என் மலர்
நீங்கள் தேடியது "Power cut in"
- பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற 15-ந் தேதி நடைபெற உள்ளது.
சென்னிமலை:
சென்னிமலை அருகே பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
இதனால் பெருந்துறை கோட்டத்துக்கு உட்பட்ட சென்னிமலை டவுன், ஊத்துக்குளிரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பனியம்பள்ளி, தொட்டம்பட்டி, வாய்ப்பாடி புதூர், கவுண்டம்பாளையம், மாடுகட்டிபாளையம், எளையாம்பாளையம், துளுக்கம்பாளையம் மற்றும் பழனி ஆண்டவர் ஸ்டீல்ஸ் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பெருந்துறை மின்வாரிய செயற்பொறியாளர் வாசுதேவன் தெரிவித்துள்ளார்.






