என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழை
- மொடக்குறிச்சி, கொடுமுடி, ஊஞ்சலூர், சிவகிரி, அரச்சலூர், சோலார், கணபதிபாளையம், போன்ற பகுதிகளில் அதிகாலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது.
- அம்மாபேட்டை, நெரிஞ்சுபேட்டை, பவானி, சித்தோடு, கவுந்தப்பாடி, பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இரவு வரை பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. கோபிசெட்டிபாளையம், ஈரோடு, பெருந்துறை, வரட்டுப்பள்ளம், சென்னிமலை, தாளவாடி, பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
குறிப்பாக வரட்டு பள்ளம், பெரும்பள்ளம், குண்டேரி பள்ளம் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் இந்த அணைகள் தனது முழு கொள்ளளவில் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில் இன்று மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் இருந்தே சாரல் மழை பெய்து வருகிறது. ஈரோடு மாநகர பகுதியில் நேற்று மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
இன்று காலை 8.30 மணி முதல் இருந்து சாரல் மழை தொடர்ந்து பெய்தது. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், பெற்றோர்கள் கடும் அவதி அடைந்தனர்.
பள்ளிகள் அனைத்தும் செயல்பட்டதால் குழந்தைகளை மழையில் கூட்டி செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் பெற்றோர்களுக்கு ஏற்பட்டது. பல இடங்களில் பெற்றோர்கள் குடைப்பிடித்தபடி தங்களது பிள்ளைகளை மழையில் சிரமம் பட்டு பள்ளிகளுக்கு அழைத்து சென்றனர். கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் கடும் அவதி அடைந்தனர்.
இதேபோல் மொடக்குறிச்சி, கொடுமுடி, ஊஞ்சலூர், சிவகிரி, அரச்சலூர், சோலார், கணபதிபாளையம், போன்ற பகுதிகளில் அதிகாலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது.
மேலும் அம்மாபேட்டை, நெரிஞ்சுபேட்டை, பவானி, சித்தோடு, கவுந்தப்பாடி, பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:-
கோபி-8.20, ஈரோடு-6, பெருந்துறை-3, வரட்டு பள்ளம்-3.4, சென்னி மலை-2, தாளவாடி-1.60.






