விஷ பூச்சி கடித்து வட மாநில வாலிபர் பலி

சம்பவத்தன்று பிகாஸ் போக்தாவை விஷ பூச்சி ஒன்று கடித்து விட்டது.சிறிது நேரத்தில் பிகாஸ் போக்தாவுக்கு வலது கை முழுவதும் வலி ஏற்பட்டு வீங்கி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
விஷ பூச்சி கடித்து வட மாநில வாலிபர் பலி
Published on

ஈரோடு, டிச. 6-

ஒடிசா மாநிலம் பவாத் மாவட்டம் தாமோதர்பூர் பகுதியை சேர்ந்தவர் பிகாஸ் போக்தா (20).

இவர் ஈரோடு மாவட்டம் கஸ்பா பேட்டை அடுத்த எம்.எஸ்.மங்கலம் கிராமத்தில் வாவி காட்டு வலசு பிரிவில் உள்ள ஒரு தனியார் மில்லி தங்கி 5 வருடமாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று பிகாஸ் போக்தாவை விஷ பூச்சி ஒன்று கடித்து விட்டது.

இதனையடுத்து அவர் போன் மூலம் தனது அண்ணன் தரணி போக்தாவுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் சிறிது நேரத்தில் பிகாஸ் போக்தாவுக்கு வலது கை முழுவதும் வலி ஏற்பட்டு வீங்கி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

உடனடி யாக அவரது அண்ணன் தம்பியை மீட்டு சிகிச்சைக்காக கொல்லம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு பிகாஸ் போக்தா அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

X

Maalai Malar
www.maalaimalar.com