என் மலர்
ஈரோடு
- ஈரோடு மேட்டூர் ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கீழ் பகுதியில் செல்போன் கடை செயல்பட்டு வருகிறது.
- மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள வணிக நிறுவன பகுதியில் நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மேட்டூர் ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கீழ் பகுதியில் செல்போன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் பங்குதாரராக ஈரோட்டை சேர்ந்த பூபதி, கோவையை சேர்ந்த தரணிதரன் உள்ளனர்.
இந்த கடையில் விலை உயர்ந்த செல்போன்கள், ஐபோன்கள், ஆண்ட்ராய்டு போன்கள் உள்ளன. ஈரோட்டை சேர்ந்த கவுதம், கார்த்திக் 2 பேர் வேலை பார்த்து வருகின்றனர். பூபதி, தரணிதரன் 2 பேரும் அவ்வப்போது செல்போன் கடைக்கு வந்து செல்வார்கள். கவுதம், கார்த்திக் 2 பேரும் தான் செல்போன் கடையை கவனித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் கடை திறக்கப்பட்டு வியாபாரம் முடிந்தவுடன் இரவு கடையை பூட்டிவிட்டு சென்று விட்டனர். இன்று காலை செல்போன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பக்கத்துக் கடையை சேர்ந்தவர்கள் இது குறித்து கார்த்திக் மற்றும் கவுதமுக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் இதுகுறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கடைக்குள் சென்று பார்த்த போது கடையில் இருந்த 50 விலை உயர்ந்த செல்போன்கள், லேப்டாப் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் கடையில் உள்ள கண்ணாடி உடைந்து சிதறி கிடந்தன. அதில் ரத்த கறையும் படிந்திருந்தன.
இதனையடுத்து கடையில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது அதில் இன்று அதிகாலை 5 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் கையில் சாக்கு பையுடன் செல்போன் கடையின் பூட்டை உடைத்து ஷட்டரை திறந்து உள்ளே செல்வதும்,
அங்கு கடையில் இருந்த கண்ணாடியை உடைத்து விலை உயர்ந்த செல்போன்கள், லேப்டாப்பை திருடி கொண்டு சாக்கு மூட்டையில் போட்டு தப்பி செல்வதும் பதிவாகி இருந்தது. தப்பி செல்லும் போது கண்ணாடி காலில் குத்தி ரத்த கறை படிந்திருந்ததும் தெரிய வந்தது.
சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை அடிப்படையாக வைத்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள வணிக நிறுவன பகுதியில் நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
- இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.05 அடியாக உள்ளது.
- பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாகவே நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்வதும் பின்னர் மழை பொலிவு இல்லாததுமாக நிலையற்ற தன்மையுடன் இருந்து வருகிறது.
இதனால் அணைக்கு ஒருநாள் நீர்வரத்து அதிகரித்தும், ஒரு நாள் நீர்வரத்து குறைந்தும் வருகிறது. இதனால் பவானிசாகர் அணை தொடர்ந்து 104 அடியில் நீடித்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.05 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,743 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2,200 கன அடி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 400 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 2,700 கனஅடி தண்ணீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது.
அனைத்து வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
ஆனால் அதே சமயம் மற்ற பிரதான அணைகளான குண்டேரிபள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 41.75 அடியிலும், பெரும்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 30.84 அடியிலும்,
வரட்டு பள்ளம் அணை தனது முழு கொள்ளளவான 33.46 அடியிலும் தொடர்ந்து நீடித்து வருகிறது.
- பனி தாக்கம் காரணமாக முருங்கைக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு முருங்கைக்காய் வரத்து குறைய தொடங்கியுள்ளது
- இதனால் இன்று காய்கறி வாங்க வந்த பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்
ஈரோடு
ஈரோடு வ. உ.சி. காய்கறி பெரிய மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு திண்டுக்கல், கிணத்துக்கடவு, மதுரை, தேனி, ஒட்டன்சத்திரம், தாளவாடி, சத்தியமங்கலம். கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. இங்கு சில்லரை மற்றும் மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வ.உ.சி காய்கறி மார்க்கெட்டிற்கு தினமும் 3 டன் முருங்கை க்காய் லோடு வருவது வழக்கம்.
இந்நிலையை கடந்த சில நாட்களாக பனி தாக்கம் காரணமாக முருங்கைக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு முருங்கைக்காய் வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதனால் முருங்கைக்காய் விலையும் கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
இன்று மார்க்கெட்டிற்கு வெறும் அரை டன் முருங்கைக்காய் மட்டுமே வரத்தாகி இருந்தன. இதனால் கடந்த மாதம் கிலோ ரூ.60-க்கு விற்ற முருங்கைக்காய் இன்று ரூ.160 முதல் ரூ.180 வரை உயர்ந்து விற்கப்பட்டு வருகிறது.
இதனால் இன்று காய்கறி வாங்க வந்த பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதேபோல் மற்ற காய்கறிகளின் விலை சற்று அதிகரித்துள்ளது.
வ.உ.சி. மார்க்கெட்டில் மற்ற காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-
பீன்ஸ்-30, வெண்டைக்காய்-30, கேரட்-60, பீட்ரூட்-60, கத்தரிக்காய்-70, புடல ங்காய்-40, பீர்க்கங்காய்-40, பாவைக்காய்-40, சுரைக்காய்-20, மிளகா-50, தக்காளி-ரூ.10 முதல் ரூ.15, சின்னவெங்காயம்-80, பெரியவெங்காயம்-40, முட்டைகோஸ்-20, காலிபிளவர்-40, உருளைக்கிழங்கு-40.
- ஈரோடு பஸ் நிலையத்தில் திருச்சி பஸ் ரேக்கில் ஈரோட்டை சேர்ந்த முதியவர் ஒருவர் பஸ்சுக்காக காத்திருந்தார்.
- அவரது அருகே நின்றிருந்த மர்ம நபர் ஒருவர் பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தை திருடி சென்றுள்ளார்.
ஈரோடு:
ஈரோடு பஸ் நிலையத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். சமீப காலமாக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் பயணிகளிடம் செல்போன், பணம் திருடி கொண்டு செல்கின்றனர். குறிப்பாக முதியவர்களிடம் அதிக அளவில் கைவரிசை காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு ஈரோடு பஸ் நிலையத்தில் திருச்சி பஸ் ரேக்கில் ஈரோட்டை சேர்ந்த முதியவர் ஒருவர் பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது அவரது அருகே நின்றிருந்த மர்ம நபர் ஒருவர் முதியவரின் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.6,800 ரொக்க பணத்தை பாக்கெட்டில் பிளேடு போட்டு திருடி சென்றுள்ளார். பின்னர் முதியவர் தான் வைத்திருந்த பணம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து அந்த முதியவர் ஈரோடு பஸ் நிலையத்தில் உள்ள புறநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன் பேரில் போலீசார் முதியோரிடம் விசாரணை நடத்தி பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சியின் பதிவுகளை கைப்பற்றி மர்ம நபரை தேடி வருகின்றனர்.
இதையடுத்து ஈரோடு பஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் போலீஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
- சேனாதிபதிபாளையத்தில் அமைந்துள்ள வட்டக் கிடங்கு மற்றும் ரேஷன் கடைகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் டாக்டர்.பிராபகர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- இதில் உணவு பொருட்களின் இருப்பு மற்றும் தரத்தினையும் மற்றும் அங்கு பராமரிக்க ப்பட்டு வரும் கோப்புகளையும் ஆய்வு செய்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சேனாதிபதிபாளையத்தில் அமைந்துள்ள வட்டக் கிடங்கு மற்றும் ரேஷன் கடைகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் டாக்டர்.பிராபகர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் ஈரோடு சேனாதிபதிபாளையம் பகுதியில் அமைந்துள்ள வட்ட செயல்முறை கிடங்கு மற்றும் சாக்குக்கிடங்கு ஆகியவற்றையும், ஈரோடு கள்ளுக்கடை மேடு பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் எண் -2 மற்றும் எண்-7 ஆகியவற்றை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் உணவு பொருட்களின் இருப்பு மற்றும் தரத்தினையும் மற்றும் அங்கு பராமரிக்க ப்பட்டு வரும் கோப்புகளையும் ஆய்வு செய்தார்.
மேலும் ஈரோடு சேனாதிபதிபாளையம் கிடங்கில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர் களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
ஆய்வின்போது ஈரோடு மண்டல மேலாளர் (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம்)முருகேசன், துணை மேலாளர் (தரக்கட்டுப்பாடு) மனோகரன், ஈரோடு வட்ட வழங்கல் அலுவலர் அன்னபூரணி உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- பிரச்சார வாகனத்தை அமைச்சர் முத்துசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- மொத்தம் 80 பகுதிகளில் வாகனங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப் படவுள்ளது.
ஈரோடு:
வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம் தொடர்பாக திட்ட விளக்க பிரச்சார வாகனத்தை அமைச்சர் முத்துசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும் தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் நடப்பு 2022-23ம் ஆண்டில் உணவு மற்றும் ஊட்டச்கத்துப் பாதுகாப்புத் திட்டம் ஈரோடு மாவட்டத்தில் ரூ.91.8 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ளது.
இதன் ஒரு இனமாக சோளம், கம்பு, ராகி, வரகு, குதிரைவாலி உள்ளிட்ட சத்துமிகு சிறுதானியங்கள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் 80 இடங்களில் திட்ட விளக்கப் பிரச்சார வாகனம் இயக்கப்படவுள்ளன.
இந்த வாகனங்களில் சோளம், கம்பு, இராகி உள்ளிட்ட சிறுதானி யங்களின் சிறப்புகள், மானிய விவரங்கள், பயிர் பாதுகாப்பு, மக்காச்சோள படைப்புழு கட்டுப்பாட்டு முறைகள் உள்ளிட்ட விவரங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
மேலும் சத்துமிகு சிறுதானியங்கள் குறித்தான ஒலி பெருக்கி விளம்பரங்கள் செய்யப்படுவதுடன், அவை தொடர்பான துண்டறிக்கைகளும் விவசாயிகளுக்கு விநியோகிக்கப் படவுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களிலும் முதன்மையாக விவசாயம் செய்யப்படும் கிராமங்களில் இந்த பிரச்சார வாகனங்கள் இயக்கப்படவுள்ளன. மொத்தம் 80 பகுதிகளில் வாகனங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப் படவுள்ளது.
முன்னதாக, தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் பணியிடத்தில் விபத்தில் மரணமடைந்த 8 கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.40 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின் போது கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ., ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் கஸ்தூரி,
இணை இயக்குநர் (வேளா ண்மை) சின்னச்சாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகேசன், துணை இயக்குநர்கள் ஆசைத்தம்பி (வேளாண்மை), சண்முக சுந்தரம் (வேளாண்மை மற்றும்
விற்பனை வணிகத்துறை), மரகதமணி (தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை) சாவித்திரி (செயலாளர்- வேளாண் விற்பனை குழு), விஸ்வ நாதன் (செயற்பெறியாளர் - வேளாண் பொறியியல் துறை), தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) முருகேசன், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சம்பவத்தன்று பிகாஸ் போக்தாவை விஷ பூச்சி ஒன்று கடித்து விட்டது.
- சிறிது நேரத்தில் பிகாஸ் போக்தாவுக்கு வலது கை முழுவதும் வலி ஏற்பட்டு வீங்கி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு, டிச. 6-
ஒடிசா மாநிலம் பவாத் மாவட்டம் தாமோதர்பூர் பகுதியை சேர்ந்தவர் பிகாஸ் போக்தா (20).
இவர் ஈரோடு மாவட்டம் கஸ்பா பேட்டை அடுத்த எம்.எஸ்.மங்கலம் கிராமத்தில் வாவி காட்டு வலசு பிரிவில் உள்ள ஒரு தனியார் மில்லி தங்கி 5 வருடமாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று பிகாஸ் போக்தாவை விஷ பூச்சி ஒன்று கடித்து விட்டது.
இதனையடுத்து அவர் போன் மூலம் தனது அண்ணன் தரணி போக்தாவுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் சிறிது நேரத்தில் பிகாஸ் போக்தாவுக்கு வலது கை முழுவதும் வலி ஏற்பட்டு வீங்கி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
உடனடி யாக அவரது அண்ணன் தம்பியை மீட்டு சிகிச்சைக்காக கொல்லம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு பிகாஸ் போக்தா அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- கார்த்திகை மாதத்தை முன்னிட்டு அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களால் கோவில் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.
- பவானி போலீசார் சங்கமேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன் பகுதி, பரிகார மண்டப பகுதி என பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
பவானி:
பவானி சங்கமேஸ்வரர் கோவில் மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த கோவிலாக விளங்கி வருகிறது.
கோவில் பின்பகுதியில் உள்ள கூடுதுறையில் உள்ளூர், வெளியூர், வெளி மாநில பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.
கார்த்திகை மாதத்தை முன்னிட்டு கேரளாவில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பலர் கோவிலுக்கு வருகை தரும் காரணத்தால் கோவில் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.
இந்நிலையில் பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று பவானி போலீசார் சங்கமேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன் பகுதி, கோவில் வளாகம், பரிகார மண்டப பகுதி என பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அதேபோல் பக்தர்கள் கொண்டு வரும் ஜேன் பேக்குகள், உடமைகளை தீவிர பரிசோதனை செய்து கோவிலுக்கு அனுப்பி வைத்தனர்.
- ராஜேந்திரன் வீட்டில்யாரும் இல்லாத போது விஷம் குடித்து விட்டார்.
- இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள குள்ளம் பாளையம் பகுதியை சேர்ந்த வர் ராஜேந்திரன் (வயது 56). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர் அந்த கம்பெனிக்கு வேலை க்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். மேலும் பல்வேறு இடங்களில் அவர் வேலை தேடி பார்த்தும் எந்த வேலையும் கிடைக்க வில்லை.
இதை தொடர்ந்து வீட்டில் இருந்து வந்த ராஜே ந்திரன் வேலை இல்லாததால் மனவேதனை அடைந்தார்.
இந்த நிலையில் ராஜேந்திரன் வீட்டில்யாரும் இல்லாத போது விஷம் குடித்து விட்டார். இதைகண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இந்த சிலை உலக சாதனையில் இடம் பிடித்துள்ளது.
- பைரவர் என்றால் பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்றுபொருள்.
- இந்த கோவில் 125 அடி நீளத்தில் கட்டப்பட்டுள்ளது.
கொடுமுடி :
காலபைரவர்...சிவபெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர். சிவன் கோவிலின் வடகிழக்குப்பகுதியில் நின்றகோலத்தில் காட்சி தருபவர். பன்னிரு கைகளுடன்,நாகத்தை பூணுலாகவும், சந்திரனை தலையில் வைத்தும், சூலாயுதம், பாசகயிறு,அங்குசம் ஆகிய ஆயுதங்களை தாங்கியும் காட்சி தருபவர்.
கால பைரவர் சனியின் குருவாகவும், 12 ராசிகள்,8 திசைகள், பஞ்ச பூதங்கள், நவக்கிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துப்பராகவும் கூறப்படுகிறது.
காசியில் கால பைரவருக்கு 8 இடங்களில் கோவில்கள் உள்ளது. இதே போல் தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் காலபைரவர் கோவில் உள்ளது. பைரவர் என்றால் பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்றுபொருள். காலத்தின் கடவுளான கால பைரவர் தலை விதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர். இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட காலபைரவருக்கு ஈரோட்டில் பிரமாண்ட சிலையுடன் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு அவல்பூந்துறை அருகே உள்ள ராட்டை சுற்றி பாளையம் என்ற இடத்தில் ஸ்வர்ண பைரவ பீடம் சார்பில் கடந்த 2014-ம்ஆண்டு காலபைரவர் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கியது. இந்த கோவில் 125 அடி நீளத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் எங்கும் இல்லாத வகையில் நுழைவு வாயிலில் கோபுரத்துக்கு பதிலாக பிரமாண்ட காலபைரவர் சிலை கட்டப்பட்டுள்ளது.
இதற்காக 34 அடி உயரத்தில் நுழைவு வாயில் அமைக்கப்பட்டு அதற்கு மேல் 39 அடி உயரத்தில் பிரமாண்ட காலபைரவர் சிலை அமைக்கப்பட்டு ள்ளது. 4 கைகளுடன் உடுக்கை, வேல், சூலம், அட்சயபாத்திரம் ஏந்தியவாறு நாயுடன் காலபைரவர் சிலை அமைக்கப் பட்டுள்ளது. கோவிலின் நுழைவு வாயில் மற்றும் காலபைரவர் சிலை மொத்தம் 73அடியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை மட்டும் ரூ. 1 கோடியே 80 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 8 ஆண்டுகளாக காலபைரவர் சிலை அமைக்கும் பணி நடந்து முடிந்துள்ளது. இந்த கோவிலில் மூலவராக ஸ்வர்ண ஹர்சன பைரவர் உள்ளார். அது தவிர சிவனின் 64 வகையான பைரவ அவதாரங்களில் 62 வகையான பைரவர் சிலை கோவிலின் இருபக்கமும் அமைக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே மிக உயரமான இந்த கால பைரவர் சிலைக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. ஆனாலும் தற்போதே பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் காலபைரவரை காண திரண்டு வருகிறார்கள்.
இதற்கிடையே இந்த சிலை யுனிக் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் எனும் உலக சாதனை புத்தக்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சாதனை விருதை அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் யுனிக் சாதனை புத்தகம் பஞ்சாப் அமைப்பின் தென்னக பொறுப்பாளர் ரகுமான் பைரவர் ஆலயத்தின் பொறுப்பாளரான விஜய்சுவாமியிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கணேச முர்த்தி எம்.பி., மொடக்குறிச்சி சரஸ்வதி எம்.எல்.ஏ., மேயர் நாகரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பிரம்ம கமலம் பூ ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அதுவும் இரவில் மட்டும் பூக்கும் அதிசயம் வாய்ந்த பூவாகும்.
- கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் பிரம்ம கமலம் செடியை வைத்தார்.
ஈரோடு:
பிரம்ம கமலம் பூ ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அதுவும் இரவில் மட்டும் பூக்கும் அதிசயம் வாய்ந்த பூவாகும். இந்த பூ இரவில் பூத்து விடிவதற்குள் வாடி விடும்.
இந்த பிரம்ம கமலம் பூ செடியை ஈரோடு வீரப்பம்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் தனது வீட்டில் வளர்த்து வருகிறார். இவர் பல்வேறு வகையான பூச்செடிகளை வளர்த்து வருகிறார்.
இதில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் பிரம்ம கமலம் செடியை வைத்தார். இந்நிலையில் இந்த செடியில் நேற்று இரவு முதல் முறையாக மொட்டு வைத்து இரவு சுமார் 11.30 மணியளவில் பூத்தது. இதைப்பார்த்த சதீஷ்குமார், பாரதி தம்பதியினர் பிரம்ம கமலம் பூ இருக்கும் தொட்டியில் தீபம் ஏற்றி வழிபட்டனா்.
இந்த பூ பூக்கும்போது பார்த்தால் பல நன்மைகள் நடக்கும் என்பது ஐதீகம். இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் பிரம்ம கமலம் பூ பூத்தவுடன் வந்து ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனா். மேலும் இந்த பூவில் இருந்து நறுமணம் அந்த வீதி முழுக்க வீசியது.
- உடல் நிலை மேலும் மோசமான–தால் சிறுமியை கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை அளிப்பதற்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
- ஆம்புலன்ஸ் மேட்டுக்கடை அருகே ரவுண்டானா பகுதியில் சென்ற போது விபத்தில் சிக்கியது.
மொடக்குறிச்சி:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை சேர்ந்தவர் கோபால–கிருஷ்ணன்(25).கூலி தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கோபால கிருஷ்ணன் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் சிறுமி கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அந்த சிறுமி பிரசவத்திற்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ–மனையில் அனுமதிக்கப்ப ட்டார்.
கடந்த 24-ந் தேதி அந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இதில் சிறுமியின் நிலைமை மோசமானதால் ஈரோட்டில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்டார்.
அங்கு உடல் நிலை மேலும் மோசமான–தால் சிறுமியை கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை அளிப்பதற்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
ஆம்புலன்ஸ் மேட்டுக்கடை அருகே ரவுண்டானா பகுதியில் சென்ற போது விபத்தில் சிக்கியது.
இதில் அந்த சிறுமி படுகாயம் அடைந்தார். உடனடியாக அந்த சிறுமியை மீட்டு வேறொரு ஆம்புலன்ஸ் மூலம் கடந்த 27-ந் தேதி அதிகாலை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே சிறுமிக்கு திருமணம் நடந்தது தொடர்பாக ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன் மொடக்கு றிச்சி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் கோபாலகிருஷ்ணன் மீது போக்சோ பிரிவின் கீழ் மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதேபோல் ஆம்பு லன்சை அஜாக்கிரதையாக ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தி உயிர் இழப்புக்கு காரணமான தனியார் மருத்துவமனை டிரைவர் சரத் என்பவர் மீது தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.






