என் மலர்
நீங்கள் தேடியது "விசாரிக்க முடிவு"
- கஸ்தூரிதேவி உள்ளிட்ட 14 பேர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனிடம், மோசடி நபரான நவநீதகிருஷ்ண னிடம் இருந்து பணத்தை பெற்றுத் தரக்கோரி மனு அளித்தனர்
- எஸ்.பி.யின் உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நவநீத கிருஷ்ணன் கைது செய்து சிறையில் அடைக்கப்ப ட்டுள்ளார்
ஈரோடு,
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் பச்சமலை அடிவாரத்தைச் சேர்ந்தவர் கஸ்தூரிதேவி. ஆடிட்டர் அலுவலகம் ஒன்றில் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார். நண்பர் ஒருவர் மூலம் திருப்பூர் ராயபுரத்தைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (45) என்பவர் இவரிடம் அறிமுகம் ஆனார்.
தனக்கு தென்னக ரயில்வேயில் பணிபுரிந்து வரும் முக்கிய பொறுப்பில் உள்ள உயரதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், அவர்களின் உதவியுடன் ரெயில்வேயில் பணி வாங்கித் தர முடியும் எனக் கூறி கஸ்தூரிதேவியை நம்ப வைத்துள்ளார்.
குறிப்பாக, ரெயில்வேயில் பொறியாளர் பணியிடங்களான இளநிலை பொறியாளர், முதுநிலை பொறியாளர், அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களை தன்னால் வாங்கித் தர முடியும் என்று கூறியுள்ளார்.
உங்களுக்குத் தெரிந்தவர்கள், உறவினர்களிடம் கூறினால் அவர்களுக்கு பணி வாங்கித் தருவதாகவும், ஒவ்வொரு பணியிடத்துக்கும் குறிப்பிட்ட தொகை செலவாகும் என்றும் கூறியுள்ளார். அதன்படி ஒவ்வொரு வேலைக்கும் ரூ. 10 முதல் ரூ.25 லட்சம் வரையிலும் செலவாகும் என்று கூறியுள்ளார்.
இந்தத் தொகையை கொடுத்தால் உடனடியாக பணிநியமன ஆணையை பெற்றுத் தருவதாகவும் நவநீதகிருஷ்ணன் ஆசைவார்த்தைகளை கூறியுள்ளார். இதை நம்பி கஸ்தூரிதேவி, அவரின் நண்பர்கள், உறவினர்கள் என 14 பேரிடம் இருந்து பல தவணைகளாக பணத்தை பெற்றுத் தந்துள்ளார்.
வேலை கேட்டு வந்தவர்களிடம் இருந்து நவநீதகிருஷ்ணன் இந்தத் தொகையை நேரடியாக வாங்காமல், கஸ்தூரிதேவியின் வங்கிக் கணக்கில் செலுத்தச் வைத்து அவரிடம் இருந்து ரூ.10 லட்சம், 20 லட்சம் என மொத்தம் ரூ.2 கோடியே 55 லட்சத்தை வாங்கியுள்ளார்.
பணம் வாங்கியவர்களிடம் குறிப்பிட்ட நாளில் வரச்சொல்லி, அவர்களுக்கு இந்திய ரெயில்வேயில் பணி சேருவதற்கான போலியாக தயாரிக்கப்பட்ட பணி நியமன ஆணையை வழங்கியுள்ளார்.
இந்த போலி பணி ஆணையை நவநீதகிருஷ்ணன் கொடுக்கும்போது அவர்களிடம், ரெயில்வே பணிக்கான பயிற்சி திருச்சி ரெயில்வே அலுவலகத்தில் வழங்கப்பட உள்ளதாகவும், அதற்கான அழைப்பு உங்களைத் தேடி வரும் என்றும், அதுவரை பணி நியமன ஆணையுடன் காத்திருக்கு மாறு கூறி விட்டு பணத்துடன் தலைமறை வாகிவிட்டார்.
அதன் பின் அவரை பலமுறை தொடர்பு கொண்ட போதிலும் நவநீதகிருஷ்ணன் தொலை பேசியை எடுக்கவில்லை. பெரும்பாலான நேரங்களில் சுவிட்ச்ஆப் ஆகியிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள், நவநீதகிருஷ்ணன் வழங்கிய ரெயில்வே பணி நியமன ஆணை உண்மையானது தானா என்று பரிசோதித்து பார்த்துள்ளார். அப்போதுதான் அவர் கொடுத்தது போலியான பணி நியமன ஆணை என்பது தெரிய வந்தது.
பணத்தை வாங்கிக் கொண்டு தாங்கள் ஏமாற்றி விட்டதை உணர்ந்த வர்கள் கஸ்தூரி தேவியிடம் பணத்தை கொடுக்கு மாறு கேட்டனர். தான் வாங்கி பணத்தை நவநீதகிருஷ்ணனிடம் கொடுத்து விட்டதாகவும் கஸ்தூரிதேவி கூறியுள்ளார்.
இதையடுத்து கஸ்தூரிதேவி உள்ளிட்ட 14 பேர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனிடம், மோசடி நபரான நவநீதகிருஷ்ண னிடம் இருந்து பணத்தை பெற்றுத் தரக்கோரி மனு அளித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்.பி.சசி மோகன் உத்தர விட்டதை யடுத்து, இன்ஸ்பெக்டர் கோமதி, பாதிக்கப்பட்டவர்க ளிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணையில், பணம் கொடுத்து ஏமாந்தது தெரிய வந்ததையடுத்து திருப்பூரில் பதுங்கி இருந்த நவநீதகிருஷ்ணனை போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தற்போது நவநீதகிருஷ்ணன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நவநீதகிருஷ்ணன் மெடிக்கல் ஏஜெண்டாக செயல்பட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோமதி கூறும்போது,
மாவட்ட எஸ்.பி.யின் உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நவநீத கிருஷ்ணன் கைது செய்து சிறையில் அடைக்கப்ப ட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில் 14 பேர் பாதிக்கப்ப–ட்டுள்ளதாக புகார்கள் பெறப்ப ட்டுள்ளன.
நவநீத கிருஷ்ணன் இன்னும் எத்தனை பேரை ஏமாற்றி பணம் பெற்றார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் இருந்தால் அவர்களும் புகார் அளிக்கலாம்.
தற்போது சிறையில் உள்ள நவநீதிகிருஷ்ணணை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். அவரிடம் விசாரணை நடத்தினால் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தும் பணத்தை அவர் எங்கு வைத்துள்ளார் என்ற தகவலும் தெரிய வரும்" என்றார்.
- 7 திருட்டு வழக்கில் ராஜீவ்காந்திக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
- சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ஒரு வீட்டில் திருடிய வழக்கில் செந்தில்குமார் (30), கருப்புசாமி (31), பாலசுப்ரமணி (42) ஆகியோரை பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த திருட்டுக்கு மூளையாக இருந்து செயல்பட்டு திட்டங்களை வகுத்து கொடுத்தது ஈரோடு மாவட்ட ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் போலீஸ்காரர் ராஜீவ் காந்தி (35) என தெரிய வந்தது.
திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் செந்தில்குமார் ஏற்கனவே பெருந்துறையில் 2021-ம் ஆண்டு மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட போது, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியில் போலீஸ்காரர் ராஜீவ்காந்தி சென்றார்.
அப்போது செந்தில்குமாருடன் நட்பை ஏற்படுத்தி சிறை தண்டனை முடிந்து வெளியே வந்தவுடன் தன்னை சந்திக்குமாறும், போலீசில் சிக்காமல் திருட்டு வழிப்பறியில் ஈடுபட திட்டம் வகுத்து தருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதன்படி ஜாமீனில் வெளிய வந்த செந்தில்குமார் கூட்டாளிகளுடன் சென்று போலீஸ்காரர் ராஜீவ் காந்தியை சந்தித்துள்ளார்.
அப்போது போலீஸ்கார் ராஜீவ்காந்தி பெருந்துறை யில் அவருக்கு சொந்தமான மளிகை கடையில் செந்தில்குமார் மற்றும் அவரின் கூட்டாளிகளை வேலைக்கு சேர்த்து விடுவது போல் சேர்த்து விட்டு திருடுவதற்கு திட்டம் வகுத்து கொடுத்துள்ளார்.
அதன்படி செந்தில்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் சித்தோடு, பெருந்துறை, திருப்பூர் என பல்வேறு இடங்களில் வீடுகளில் கைவரிசை காட்டியுள்ளனர்.
இதனையடுத்து போலீஸ்காரர் ராஜீவ் காந்தி கைது செய்யப்பட்டார். அவர் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தற்போது ராஜீவ் காந்தி கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ராஜீவ் காந்தி கடந்த 2009 முதல் 2020-ம் ஆண்டு வரை திருப்பூரில் பல்வேறு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்துள்ளார்.
பணிபுரிந்த காலத்தில் பல குற்றச்சாட்டுகள் சர்ச்சைகள் இருந்ததால் அவர் அடுத்த டுத்து பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பெருந்துறை போலீஸ் நிலையத்தில் குற்ற பிரிவு முதன்மை காவலராக பணி புரிந்தார். அதன் பின்னர் அவர் ஈரோடு ஆயுதப்ப டைக்கு மாற்றப்பட்டார்.
திருப்பூரில் அவிநாசி சப்-டிவிஷனில் பெருமா நல்லூர், குன்னத்தூர், அவிநாசி, ஈரோட்டில் சித்தோடு, பெருந்துறை என 7 திருட்டு வழக்கில் ராஜீவ்காந்திக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.






