என் மலர்
நீங்கள் தேடியது "அதிரடி இடமாற்றம்"
- ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிபவர் தினேஷ் குமார்(32). இவர் சில தினங்களுக்கு முன்பு பொது இடத்தில் பொதுமக்களிடம் ஒழுங்கினமாக நடந்து கொண்டதாக புகார் வந்தது
- 13 போலீசார் தாமதமாக ஆஜராகினர். தாமதமாக பணிக்கு வந்த இவர்கள் ஆனைக்கல் பாளையம் ஆயுதப் படைக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்ப ட்டுள்ளனர்
ஈரோடு,
ஈரோடு ஆணைக்கல் பாளையம் ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிபவர் தினேஷ் குமார்(32). இவர் சில தினங்களுக்கு முன்பு பொது இடத்தில் பொதுமக்களிடம் ஒழுங்கினமாக நடந்து கொண்டதாக புகார் வந்தது.
இது தொடர்பான விசாரணை நடந்து வந்த நிலையில் தினேஷ்குமாரை தற்காலிகமாக பணி நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவிட்டார்.
இந்நிலையில் பொங்கல் தொகுப்பில் தேங்காயை சேர்த்து வழங்க வலியுறுத்தி சித்தோடு நால்ரோடு பகுதியில் நேற்று பாரதிய ஜனதா விவசாயின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்ட து.
இதற்கான பாதுகாப்பு பணிக்கு செல்ல கோபி மற்றும் பெருந்துறை சப்-டிவிஷனில் போலீசார் காலை 6 மணிக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டது . ஆனால் 13 போலீசார் தாமதமாக ஆஜராகினர். தாமதமாக பணிக்கு வந்த இவர்கள் ஆனைக்கல் பாளையம் ஆயுதப் படைக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்ப ட்டுள்ளனர்.
- கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) முத்துராமன், திருப்பூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- அவிநாசி தாசில்தார் ராஜேஷ், திருப்பூர் கலெக்டர் அலுவலக மேலாளராக (குற்றவியல்) நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் நிர்வாக வசதிக்காக, திருப்பூர் மாவட்டத்தில், 10 தாசில்தார்கள் இடமாறுதல் மற்றும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அவிநாசி தாசில்தார் ராஜேஷ், திருப்பூர் கலெக்டர் அலுவலக மேலாளராக (குற்றவியல்) நியமிக்கப்பட்டுள்ளார்.
கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) முத்துராமன், திருப்பூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கலெக்டர் அலுவலக குற்றவியல் மேலாளர் மகேஸ்வரன், ஹிந்து சமய அறநிலையத்துறை தனி தாசில்தார்; அங்கிருந்த கனகராஜ், கலெக்டர் அலுவலக மேலாளராக (பொது) நியமிக்கப்பட்டுள்ளனர்.






