search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nutritional Security Program"

    • பிரச்சார வாகனத்தை அமைச்சர் முத்துசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • மொத்தம் 80 பகுதிகளில் வாகனங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப் படவுள்ளது.

    ஈரோடு:

    வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம் தொடர்பாக திட்ட விளக்க பிரச்சார வாகனத்தை அமைச்சர் முத்துசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மேலும் தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் நடப்பு 2022-23ம் ஆண்டில் உணவு மற்றும் ஊட்டச்கத்துப் பாதுகாப்புத் திட்டம் ஈரோடு மாவட்டத்தில் ரூ.91.8 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ளது.

    இதன் ஒரு இனமாக சோளம், கம்பு, ராகி, வரகு, குதிரைவாலி உள்ளிட்ட சத்துமிகு சிறுதானியங்கள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் 80 இடங்களில் திட்ட விளக்கப் பிரச்சார வாகனம் இயக்கப்படவுள்ளன.

    இந்த வாகனங்களில் சோளம், கம்பு, இராகி உள்ளிட்ட சிறுதானி யங்களின் சிறப்புகள், மானிய விவரங்கள், பயிர் பாதுகாப்பு, மக்காச்சோள படைப்புழு கட்டுப்பாட்டு முறைகள் உள்ளிட்ட விவரங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

    மேலும் சத்துமிகு சிறுதானியங்கள் குறித்தான ஒலி பெருக்கி விளம்பரங்கள் செய்யப்படுவதுடன், அவை தொடர்பான துண்டறிக்கைகளும் விவசாயிகளுக்கு விநியோகிக்கப் படவுள்ளன.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களிலும் முதன்மையாக விவசாயம் செய்யப்படும் கிராமங்களில் இந்த பிரச்சார வாகனங்கள் இயக்கப்படவுள்ளன. மொத்தம் 80 பகுதிகளில் வாகனங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப் படவுள்ளது.

    முன்னதாக, தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் பணியிடத்தில் விபத்தில் மரணமடைந்த 8 கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.40 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியின் போது கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ., ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் கஸ்தூரி,

    இணை இயக்குநர் (வேளா ண்மை) சின்னச்சாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகேசன், துணை இயக்குநர்கள் ஆசைத்தம்பி (வேளாண்மை), சண்முக சுந்தரம் (வேளாண்மை மற்றும்

    விற்பனை வணிகத்துறை), மரகதமணி (தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை) சாவித்திரி (செயலாளர்- வேளாண் விற்பனை குழு), விஸ்வ நாதன் (செயற்பெறியாளர் - வேளாண் பொறியியல் துறை), தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) முருகேசன், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×