது. நேற்று வினாடிக்கு 3, 222 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து இன்று வினாடிக்கு 684 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.44 அடியாக உள்ளது. இதேபோல் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 600 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று ஆயிரம் கன அடியாக அதிகரித்து தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
இதேபோல் தடப்ப ள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 600 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் 1,750 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானிசாகர் அணை 105 அடியை நெருங்கி வருகிறது.
- சென்னிமலை முருகன் கோவிலில் உண்டியல்களின் திறப்பு நடைபெற்றது.
- காணிக்கை எண்ணும் பணி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் உதவி ஆணையர் ரமணி காந்தன் முன்னி லையில் நடைபெற்றது
சென்னிமலை:
சென்னிமலை முருகன் கோவிலில் பொதுமக்கள் காணிக்கை செலுத்த உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உண்டியல்களின் திறப்பு நடைபெற்றது.
காணிக்கை எண்ணும் பணி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் உதவி ஆணையர் ரமணி காந்தன் முன்னி லையில் நடைபெற்றது.
இந்த உண்டியல் திறப்பின் மூலம் ரொக்கமாக ரூ.48,87,159, தங்கம் 153 கிராமும், வெள்ளி 2, 215 கிராமும் இருந்தது. திருப்பணி உண்டியல் திறப்பின் மூலம் ரூ.92,167-ம் வரப்பெற்றது.
மேற்படி உண்டியல் திறப்பில் கோவில் தக்கார் அன்னக்கொடி, செயல் அலுவலர் சரவணன், பெருந்துறை ஆய்வர், கோவில் பணியாளர்கள், பெருந்துறை நந்தா கல்லூரி மாணவ, மாணவிகள், மகளிர் குழுவினர், வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- சென்னிமலையை அடுத்துள்ள முருங்கத் தொழுவு மகா மாரியம்மன் கோவில் தேர்திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வந்தது.
- இன்று காலை உற்சவ அம்மைக்கு மகா அபிஷேகமும், அதன் பின்பு காலை 8.10 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.
சென்னிமலை:
சென்னிமலையை அடுத்துள்ள முருங்கத் தொழுவு மகா மாரியம்மன் கோவில் தேர்திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வந்தது. கடந்த 2 ந் தேதி இரவு கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. அன்று முதல் இரவு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜைகளும் நடந்தது. தினமும் காலை 6 மணிக்கு பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
அதை தொடர்ந்து பெண்கள் கம்பத்திற்கு மஞ்சள் பூசி தண்ணீர் ஊற்றி வழிபாடு நடத்தினர். 7-ந் தேதி இரவு தலவுமலை மற்றும் வடுகபாளையம் ஆகிய ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்து மாரியம்மனை வழிபட்டனர். 8 -ந் தேதி இரவு கிராம சாந்தி நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து அம்மன்கோவில்புதூர், வாய்கால்மேடு பகுதி மக்கள் வந்து வழிபாடு நடந்தினர்.
நேற்று இரவு காவிரி சென்று தீர்த்தம் கொண்டு வந்து இரவு 8.30 மணிக்கு மாரியம்மனுக்கு தீர்த்த அபிஷேக ஆராதனை நடந்தது. அதைதொடந்து கொமாரபாளையம், பனங்காட்டுபுதூர் மக்கள் வந்து மாரியம்மனை வழிபட்டனர். அதன்பின்பு காளிக்காவலசு, முருங்கத்தொழுவு ஊர் பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து மாவிளக்கு பூஜை நடத்தினர்.
இன்று காலை 7.20 மணிக்கு உற்சவ அம்மைக்கு மகா அபிஷேகமும், அதன் பின்பு காலை 8.10 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதைதொடர்ந்து பக்தர்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழி பழி கொடுத்து நேர்த்திகடன் செலுத்தினர்.
பின்னர் மாலை 3.30 மணிக்கு குழந்தைகள் சேற்று வேஷம் இட்டு மாரியம்மனுக்கு காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். மாலை 5.20 மணிக்கு தேர் நிலை சேரும். இரவு மலர் அலங்காரத்தில் மாரியம்மன் திருவீதி உலா காட்சி நடக்கும்.
நாளை மதியம் மஞ்சள் நீர் உற்சவத்துடன் 15 நாள் விழா நிறைவு பெறுகிறது. முருங்கத்தொழுவு மகா மாரியம்மன் கோவில் தேரோட்டத்தை தொட–ர்ந்து முருங்கத்தொழுவு சுற்று பகுதியில்உள்ள 14-க்கும் மேற்பட்ட கிராமங்க–ளில் மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
- குறைவான அளவு திறக்கப்படும் இந்த தண்ணீர் கடைமடை பகுதிக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
- கால்வாயின் கடைமடையில் பாசன பகுதிக்குட்பட்ட பகுதி களில் சுமார் 300 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு:
பவானிசாகர் அணையில் இருந்து 200 கிமீ செல்லும் கீழ்பவானி பிரதான கால்வாயின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
இந்நிலையில் சத்தியமங்கலம் அருகே கடந்த அக்ேடாபர் மாதம் 30-ந் தேதி உடைப்பு ஏற்ப ட்டதால் பாசனத்திற்கான தண்ணீர் நிறுத்தப்பட்டது. பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று முதல் விநாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
குறைவான அளவு திறக்கப்படும் இந்த தண்ணீர் கடைமடை பகுதிக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தண்ணீர் பிரச்சனையால் தாமதமாக கடைமடை பகுதியில் நெல்சாகுபடி செய்ததாக தெரிவித்த விவசாயிகள், கால்வாய் உடைப்பால் கடந்த 10 நாட்களாக தண்ணீர் முற்றிலும் கிடை க்காத நிலை ஏற்பட்டதாக கூறினர்.
மேலும் குறைவான அளவு தண்ணீர் திறக்கப்படுவதால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேராது என்றும் தெரிவித்தனர். கால்வாயின் கடைமடையில் பாசன பகுதி க்குட்பட்ட பாண்டி பாளையம், குட்டக்கா ட்டுவலசு, கணக்க ம்பாளையம், குலவிளக்கு, காகம் உள்ளி ட்ட பகுதி களில் சுமார் 300 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகுவதாக விவசா யிகள் தெரிவித்துள்ளனர்.
கடைமடை பகுதிக்கு தண்ணீர் விரைந்து கிடைக்கவும், நெற்பயிர்களை பாதுகாக்கவும் கால்வாயில் முழு கொள்ளளவான 2 ஆயிரம் கன அடி அளவிற்கு தண்ணீரை திறக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தண்ணீர் முழுமையாக கிடைத்தால் மட்டுமே பயிர்களை காப்பாற்ற முடியும் என்றும், இல்லை யெனில் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் அளவிற்கு செலவு செய்து நடவு செய்த பயிர்கள் வீணாகிவிடும் என்றும் வேதனை தெரிவித்தனர்.
- பவானி அருகில் உள்ள ஊராட்சி கோட்டை மலையின் அடிவார பகுதியில் பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
- இந்த அலுவலகத்தில் லஞ்சம் வாங்கப்படுவதாக பொதுமக்கள் பலரும் ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.
பவானி:
பவானி அருகில் உள்ள ஊராட்சி கோட்டை மலையின் அடிவார பகுதியில் பவானி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தில் பவானி மற்றும் அந்தியூர் வட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் தாங்கள் வாங்கும் புது வாகனம் பழைய வாகனம் எப்.சி. காண்பித்தல், எல்.எல்.ஆர். மற்றும் லைசென்ஸ் பெறுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் மேட்டுப்பாளையத்தில் பணியாற்றிய சுகந்தி என்பவர் ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த சில நாட்களாகவே இந்த அலுவலகத்தில் லஞ்சம் வாங்கப்படுவதாக பொதுமக்கள் பலரும் ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் ஈரோடு லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ராஜேஷ், இன்ஸ்பெக்டர் ரேகா, சப்- இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் கோவை மண்டல ஆய்வு குழு ஆலோசகர் சாந்தாமணி ஆகியோர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அலுவலகத்தில் உள்ளே இருந்த 2 பெண் அலுவலர்கள் உட்பட 5 பேர் மற்றும் புரோக்கர்கள் என வந்து சென்ற 12 பேர் உள்ளேயே அமர வைத்தனர்.
பின்னர் நடத்திய தீவிர சோதனையில் கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் பறிமுதல் செய்யப் பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் தெரிவித்தனர். மாலை 4 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது. கிட்டத்தட்ட 8 மணி நேரம் சோதனை நடந்தது.
புரோக்கர்களாக கருதப்படும் ஒரு சிலர் குறைந்த அளவு பணம் வைத்திருந்த நிலையில் அவர்களிடம் முகவரி, செல்போன் நம்பர் போன்றவற்றை வாங்கிக் கொண்டு இரவு 9 மணிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஒரு சிலரை அதிக அளவு பணம் வைத்திருந்த குற்றத்திற்காக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உள்ளதாகவும், அதேபோல் கணக்கில் காட்டப்படாத ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அலுவலர் மீது வழக்கு பதிவு செய்ய உள்ளதாக தகவல் தெரிவித்தனர்.
- விசைத்தறி கூடத்தில் ஈரோடு மாவட்ட கைத்தறி ரக ஒதுக்கீட்டு அமலாக்க துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு செய்தனர்.
- இது குறித்து குழந்தைவேல் மீது தகுந்த ஆதாரங்களுடன் ஜெயவேல் கணேசன் சென்னிமலை போலீசில் புகார் செய்தார்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே சிறுக்களஞ்சி ஊராட்சி, கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் குழந்தைசாமி (45). இவர் விசைத்தறி கூடம் நடத்தி வருகிறார்.
இவரது விசைத்தறி கூடத்தில் ஈரோடு மாவட்ட கைத்தறி ரக ஒதுக்கீட்டு அமலாக்கத்துறை உதவி இயக்குனர் ஜெயவேல் கணேசன் தலமையில் அமலாக்க துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது குழந்தைசாமிக்கு சொந்தமான 2 விசைத்தறிகளில் கைத்தறிக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்ட டாபி டிசைனுடன் கூடிய காட்டன் பெட்ஷீட் ரகத்தை உற்பத்தி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் இது குறித்து குழந்தைவேல் மீது தகுந்த ஆதாரங்களுடன் ஜெயவேல் கணேசன் சென்னிமலை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னிமலை பகுதியில் இது போன்று பல விசைத்தறி கூடங்களில் கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட ரகத்தினை உற்பத்தி செய்வதாக தொடர் புகார் வந்துள்ளது.
அதனால் இது போன்று தொடர்ந்து தீடீர் சோதனை நடத்தப்படும் என்றும், இது போன்று கைத்தறி ரகத்தினை விசைத்தறியில் உற்பத்தி செய்து அதை விற்பனைக்காக வாங்கி வைத்திருப்பதும் சட்டபடி குற்றம் என அமலாக்க துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






