என் மலர்tooltip icon

    ஈரோடு

    • கன்று குட்டி ஒன்று தடுப்பு சுவர் இல்லாத கிணற்றின் அருகே மேய்ந்து கொண்டு இருந்தது.
    • அப்போது மேய்ந்து கொண்டு இருந்த கன்றுக்குட்டி நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்தது.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்துள்ள துடுப்பதி தோப்பு பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வ ராஜ். இவர் குடும்பத்துடன் அதே பகுதியில் குடியிருந்து விவசாயம் செய்து வரு கிறார். இவரது தோட்டத்தில் 70 அடி ஆழமுள்ள ஒரு கிணறு உள்ளது.

    அதில் 40 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. மேலும் அவரது தோட்ட த்தில் பசு மாடுகள், எருமை கன்று குட்டிகள் வளர்த்து வருகிறார்.

    இந்த நிலையில் அவரது கன்று குட்டி ஒன்று தடுப்பு சுவர் இல்லாத கிணற்றின் அருகே மேய்ந்து கொண்டு இருந்தது. அப்போது அந்த பகுதியில் மழை பெய்து கொண்டு இருந்தது. இதனால் அந்த பகுதி முழு வதும் ஈரமாக காணப்பட்டது.

    அப்போது அந்த பகுதியில் மேய்ந்து கொண்டு இருந்த கன்றுக்குட்டி நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வ ராஜ் உடனடியாக தீய ணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

    இதையடுத்து பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் நவீந்திரன் தலை மையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி கயிறு கட்டி எருமை கன்று குட்டியை உயிருடன் மீட்டனர்.

    • பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற 15-ந் தேதி நடைபெற உள்ளது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.

    இதனால் பெருந்துறை கோட்டத்துக்கு உட்பட்ட சென்னிமலை டவுன், ஊத்துக்குளிரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பனியம்பள்ளி, தொட்டம்பட்டி, வாய்ப்பாடி புதூர், கவுண்டம்பாளையம், மாடுகட்டிபாளையம், எளையாம்பாளையம், துளுக்கம்பாளையம் மற்றும் பழனி ஆண்டவர் ஸ்டீல்ஸ் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பெருந்துறை மின்வாரிய செயற்பொறியாளர் வாசுதேவன் தெரிவித்துள்ளார்.

    • பவானிசாகர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் கொடிவேரி தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • இதையொட்டி கொடிவேரி தடுப்பணை நுழைவு வாயில் அடைக்கப்பட்டது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடு ப்பணைக்கு ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.

    மேலும் விடுமுறை மற்றும் விேசஷ நாட்களில் வழக்கத்தை விட அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வார்கள்.

    இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு சுமார் 5 ஆயிரம் கன அடியாக அதி கரித்தது. இதனால் அணை யின் நீர்மட்டம் அதிகரித்து 105 அடியை எட்டும் நிலை யில் உள்ளது.

    இதையொட்டி பவானிசாகர் அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வரு கிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பெருக் கெடுத்து செல்கிறது.

    இதே போல் கொடிவேரி தடுப்பணையிலும் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் குளிக்கும் இடத்தில் தண்ணீர் அதி களவு செல்கிறது.

    இந்த நிலையில் தடுப்பணையில் அதிகளவு தண்ணீர் செல்வதால் பாது காப்பு கருதி கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் ரசிப்பதற்கும் தடை விதிக்க பட்டுள்ளது.

    இது குறித்து அதிகாரிகள் கூறும் போது, மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் பவானி சாகர் அணை முழு கொள்ள ளவை எட்டும் நிலையில் உள்ளது.

    இதனால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் கொடிவேரி தடுப்பணையில் அதிகளவு தண்ணீர் செல்கிறது. இதனால் பாதுகாப்பு கருதி தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    எனவே பாதுகாப்பு கருதி பொதுமக்கள் தடுப்ப ணைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றனர்.

    இதையொட்டி கொடிவேரி தடுப்பணை நுழைவு வாயில் அடைக்கப்பட்டது. மேலும் தடுப்பணைக்கு செல்லும் வழியில் தடுப்புகள் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    • ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக சென்னிமலை பகுதியில் 93 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
    • சத்தியமங்கலம் வனப்பகுதி தொடர்மழை காரணமாக பசுமையான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை தீவிரமடைந்து பரவலாக பெய்து வருகிறது. அதேபோல் ஈரோடு மாவட்டத்திலும் நேற்று முன்தினம் மாலை மழை பரவலாக பெய்ய தொடங்கியது.

    மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் நேற்று முன்தினம் மாலை பெய்ய தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. பின்னர் மழையின் தாக்கம் குறைய தொடங்கியதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

    இந்நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் 2-வது நாளாக காலை 8 மணி முதல் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இடையிடையே கனமழையும் பெய்தது.

    இடைவிடாமல் பெய்த மழையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டனர். நேற்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மழை காரணமாக முக்கிய சாலை கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

    கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக சென்னிமலை பகுதியில் 93 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    இதேபோல் கொடுமுடி, மொடக்குறிச்சி, ஈரோடு, பெருந்துறை, நம்பியூர், கவுந்தப்பாடி, கொடிவேரி, பவானி, சத்தியமங்கலம், பவானிசாகர், அம்மா பேட்டை, வரட்டுபள்ளம், குண்டேரி பள்ளம் என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை கொட்டி தீர்த்தது.

    கனமழை காரணமாக இரவு நேரத்தில் கடும் குளிர் காற்று வீசியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    தொடர்ந்து இன்று 3-வது நாளாக ஈரோடு மாநகர் பகுதி, கொடுமுடி, சிவகிரி, மொடக்குறிச்சி கோபி. பெருந்துறை. அந்தியூர் பகுதிகளில் மழை பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் இன்று காலையும் மக்கள் கடும் அவதி அடைந்தனர். வெளியே எங்கும் செல்லா மல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

    சத்தியமங்கலம் வனப்பகுதி தொடர்மழை காரணமாக பசுமையான சூழ்நிலை நிலவி வருகிறது. தாளவாடிய மலைப்பகுதியில் ஆங்காங்கே புதிய அருவிகள் தோன்றியுள்ளன. வனப்பகுதியில் சில இடங்களில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு :

    சென்னிமலை-93, கொடுமுடி-67, மொடக் குறிச்சி-63, ஈரோடு-56, பெருந்துறை-54, எலந்த குட்டைமேடு-52.60, நம்பியூர்-52, கவுந்தப்பாடி-49.20, கொடிவேரி-45, பவானி-44.4, அம்மாபேட்டை-39.40, சத்தியமங்கலம்-37, பவானிசாகர்-34.80, கோபி-32, வரட்டு பள்ளம்-31.60, குண்டேரி பள்ளம்-28.60. மாவட்டம் முழுவதும் 815.60 மி.மீ. மழை கொட்டி தீர்த்தது.

    • இன்று அதிகாலை திருச்சியில் இருந்து தாமரைக்கரை, பர்கூர் வழியாக மைசூருக்கு செல்வதற்காக காரில் 5 பேர் வந்தனர்.
    • அப்போது மழையின் காரணமாக சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகள் மோதியது

    அந்தியூர், நவ. 12-

    அந்தியூர்-பவானி சாலையில் விபத்துக்களை தடுப்பதற்காக சாலையின் மையப்பகுதியில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை திருச்சியில் இருந்து தாமரைக்கரை, பர்கூர் வழியாக மைசூருக்கு செல்வதற்காக காரில் 5 பேர் வந்தனர்.

    அப்போது மழையின் காரணமாக சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகள் மோதியது. இதனால் காரின் முன் பகுதியில் உள்ள ஏர்பேக் ஓப்பன் ஆனதால் காரில் வந்த 5 பேருக்கும் எந்தவித காயங்களும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர்.

    இது குறித்து உடனடியாக அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீ சார் சம்பவ இடத்திற்கு வந்து பொக்லைன் எந்திரம் மூலம் காரை அகற்றி சாலையின் பக்கவாட்டில் எடுத்து வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து அவரது பட்டியில் இருந்த ஆடுகளை பிடித்து சென்றனர்.
    • வரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆடு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.

    நம்பியூர்:

    நம்பியூர் அருகே உள்ள மலையபாளையம் ஏரிக்காட்டு பள்ளத்தை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 52). இவர் தனது வீட்டின் அருகே ஆடுகளை மேய்த்து விட்டு திரும்பவும் தனது வீட்டில் கொண்டு வந்து ஆடுகளை கட்டி வைத்துள்ளார்.

    அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து அவரது பட்டியில் இருந்த ஆடுகளை பிடித்து சென்றனர்.

    அதனைத் தொடர்ந்து பொன்னுச்சாமி மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆடு திருட்டில் ஈடுபட்ட வாலிபர்களை பின் தொடர்ந்து சென்றனர்.

    அப்போது திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட தட்டாங்குட்டை பகுதியில் கணேஷ் என்பவ ரது கறி கடையில் ஆடுகளை விட்டு சென்றுள்ளனர்.

    ஆடுகளை பார்த்து அடையாளம் தெரிந்து கொண்ட பொன்னு ச்சாமி கடைக்கா ரரிடம் இது எனது ஆடு என கூறியுள்ளார். கடைக்காரர் ஆட்டை 2 பேர் விட்டு சென்று ள்ளனர் என கூறினார்.

    இது சம்பந்தமாக பெருமா நல்லூர் போலீஸ் நிலையத்தில் பொன்னு ச்சாமி புகார் அளித்தார். அதன் அடிப்ப டையில் போலீசார் ஆடுகளை விட்டு சென்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தொரவலூர் பகுதியை சேர்ந்த மாணிக்கராஜ் (வயது 27), மணிகண்டன் (வயது 30) என தெரிய வந்தது.

    அதனை தொடர்ந்து திருட்டு சம்பவம் ஈரோடு மாவட்டம் வரப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடை பெற்றதால் வரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆடு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்களையும் கைது செய்து கோபிசெட்டி பாளையம் 2-வது நீதிமன்ற த்தில் ஆஜர்படுத்தி சிறை யில் அடைத்தனர்.

    • கருங்கல் பாளையம் காவிரி ரோட்டில் உள்ள ஒரு காலி இடத்தில் ஜெயின் கோவில் உண்டியல் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
    • இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு இந்திரா நகரில் வட இந்தியர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயின் மந்திர் என்ற கோவிலை அப்பகுதியில் கட்டி வழிபட்டு வந்தனர்.

    சுப்தேவ்(45) என்பவர் இந்தக் கோவிலின் பூசாரியாக உள்ளார். தினமும் அதிகாலை கோவிலைத் திறந்து பூஜைகள் செய்து இரவு 8 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுவது வழக்கம்.

    நேற்று இரவு 8 மணி அளவில் பூஜைகள் முடிந்து சுப்தேவ் கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார். இன்று அதிகாலை 4.45 மணி அளவில் மீண்டும் கோவிலை திறப்பதற்காக சுத்தேவ் வந்தார். கோவில் நுழைவாயில் கதவை திறந்து கோவில் வளாகத்திற்குள் சென்றார்.

    அங்கு கருவறையில் உள்ள கதவை திறக்க சென்றபோது ஏற்கனவே கதவு கடப்பாறை கம்பியால் உடைத்து திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே பீரோல் திறக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் கோவில் வளாகத்தில் இருந்த உண்டியல் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உண்டியலில் ரூ.50 ஆயிரம் பணம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் மூலவர் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் நகையும் திருட்டுப் போயிருந்தது.

    இது குறித்து சுப்தேவ் ஈரோடு டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த ஜெயின் கோயிலுக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    ஜெயின் கோவில் வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள் பாதுகாப்பு கருதி பொருத்தப்பட்டு இருந்தது. அந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது நள்ளிரவில் கோவில் வளாகத்திற்குள் 2 மர்ம நபர்கள் உள்ளே நுழைவதும் அவர்கள் உண்டியலை பெயர்த்து எடுத்து செல்வதும் நகைகளை திருடி செல்வதும் பதிவாகி இருந்தது.

    இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு மோப்பநாய் ஜெர்ரி வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    இந்நிலையில் இன்று காலை கருங்கல் பாளையம் காவிரி ரோட்டில் உள்ள ஒரு காலி இடத்தில் ஜெயின் கோவில் உண்டியல் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இரும்பு உண்டியலை அவர்கள் திறக்க முடியாததால் அங்கேயே போட்டு விட்டு சென்றது தெரிய வந்தது. இதனால் உண்டியலில் இருந்த பணம் தப்பியது.

    இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துணிகரை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் 105 அடியை நெருங்கி வருகிறது.
    • கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் 105 அடியை நெருங்கி வருகிறது. நேற்று மாலை முதல் நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.

    இதனால் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக உபரிநீராக 4,200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியை எந்த நேரத்திலும் எட்டும் நிலை ஏற்பட்டுள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் பவானி ஆற்றுக்கு திறந்து விட வாய்ப்புள்ளது.

    இதனையடுத்து பொதுப்பணித்துறை சார்பாக பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை பொதுப்பணி துறையினர், வருவாய் துறையினர் இணைந்து செய்து வருகின்றனர்.

    • சதிஷ்குமார் மாராங்காட்டூரில் இருந்து வள்ளிபுரம் கருக்கம் பாளையம் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.
    • சிலுவம்பாளையம் என்ற பகுதியில் வந்த போது வளைவில் திரும்பினார். மழை பெய்து கொண்டு இருந்ததால் ரோடு ஈரப்பதத்துடன் காணப்பட்டது.

    சிவகிரி:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள வள்ளிபுரம் கருக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சதிஷ்குமார் (40). எலக்ட்ரீசியன். இவர் சிவகிரி பகுதியில் லேத் பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.

    சதிஷ்குமார் நேற்று இரவு வேலை முடிந்து சிவகிரியில் இருந்து இரவு 10 மணி அளவில் காரில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது சிவகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடைவிடாமல் மழை பெய்து கொண்டு இருந்தது.

    சதிஷ்குமார் மாராங்காட்டூரில் இருந்து வள்ளிபுரம் கருக்கம் பாளையம் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது சிலுவம்பாளையம் என்ற பகுதியில் வந்த போது வளைவில் திரும்பினார். மழை பெய்து கொண்டு இருந்ததால் ரோடு ஈரப்பதத்துடன் காணப்பட்டது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த கால்வாயில் கவிழ்ந்து விபத்தானது.

    இதில் காருக்குள் இருந்த சதிஷ்குமார் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இரவு நேரம் என்பதால் இது பற்றி யாருக்கும் தெரியவில்லை. இன்று காலை அந்த பகுதிக்கு வந்த விவசாயிகள் பார்த்த போது தான் கார் வாய்க்காலில் கவிழ்ந்து கிடந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் சிவகிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் காருக்குள் பிணமாக கிடந்த சதிஷ்குமார் உடலை மீட்டனர். தொடர்ந்து கிரேன் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் வாய்க்காலில் கவிழ்ந்து கிடந்த காரை மீட்டனர்.

    தொடர்ந்து சதிஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான சதிஷ்குமாருக்கு அபிநயா என்ற மனைவியும், ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

    • அரச மர கிளைகள் மின்வயரில் உரசுவதாக கூறி சிலர்அந்த மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றுவதாக பொதுமக்களிடம் தெரிவித்து உள்ளனர்.
    • பொதுமக்கள் அரசமரத்தின் கிளைகள் அனைத்தையும் வெட்டி மொட்டையாக்கி யவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று காலை குருவரெட்டியூர் பஸ் நிலையம் முன்பு கொட்டும் மழையிலும் சாலைமறியல் செய்தனர்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருேக உள்ள குருவரெட்டியூரில் அரசமரத்து வீதி என்ற பகுதி உள்ளது. இங்கு 150 ஆண்டுகள் பழமையான ஒரு அரச மரம் உள்ளது.

    இந்த நிலையில் அரச மர கிளைகள் மின்வயரில் உரசுவதாக கூறி சிலர்அந்த மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றுவதாக பொதுமக்களிடம் தெரிவித்து உள்ளனர்.

    ஆனால் அவர் மின் வயரில் உரசும் கிளைகளை மட்டும் வெட்டாமல் மரக்கிளைகள் அனைத்தையும் வெட்டி மரத்தை மொட்டையாக்கினர்.

    இதுப்பற்றி தெரியவந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர், மற்றும் வருவாய் ஆய்வாளருக்கு தகவல் கொடுத்தனர்.

    மேலும் அவர்கள் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ.வுக்கும் தகவல் கொடுத்தனர்.

    இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அரசமரத்தின் கிளைகள் அனைத்தையும் வெட்டி மொட்டையாக்கி யவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று காலை குருவரெட்டியூர் பஸ் நிலையம் முன்பு கொட்டும் மழையிலும் சாலைமறியல் செய்தனர்.

    இதுப்பற்றி தெரியவந்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள்விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்களின் போராட்டம் காரணமாக அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

    • ஈரோடு பகுதியில் 568 ஏக்கரிலும், தாளவாடி பகுதியில் 200 ஏக்கருக்கு மேல் புதிதாக பட்டு வளர்ப்பு சாகுபடிக்குள் வந்துள்ளனர்.
    • ஈரோடு உதவி இயக்குனர் அலுவலகத்தின் கீழ் 100 விவசாயிகள், தாளவாடி பகுதியில் 15 விவசாயிகளுக்கு ரூ.52 ஆயிரம் மதிப்பில் குச்சி வெட்டும் எந்திரம், புழு வளர்ப்பு தளவாடங்கள் வழங்கப்படும்.

    ஈரோடு:

    பட்டு வளர்ச்சி துறை ஈரோடு உதவி இயக்குனர் சிவநாதன், தாளவாடி உதவி இயக்குனர் திலகவதி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் பெரும்பகுதி, திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 5,480 ஏக்கரிலும், தாளவாடி பகுதியில் 3,000 ஏக்கருக்கு மேல் மல்பெரி சாகுபடி செய்து பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது.

    நடப்பாண்டில் ஈரோடு பகுதியில் 568 ஏக்கரிலும், தாளவாடி பகுதியில் 200 ஏக்கருக்கு மேல் புதிதாக பட்டு வளர்ப்பு சாகு படிக்குள் வந்துள்ளனர்.

    தற்போது வெண் பட்டுக்கூடு ஒரு கிலோ 650 முதல் 750 ரூபாய் வரையிலான விலையில் விற்பனையாகிறது. சேதமடைந்த சுமாரான பட்டுக்கூடுகள் கூட ஒரு கிலோ 580 ரூபாய்க்கு வாங்கி செல்கின்றனர்.

    கோபிசெட்டிபாளையம், தாராபுரம், காங்கேயம் பகுதியில் 'மொபைல் மார்க்கெட்டிங் பணியாளர்கள்' நியமித்துள்ளதால் பட்டு உற்பத்தி அமைப்பு உள்ள இடத்துக்கு அருகிலேயே அவற்றை விலை நிர்ணயம் செய்து வாங்கி செல்ல ஏற்பாடு செய்கிறோம். இதனால், விவசாயிகள், வியாபாரிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கிறது.

    விவசாயிகளை ஊக்கப்படுத்தி பட்டு வளர்ப்பு சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் பட்டு வளர்ப்பு விவசாயிகளுக்கு தலா ரூ.72,500 மதிப்பிலான தளவாட கருவிகள் வழங்குகிறோம்.

    இந்தாண்டும் ஈரோடு உதவி இயக்குனர் அலுவலகத்தின் கீழ் 100 விவசாயிகள், தாளவாடி பகுதியில் 15 விவசாயிகளுக்கு ரூ.52 ஆயிரம் மதிப்பில் குச்சி வெட்டும் எந்திரம், புழு வளர்ப்பு தளவாடங்கள் வழங்கப்படும்.

    கூடுதலாக மினி கட்டர், மருந்து அடிக்கும் ஸ்பிரேயர் போன்றவை வழங்க உள்ளோம். மீதமுள்ள தொகைக்கு பிற உபகரணங்கள் வழங்கப்படும். இவற்றுக்கு டெண்டர் முடிந்துள்ளதால் விரைவில் விவசாயிகளுக்கு வழங்க உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

    • புஞ்சை புளியம்பட்டி நகராட்சி உட்பட்ட தினசரி மார்க்கெட் அருகே சாலை ஓரமாக குப்பைகள், தினக்கழிவுகள் கொட்டி கிடக்கின்றன.
    • இதனால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர்.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சை புளியம்பட்டி நகராட்சி உட்பட்ட தினசரி மார்க்கெட் அருகே சாலை ஓரமாக குப்பைகள், தினக்கழிவுகள் கொட்டி கிடக்கின்றன.

    இது மட்டுமின்றி வாரச்சந்தை, நம்பியூர் சாலை, சத்தி மெயின் ரோடு, பவானிசாகர் சாலை, திருப்பூர் ரோடு போன்ற பல பகுதிகளில் குப்பைகளும், கழிவுகளும் ஆங்காங்கே கொட்டி கிடைக்கின்றன.

    இதனால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர். இதில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் தெருவில் இருக்கும் குப்பைகளை எடுத்து வந்து ஓரிடத்தில் போட்டு தீ வைத்து விடுகின்றன.

    எனவே குப்பைகளையும், கழிவுகளையும் அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    ×