என் மலர்tooltip icon

    ஈரோடு

    • மூதாட்டி சுப்புலட்சுமி இன்று காலை வழக்கம் போல் கியாஸ் அடுப்பில் குக்கரில் சமையல் செய்தார்.
    • குக்கர் வெடித்து தீ பிடித்து மூதாட்டி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள முருகன்புதூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் நஞ்சப்பன். இவரது மனைவி சுப்புலட்சுமி (73). இவர்களுக்கு குணசேகரன்(50), சசிகுமார்(45) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். நஞ்சப்பன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுப்புலட்சுமியை விட்டு பிரிந்து சென்றார். இதையடுத்து சுப்புலட்சுமி தனது மூத்த மகன் குணசேகரன் பேரன் ரவி சேகர் ஆகியோருடன் வசித்து வந்தார். குணசேகரன் கடந்த சில ஆண்டுகளாக நடக்க முடியாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார்.

    மூதாட்டி சுப்புலட்சுமி இன்று காலை வழக்கம் போல் கியாஸ் அடுப்பில் குக்கரில் சமையல் செய்தார். அப்போது எதிர்பாராத வகையில் திடீரென குக்கர் வெடித்து தீ பிடித்தது.

    அப்போது மூதாட்டி சுப்புலட்சுமியின் சேலையிலும் தீ பிடித்து எரிந்தது. இதனால் அவர் அலறி சத்தம் போட்டார். இதையடுத்து நடக்க முடியாமல் வீட்டில் இருந்த அவரது மகன் குணசேகரன் தவழ்ந்து வந்து தனது தாயை காப்பாற்ற முயன்றார்.

    ஆனால் அதற்குள் சுப்புலட்சுமி உடல் முழுவதும் தீ பிடித்து அவரது மகன் கண் முன்னே உடல் கருகி பலியானார். பின்னர் அக்கம் பக்கத்தினர் ஒடி வந்து சுப்புலட்சுமி மீது எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுப்புலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி செட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    குக்கர் வெடித்து தீ பிடித்து மூதாட்டி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
    • ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் பணியாற்றும் 700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன கோஷம் எழுப்பினர்

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் ஈரோடு கலெக்டர் அலுவலகம், 14 ஒன்றியங்கள் என மாவட்டம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு இரவு நேர ஆய்வு கூட்டம், விடுமுறை நாளில் கள ஆய்வுக்கு அழைப்பதை கைவிட வேண்டும். அனைத்து வட்டாரத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    பிற துறை பணிகளில் ஈடுபடும் போது இத்துறைக்கான பணிகளை செய்ய முடியவில்லை. இவற்றை கைவிட வலியுறுத்தியும், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டினை திரும்ப பெற வேண்டும் உள்பட 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2-ந் தேதி முதல் விதிப்படி வேலை செய்தல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்தப் போராட்டம் வரும் 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்நிலையில் இந்த 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு கலெக்டர் அலுவலகம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் பணியாற்றும் 700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன கோஷம் எழுப்பினர்.

    இந்நிலையில் வரும் 10-ந் தேதி முதல் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

    • ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிபவர் தினேஷ் குமார்(32). இவர் சில தினங்களுக்கு முன்பு பொது இடத்தில் பொதுமக்களிடம் ஒழுங்கினமாக நடந்து கொண்டதாக புகார் வந்தது
    • 13 போலீசார் தாமதமாக ஆஜராகினர். தாமதமாக பணிக்கு வந்த இவர்கள் ஆனைக்கல் பாளையம் ஆயுதப் படைக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்ப ட்டுள்ளனர்

    ஈரோடு,

    ஈரோடு ஆணைக்கல் பாளையம் ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிபவர் தினேஷ் குமார்(32). இவர் சில தினங்களுக்கு முன்பு பொது இடத்தில் பொதுமக்களிடம் ஒழுங்கினமாக நடந்து கொண்டதாக புகார் வந்தது.

    இது தொடர்பான விசாரணை நடந்து வந்த நிலையில் தினேஷ்குமாரை தற்காலிகமாக பணி நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவிட்டார்.

    இந்நிலையில் பொங்கல் தொகுப்பில் தேங்காயை சேர்த்து வழங்க வலியுறுத்தி சித்தோடு நால்ரோடு பகுதியில் நேற்று பாரதிய ஜனதா விவசாயின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்ட து.

    இதற்கான பாதுகாப்பு பணிக்கு செல்ல கோபி மற்றும் பெருந்துறை சப்-டிவிஷனில் போலீசார் காலை 6 மணிக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டது . ஆனால் 13 போலீசார் தாமதமாக ஆஜராகினர். தாமதமாக பணிக்கு வந்த இவர்கள் ஆனைக்கல் பாளையம் ஆயுதப் படைக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்ப ட்டுள்ளனர்.  

    • ஈரோடு கோட்டை ஈஸ்வ ரன் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 28-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது
    • ஊர்வலம் ஈஸ்வரன் கோவில் வழியாக சென்று மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பார்க், காமராஜர் வீதி வழியாக மீண்டும் கோவிலில் திருவீதி உலா வந்து நிறைவடைந்தது

    ஈரோடு,

    ஈரோடு கோட்டை ஈஸ்வ ரன் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 28-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    இதையொட்டி கோவி லில் திருவெம்பாவை மாணிக்க வாசகர் உற்சவம் நடைபெற்றது. இதை தொடர்ந்து நேற்று அதிகாலை பிச்சாண்டவர் உற்சவம் நடைபெற்றது. பிச்சாண்டவருக்கு அபிஷே கம், தீபாராதனை நடை பெற்றது.

    உச்சிக்கால பூஜை நடை பெற்ற பிறகு பிச்சாண்டவர் புறப்பாடு வீதி உலா நடை பெற்றது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீவாருணாம்பிகா சமேத ஆருத்ரா கபாலீஸ்வர பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணி அளவில் சிவகாமி அம்பிகை சமேத நடராஜர் பெருமாளு க்கு ஆருத்ரா அபிஷேகம் தொடர்ந்து ஆருத்ரா தரிசன வைபவம் நடைபெற்றது.

    இதில் நெய் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், சந்தன அபிஷேகம், பஞ்சாமிர்தம் அபிஷேகம் உட்பட 14 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 63 நாயன்மாரு க்கும் அபிஷேகம், மகாதீபா ராதனை நடந்தது.

    இதனைத் தொடர்ந்து சாமி வீதி உலா நடைபெற்றது. ஊர்வலம் ஈஸ்வரன் கோவில் வழியாக சென்று மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பார்க், காமராஜர் வீதி வழியாக மீண்டும் கோவிலில் திருவீதி உலா வந்து நிறைவடைந்தது.

    இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று நடராஜரை வழிபாடு செய்தனர். இதைத் தொடர்ந்து இன்று மாலை ஊஞ்சல் உற்சவம் நடை பெறுகிறது.

    • நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணை தொடர்ந்து உயர்ந்து வந்தது
    • பவானிசாகர் அணையிலிருந்து 2,600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது

    ஈரோடு,

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்நிலையில் அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்கு தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.14 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 882 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1,700 கன அடியும், தடப்பள்ளி அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும், பவானி ஆற்றுக்கு குடிநீருக்காக 100 கன அடியும் என மொத்தம் பவானிசாகர் அணையிலிருந்து 2,600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • மரியதாஸ் நேற்று முன் தினம் வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த விஷ மாத்திரையை சாப்பிட்டு விட்டதாக மனைவி அமலோற்பவ மேரியிடம் கூறியுள்ளார்.
    • சிகிச்சை பலனின்றி மரியதாஸ் உயிரிழந்தார்

    ஈரோடு,

    ஈரோடு, கள்ளுக்கடைமேடு, ஜீவானந்தம் வீதியைச் சேர்ந்தவர் அமலோற்பவமேரி (46). இவரது கணவர் மரியதாஸ் (53). தொழிலாளி. இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.

    ஈரோடு நாடார்மேடு பகுதியில் அமலோற்பவமேரி பெண்களுக்கான அழகு நிலையம் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில், மரியதாஸ் நேற்று முன் தினம் வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த விஷ மாத்திரையை சாப்பிட்டு விட்டதாக மனைவி அமலோற்பவ மேரியிடம் கூறியுள்ளார்.

    உடனடியாக அவர், கணவரின் தம்பி அற்புதராஜின் உதவியுடன் மரியதாஸை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரியதாஸ் உயிரிழந்தார். இதுகுறித்து, ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 55 வயது மதிக்க த்தக்க முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது
    • அந்த நபர் ஓடும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது

    ஈரோடு,

    ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட புகளூர்- கொடு முடி ரெயில் நிலையங்களு க்கிடையே நொய்யல் ரெயிவே பாலத்தில் சம்பவ த்தன்று 55 வயது மதிக்க த்தக்க முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ரெயில்வே போலீசார் சம்பவ இடத்து க்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசார் அந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர்.

    அந்த முதியவரிடம் இருந்த பேப்பரில் மனைவி பெயர் சித்ரா, மகன்கள் பூபதி, பாலமுருகன் மகள்கள் மோனிகா, யாஷிகா என பெயர் எழுதி இருந்தது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என தெரியவில்லை.

    போலீசாரின் முதற் கட்ட விசாரணையில் அந்த நபர் ஓடும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தில் 149 கோவில்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன
    • 149 கோவில்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் என ரூ.2.98 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.

    ஈரோடு,

    இந்து சமய அறநிலைத்துறை ஈரோடு மண்டல இணை ஆணையர் பரஞ்சோதி கூறியதாவது:-

    ஈரோடு மண்டலத்தில் உள்ள வருவாய் இல்லாத சிறிய கோவில்களாக இருக்கும் ஆதிதிராவிடர் பகுதி மற்றும் கிராம கோவில்களில் திருப்பணி மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிதி உதவி வழங்கப்படுகிறது.

    அந்த வகையில் மண்டலத்தில் உள்ள ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தில் 149 கோவில்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 35 கோவில்கள், ஆதிதிராவிடர் பகுதியில் 50 கோவில்களும் நாமக்கல் மாவட்டத்தில் 64 கோவில்கள் என மொத்தம் 149 கோவில்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் என ரூ.2.98 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பெருந்துறை பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனி யார் டெக்ஸ்டைல் நிறு வனத்திற்கு வெடிகுண்டு வைக்க போவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது
    • சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள வாடகை தாரர்களை காலி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது

    பெருந்துறை,

    பெருந்துறை பழைய பஸ் நிலையம் பகுதியில் செல்லா ண்டி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 3 பெட்ரோல் பங்குகளும், ஒரு தனியார் பள்ளியும் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் செல்லா ண்டி அம்மன் கோவில் செயல் அலுவலர் சுரேஷ் கண்ணனுக்கு ஒரு மர்ம கடிதம் வந்தது.

    பெயர் விலாசம் இல்லாத அந்த கடிதத்தில் பெருந்துறை பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனி யார் டெக்ஸ்டைல் நிறு வனத்திற்கு வெடிகுண்டு வைக்க போவதாகவும், இதனால் அந்த நிறுவன த்தின் அருகில் இருக்கும் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வாடகை அடிப்படையில் இயங்கி வரும் 3 பெட்ரோல் பங்கு கள் மற்றும் தனியார் பள்ளி பாதிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    மேலும் சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள வாடகை தாரர்களை காலி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. உடனடியாக இது தொட ர்பாக கோவில் செயல் அலுவலர் சுரேஷ் கண்ணன் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இது குறித்து பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து மிரட்டல் கடிதம் அனுப்பியது யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகிறார்.

    • கஸ்தூரிதேவி உள்ளிட்ட 14 பேர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனிடம், மோசடி நபரான நவநீதகிருஷ்ண னிடம் இருந்து பணத்தை பெற்றுத் தரக்கோரி மனு அளித்தனர்
    • எஸ்.பி.யின் உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நவநீத கிருஷ்ணன் கைது செய்து சிறையில் அடைக்கப்ப ட்டுள்ளார்

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் பச்சமலை அடிவாரத்தைச் சேர்ந்தவர் கஸ்தூரிதேவி. ஆடிட்டர் அலுவலகம் ஒன்றில் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார். நண்பர் ஒருவர் மூலம் திருப்பூர் ராயபுரத்தைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (45) என்பவர் இவரிடம் அறிமுகம் ஆனார்.

    தனக்கு தென்னக ரயில்வேயில் பணிபுரிந்து வரும் முக்கிய பொறுப்பில் உள்ள உயரதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், அவர்களின் உதவியுடன் ரெயில்வேயில் பணி வாங்கித் தர முடியும் எனக் கூறி கஸ்தூரிதேவியை நம்ப வைத்துள்ளார்.

    குறிப்பாக, ரெயில்வேயில் பொறியாளர் பணியிடங்களான இளநிலை பொறியாளர், முதுநிலை பொறியாளர், அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களை தன்னால் வாங்கித் தர முடியும் என்று கூறியுள்ளார்.

    உங்களுக்குத் தெரிந்தவர்கள், உறவினர்களிடம் கூறினால் அவர்களுக்கு பணி வாங்கித் தருவதாகவும், ஒவ்வொரு பணியிடத்துக்கும் குறிப்பிட்ட தொகை செலவாகும் என்றும் கூறியுள்ளார். அதன்படி ஒவ்வொரு வேலைக்கும் ரூ. 10 முதல் ரூ.25 லட்சம் வரையிலும் செலவாகும் என்று கூறியுள்ளார்.

    இந்தத் தொகையை கொடுத்தால் உடனடியாக பணிநியமன ஆணையை பெற்றுத் தருவதாகவும் நவநீதகிருஷ்ணன் ஆசைவார்த்தைகளை கூறியுள்ளார். இதை நம்பி கஸ்தூரிதேவி, அவரின் நண்பர்கள், உறவினர்கள் என 14 பேரிடம் இருந்து பல தவணைகளாக பணத்தை பெற்றுத் தந்துள்ளார்.

    வேலை கேட்டு வந்தவர்களிடம் இருந்து நவநீதகிருஷ்ணன் இந்தத் தொகையை நேரடியாக வாங்காமல், கஸ்தூரிதேவியின் வங்கிக் கணக்கில் செலுத்தச் வைத்து அவரிடம் இருந்து ரூ.10 லட்சம், 20 லட்சம் என மொத்தம் ரூ.2 கோடியே 55 லட்சத்தை வாங்கியுள்ளார்.

    பணம் வாங்கியவர்களிடம் குறிப்பிட்ட நாளில் வரச்சொல்லி, அவர்களுக்கு இந்திய ரெயில்வேயில் பணி சேருவதற்கான போலியாக தயாரிக்கப்பட்ட பணி நியமன ஆணையை வழங்கியுள்ளார்.

    இந்த போலி பணி ஆணையை நவநீதகிருஷ்ணன் கொடுக்கும்போது அவர்களிடம், ரெயில்வே பணிக்கான பயிற்சி திருச்சி ரெயில்வே அலுவலகத்தில் வழங்கப்பட உள்ளதாகவும், அதற்கான அழைப்பு உங்களைத் தேடி வரும் என்றும், அதுவரை பணி நியமன ஆணையுடன் காத்திருக்கு மாறு கூறி விட்டு பணத்துடன் தலைமறை வாகிவிட்டார்.

    அதன் பின் அவரை பலமுறை தொடர்பு கொண்ட போதிலும் நவநீதகிருஷ்ணன் தொலை பேசியை எடுக்கவில்லை. பெரும்பாலான நேரங்களில் சுவிட்ச்ஆப் ஆகியிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள், நவநீதகிருஷ்ணன் வழங்கிய ரெயில்வே பணி நியமன ஆணை உண்மையானது தானா என்று பரிசோதித்து பார்த்துள்ளார். அப்போதுதான் அவர் கொடுத்தது போலியான பணி நியமன ஆணை என்பது தெரிய வந்தது.

    பணத்தை வாங்கிக் கொண்டு தாங்கள் ஏமாற்றி விட்டதை உணர்ந்த வர்கள் கஸ்தூரி தேவியிடம் பணத்தை கொடுக்கு மாறு கேட்டனர். தான் வாங்கி பணத்தை நவநீதகிருஷ்ணனிடம் கொடுத்து விட்டதாகவும் கஸ்தூரிதேவி கூறியுள்ளார்.

    இதையடுத்து கஸ்தூரிதேவி உள்ளிட்ட 14 பேர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனிடம், மோசடி நபரான நவநீதகிருஷ்ண னிடம் இருந்து பணத்தை பெற்றுத் தரக்கோரி மனு அளித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்.பி.சசி மோகன் உத்தர விட்டதை யடுத்து, இன்ஸ்பெக்டர் கோமதி, பாதிக்கப்பட்டவர்க ளிடம் விசாரணை நடத்தினார்.

    விசாரணையில், பணம் கொடுத்து ஏமாந்தது தெரிய வந்ததையடுத்து திருப்பூரில் பதுங்கி இருந்த நவநீதகிருஷ்ணனை போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தற்போது நவநீதகிருஷ்ணன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நவநீதகிருஷ்ணன் மெடிக்கல் ஏஜெண்டாக செயல்பட்டது தெரிய வந்தது.

    இதுகுறித்து குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோமதி கூறும்போது,

    மாவட்ட எஸ்.பி.யின் உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நவநீத கிருஷ்ணன் கைது செய்து சிறையில் அடைக்கப்ப ட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில் 14 பேர் பாதிக்கப்ப–ட்டுள்ளதாக புகார்கள் பெறப்ப ட்டுள்ளன.

    நவநீத கிருஷ்ணன் இன்னும் எத்தனை பேரை ஏமாற்றி பணம் பெற்றார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் இருந்தால் அவர்களும் புகார் அளிக்கலாம்.

    தற்போது சிறையில் உள்ள நவநீதிகிருஷ்ணணை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். அவரிடம் விசாரணை நடத்தினால் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தும் பணத்தை அவர் எங்கு வைத்துள்ளார் என்ற தகவலும் தெரிய வரும்" என்றார்.

    • மரியதாஸ் நேற்று முன் தினம் வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த விஷ மாத்திரையை சாப்பிட்டு விட்டதாக மனைவி அமலோற்பவ மேரியிடம் கூறியுள்ளார்.
    • இதுகுறித்து, ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு, கள்ளுக்கடை–மேடு, ஜீவானந்தம் வீதியைச் சேர்ந்தவர் அமலோற்பவமேரி (46). இவரது கணவர் மரியதாஸ் (53). தொழிலாளி. இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.

    ஈரோடு நாடார்மேடு பகுதியில் அமலோற்பவமேரி பெண்களுக்கான அழகு நிலையம் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில், மரியதாஸ் நேற்று முன் தினம் வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த விஷ மாத்திரையை சாப்பிட்டு விட்டதாக மனைவி அமலோற்பவ மேரியிடம் கூறியுள்ளார்.

    உடனடியாக அவர், கணவரின் தம்பி அற்புதராஜின் உதவியுடன் மரியதாஸை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரியதாஸ் உயிரிழந்தார். இதுகுறித்து, ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • செல்லாண்டி அம்மன் கோவில் செயல் அலுவலர் சுரேஷ் கண்ணனுக்கு ஒரு மர்ம கடிதம் வந்தது.
    • பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து மிரட்டல் கடிதம் அனுப்பியது யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகிறார்.

    பெருந்துறை:

    பெருந்துறை பழைய பஸ் நிலையம் பகுதியில் செல்லாண்டி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 3 பெட்ரோல் பங்குகளும், ஒரு தனியார் பள்ளியும் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் செல்லாண்டி அம்மன் கோவில் செயல் அலுவலர் சுரேஷ் கண்ணனுக்கு ஒரு மர்ம கடிதம் வந்தது.

    பெயர் விலாசம் இல்லாத அந்த கடிதத்தில் பெருந்துறை பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்திற்கு வெடிகுண்டு வைக்க போவதாகவும், இதனால் அந்த நிறுவனத்தின் அருகில் இருக்கும் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வாடகை அடிப்படையில் இயங்கி வரும் 3 பெட்ரோல் பங்குகள் மற்றும் தனியார் பள்ளி பாதிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    மேலும் சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள வாடகை தாரர்களை காலி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. உடனடியாக இது தொடர்பாக கோவில் செயல் அலுவலர் சுரேஷ் கண்ணன் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இது குறித்து பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து மிரட்டல் கடிதம் அனுப்பியது யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகிறார்.

    ×