என் மலர்
ஈரோடு
- மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்ப ட்டிருந்த நகைகளை திருடி சென்றனர்
- போலீசார் அந்த பகுதி யில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள சிவசக்தி நகர் (டீச்சர்ஸ் காலனி)பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 40). இவரது மனைவி சர்மிளா. விக்னேஷ் வேலை விஷயமாக பெங்களூருக்கு சென்று விட்டார். வீட்டில் ஷர்மிளா மட்டும் தனியாக இருந்தார். இவர்கள் வீட்டின் அருகே விக்னே ஷின் அப்பா ராஜேஷ் வீடு உள்ளது. இதனால் தனியாக இருந்த சர்மிளா தனது மாமா வீட்டிற்கு இரவு தூங்க சென்று விட்டார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்ப ட்டிருந்த நகைகளை திருடி சென்று விட்டனர். இதையடுத்து இன்று காலை சர்மிளா தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் கொள்ளை யடிக்கப் பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டார்.
இது குறித்து அவரின் மாமனாரிடம் தெரிவித்தார். மேலும் இது குறித்து தனது கணவருக்கும் தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து அந்தியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்தி ற்கு வந்து விசாரித்த னர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து அந்த பகுதி யில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனால் அந்தியூர் பகுதியில் இன்று காலை பரபரப்பு காணப்பட்டது.
- ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் போலீசார் பணியிட மாறுதல் கேட்டு விருப்பம்
- போலீஸ் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவு
ஈரோடு ஆனைக்கல் பாளையம் பிரிவில் மாவட்ட ஆயுதப்படை செயல்பட்டு வருகிறது. ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் போலீசார் பணியிட மாறுதல் கேட்டு விருப்பம்தெரிவித்திருந்தனர்.
இதன் பேரில் மாவட்ட ஆயுதப்படையில் பணி யாற்றிய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் தங்கராஜ், தலைமை காவலர்கள் பிரபு , சக்தி வேலாயுத சாமி, சுரேஷ்குமார், சிவகுமார் முத்துகிருஷ்ணன், சரவணன், பெண் தலைமை காவலர் பாண்டிய ஜோதி மற்றும் போலீசார் என 59 பேர் ஈரோடு, பவானி, கோபி, பெருந்துறை, சத்தியமங்கலம் ஆகிய 5 போலீஸ் சப்- டிவிஷன்க ளுக்கு கீழே உள்ள போலீஸ் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவிட்டார்.
இதில் பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட 59 பேரில் 7 பேர் பெண் போலீசார் என்பது குறிப்பிடத்தக்கது. இடமாற்றம் செய்யப்பட்ட 59 பேரும் தங்களிடம் உள்ள ஆயுதங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனவும் போலீஸ் குடியிருப்புகளையும் காலி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- விவசாயி சரவணன் இடது குதிகாலில் ஒரு பாம்பு கடித்தது
- சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்
ஈரோடு மாவட்டம் சிவகிரி குமாரவலசு அருகே உள்ள் ஒரு கரும்புத் தோட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி சரவணன் (வயது 56) என்பவர் தண்ணீர்பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது அவரது இடது குதிகாலில் ஒரு பாம்பு கடித்து விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்கு வந்து மனைவியிடம் கூறியுள்ளார்,
இதையடுத்து அவர் உறவினரின் காரின் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சரவணனை கொண்டு சென்றனர், அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை செய்யப்ட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சு மூலம் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,
- வீட்டில் ஆளில்லாததை நோட்டம் மிட்ட மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டனர்.
- வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஈரோடு:
ஈரோடு பழையபாளையம் கீதா நகரை சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மனைவி மஞ்சுளா தேவி(55). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். செந்தில்குமார் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மஞ்சுளா தேவி கிரானைட் தொழில் செய்து வருகிறார். இவருடைய மகன் தற்போது அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார்.மஞ்சுளா தேவி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
கடந்த மாதம் 8-ந் தேதி மஞ்சுளாதேவி வீட்டை பூட்டிவிட்டு கொல்கத்தாவிற்கு சாமி தரிசனம் செய்ய சென்று விட்டார். பின்னர் மீண்டும் 15-ந் தேதி ஈரோடுக்கு வந்தார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த மூன்று ஜோடி வைர கம்மல், ஒரு ஜோடி வைர வளையல், 4 வைர மோதிரங்கள், 7 ஜோடி தங்க கம்மல், 3 தங்க மோதிரம், 4 தங்க வளையல்கள், 3 தங்க பவள மாலை மற்றும் தங்க காசு, நெக்லஸ் என மொத்தம் 42 பவுன் நகைகள், ரூ. 6 லட்சம் வைர நகைகள் மற்றும் ரூ.4லட்சத்து 50 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. வீட்டில் ஆளில்லாததை நோட்டம் மிட்ட மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டனர்.
இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது அதில் கொள்ளை நடந்த அன்று நள்ளிரவு மோட்டார் சைக்கிள் வந்த இரண்டு மர்ம நபர்கள் வீட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்து வீட்டிற்குள் நுழைவது பதிவாகி இருந்தது.
அதில் இரண்டு நபர்களின் உருவமும் தெளிவாக பதிவாகி இருந்தது. இதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தியபோது அவர்கள் பெங்களூரை சேர்ந்த பிரபல கொள்ளையர்களான குணா (22), நவீன்குமார் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து கைது செய்தனர்.
பின்னர் போலீசார் அவர்கள் 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்புதகவல்கள் வெளியானது. அதன் விபரம் வருமாறு-
ஈரோடு பெண் தொழில் அதிபர் வீட்டில் தங்க, வைர நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைதான குணா, நவீன்குமார் பிரபல கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது.மேலும் இவர்கள் மீது பெங்களூரில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. குறிப்பாக குணா மீது 20 திருட்டு வழக்குகளும், நவீன் குமார் மீது 10 திருட்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இவர்கள் இரண்டு பேரும் பூட்டிய வீட்டுக்குள் லாபகமாக நுழைந்து திருடுவதில் கில்லாடிகள்.
பெங்களூரில் இவர்கள் 2 பேரும் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளனர். குணா, நவீன் குமார் 2பேரும் திருட்டு வழக்கில் கைதாகி ஜெயிலில் இருக்கும் போது ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகியுள்ளனர். பின்னர் ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் இருவரும் சேர்ந்து திருடி வந்துள்ளனர். இவர்களது முக்கிய வேலையே மோட்டார் சைக்கிளில் ஊரை சுற்றி ஒவ்வொரு பகுதியாக சென்று நோட்டமிடுவது தான். குறிப்பாக பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சென்று நோட்டமிட்டு அங்கு எந்தெந்த வீடுகள் மூடப்பட்டுள்ளதோ அந்த வீடுகளில் இரவில் சென்று கைவரிசை காட்டி வந்துள்ளனர்.
பெங்களூரில் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளதால் இருவரும் அங்கிருந்தால் மாட்டி விடுவோம் என்று கருதி தமிழ்நாட்டுக்கு தப்பி வந்துள்ளனர். கிருஷ்ணகிரியில் நவீன் குமார் பெற்றோர் வசித்து வருகின்றனர். அங்கு இருவரும் சிறிது காலம் தங்கி இருந்து திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதன்பின்னர் மோட்டார் சைக்கிளில் ஈரோடு வந்து பெண் தொழிலதிபர் வீட்டில் கைவரிசை காட்டி உள்ளனர். தமிழகத்தில் இவர்கள் இருவர் மீதும் வேறு எங்கும் திருட்டு வழக்குகள் இல்லை என்றுதெரியவந்தது.
கைதான 2 பேரிடம் இருந்தும் 42 பவுன் தங்க நகைகள், ரூ.6 லட்சம் வைர நகைகள், ரூ.4.20 ரொக்க பணம் மீட்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடம் இருந்த இரண்டு வாகனம், இரண்டு கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைதான குணா, நவீன் குமார் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். பெங்களூரை கலக்கிய பிரபல கொள்ளையர்கள் இருவர் ஈரோட்டில் கைது செய்யப்பட்டது பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியில் யானை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
- யானை அப்பகுதியில் வந்த போது அங்கிருந்து நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வெளியே வந்து பார்த்துள்ளனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியில் யானை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளில் யானைகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோடைகாலம் தொடங்கி விட்டால் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமப்புறங்களில் உணவுக்காக யானைகள் அவ்வப்போது வெளியேறுவது வாடிக்கை.
இந்த நிலையில் நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் அந்தியூர் வனசரகத்திற்கு உட்பட்ட வட்டக்காடு என்ற கிராமத்தில ஒற்றை ஆண் யானை ஒன்று சர்வ சாதாரணமாக சாலையில் நடந்து சென்றது.
இந்த காட்சி அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியுள்ளது. யானை அப்பகுதியில் வந்த போது அங்கிருந்து நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வெளியே வந்து பார்த்துள்ளனர்.
அப்போது ஒற்றை யானையைக் கண்ட பயத்தில் பொதுமக்கள் வீட்டுக்குள் புகுந்து கதவை சாத்திக் கொண்டனர். இந்த நிலையில் இரவு நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பி டி எப் பைலாக வினாத்தாள் அனுப்பி வைக்கப்படும்.
- பிரிண்டரில் இருந்து வினாத்தாள்களை பிரிண்ட் எடுப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு,
பள்ளிகளில் தேர்வு வினாத்தாள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அச்சகங்களில் அச்சிடப்பட்டு பின்னர் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இது போன்ற வினாத்தாள்கள் சில நேரங்களில் முன்கூட்டியே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தடுக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிய ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி அந்தப் பள்ளிகளில் பிரிண்டர் வழங்கி அதன் மூலம் மாணவ, மாணவி களுக்கு வினாத்தாள் கொடு க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக சென்னை, கிருஷ்ணகிரி, ஈரோடு உட்பட 9 மாவட்டங்களில் பிரிண்டர் முறை மூலம் வினாத்தாள்களை எடுத்து மாணவ- மாணவி களுக்கு தேர்வென்று வழங்கும் முறை சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையினர் கூறியதாவது:- தேர்வு தினத்தன்று பள்ளிக்கல்வி த்துறை மூலம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பி டி எப் பைலாக வினாத்தாள் அனுப்பி வைக்கப்படும்.
அவற்றை பிரிண்ட் எடுத்து மாணவ- மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் வழங்க வேண்டும். ஏற்கனவே பிரிண்டரில் இருந்து வினாத்தாள்களை பிரிண்ட் எடுப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 480 அரசு நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளுக்கு எஸ். எஸ்.எ. மூலம் பிரிண்டர் வழங்கப்பட்டுள்ளது.
500-க்கும் மேல் மாணவர்களை கொண்ட பள்ளிகளுக்கு பெரிய பிரிண்டரும், 500க்கும் கீழ் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளுக்கு மீடியம் சைஸ் பிரிண்டரும் வழங்கப்பட்டுள்ளது. பிரிண்டர்கள் ஜூன் முதல் பயன்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- இக்கலூர்,கும்டாபுரம், ஆகிய பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது .
- சாலையில் உள்ள பழமையான மரம் சாலையில் முறிந்து விழுந்தது.
தாளவாடி,
தாளவாடி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. அவ்வ ப்போது மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை முதல் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் மதியம் 2 மணி அளவில் மேகமூட்டம் சேர்ந்து தாளவாடி, தொட்ட காஜனூர் ,ஓசூர், சிக்கள்ளி, இக்கலூர்,கும்டாபுரம், ஆகிய பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது .
பலத்த காற்றால் தாளவாடியில் இருந்து தொட்டகாஜனூர் செல்லும் சாலையில் உள்ள பழமை யான மரம் சாலையில் முறிந்து விழுந்தது. இதனால் அந்த வழியாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
ஒரு மணி நேரத்துக்கு மேலாக மரத்தை அப்புறப்படுத்த நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் யாரும் வராததால் அவ்வழியாக வந்த பள்ளி வாகனம் மற்றும் பேருந்துகள் அனைத்தும் அணி வகுத்து நின்றன. சில மாணவ -மாணவிகள் பேருந்தில் இருந்து இறங்கி நடந்தே சென்றனர்.
ஒரு மணி நேரத்துக்கு பிறகு வந்த நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர் பின்னர். போக்குவரத்து சீரானது.
தாளவாடியில் இருந்து தொட்டகாஜனூர் செல்லும் சாலையில் 20 க்கும் மேற்பட்ட பழமையான மரங்கள் காய்ந்து எப்பொழுது வேண்டுமானாலும் விழும்நிலை உள்ளது. எனவே காய்ந்த நிலையில் உள்ள மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சூறைக்காற்றுடன் பெய்த மழையால் தொட்டகாஜனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி வெங்கிடு (36) என்பவரின் 500 நேந்திரம் வாழை மரங்கள் காற்றில் முறிந்து சேதமானது.
- ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
- காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 87.98 அடியாக குறைந்து உள்ளது.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தொடர்ந்து தண்ணீர்திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 87.98 அடியாக குறைந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 534 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்தி ற்காக வினாடிக்கு 2,300 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதேபோல் காளிங்கராயன் பாசனத்திற்காக 600 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும், என மொத்தம் அணையில் இருந்து 3,100 கன அடி நீர் வெளியே ற்றப்பட்டு வருகிறது.
- இரு வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.
- 1 லட்சத்து 35 ஆயிரத்து 962 பேர் கொரோனா பாதிப்பி லிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவடி க்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது. கடந்த சில மாதங்களாகவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த இரு வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. தினசரி பாதிப்பு ஒரு நாள் கூடுவதும், ஒரு நாள் குறைவதுமாக நிலையற்ற தன்மையுடன் இருந்து வருகிறது.
நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 711 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 962 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 15 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது தினசரி பாதிப்பு பதிவாகி வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது முககவசம் அணிந்து செல்ல சுகாதாரத் துறையினர் அறிவுறு த்தியுள்ளனர்.
மேலும் தற்போது கோவில் விசேஷங்கள் தொடர்ந்து வர இருப்பதால் பொதுமக்கள் அதிக அளவில் ஒன்று கூடுவார்கள். எனவே இது போன்ற விசேஷங்களில் பங்கேற்கும் பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
- 3,283 தனித் தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
- 119 மையங்களில் 28,874 பேர் எஸ். எஸ். சி. பொது தேர்வு எழுதுகின்றனர்.
ஈரோடு,
தமிழ்நாட்டில் எஸ். எஸ். எல். சி பொதுத்தேர்வு இன்று தொடங்கி வரும் 20-ந் தேதி நிறைவு பெறுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி.பொது தேர்வை 358 பள்ளிகளை சார்ந்த 25,591 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.
இவர்களுக்கு தேர்வு எழுத வசதியாக 113 தேர்வு மையங்களும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுவதற்கு கூடுதலாக 6 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் 3,283 தனித் தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். மொத்தம் 119 மையங்களில் 28,874 பேர் எஸ்.எஸ்.சி.பொது தேர்வு எழுதுகின்றனர்.
இன்று காலை தமிழ் தேர்வு நடைபெற்றது. இதற்காக காலை மாணவர்கள் சீக்கிரமாக எழுந்து குளித்து கோவில்களில் பயபக்தியுடன் சாமி கும்பிட்டு பள்ளிகளுக்கு தேர்வு எழுத வந்தனர். பின்னர் ஆசிரியர்களிடம் ஆசி பெற்று தேர்வு அறைக்கு சென்றனர்.
தேர்வு காலை 10 மணிக்கு சரியாக தொடங்கியது. முதல் 15 நிமிடம் தேர்வுத்தாள்களில் வினாக்களை சரி பார்ப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 10.15 மணிக்கு தேர்வு தொடங்கி 1.15 மணிக்கு முடிந்தது.
முன்னதாக ஈரோடு உட்பட மாவட்டத்தில் 7 கட்டு காப்பு மையத்தில் வைக்கப்பட்டு இருந்த வினாத்தாள்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த தேர்வு மையத்திற்கு கொண்டுவரப்பட்டது.
தேர்வில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் 162 பறக்கும் படை அமைக்கப்பட்டு இருந்தது. பறக்கும் படையினர் தேர்வு அறைகளை தீவிரமாக கண்காணித்தனர். மாணவ மாணவிகளுக்கு ஸ்கிரை (சொல்வதைக் கேட்டு எழுதுபவர்கள்) 685 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இது தவிர முதன்மை கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர், தேர்வு கண்காணிப்பாளர் என 1,890 பேர் நியமிக்கப்பட்டி ருந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி.பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்துவதற்கு ஈரோடு செங்கோடம் பள்ளத்தில் உள்ள யுஆர்சி பள்ளி, கோபியில் உள்ள குருகுலம் பள்ளி, சத்தியமங்கலத்தில் ராகவேந்திரா பள்ளி என 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் திருத்த பள்ளிக்கல்வித்துறை தேதி அறிவித்ததும் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கப்படும் என பள்ளி கல்வித்துறையினர் தெரிவித்தனர்.
- பழக்கம் 100 வருடங்களுக்கு மேல் உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கின்றனர்.
- சென்னிமலை போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர், சப்–-இன்ஸ் பெக்டருக்கு தான் இங்கு மரியாதை.
சென்னிமலை,
சென்னிமலை முருகன் கோவில் தேரோட்டத்தில் சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தரும் பழமை மாறாத மரியாதை 100 வருடங்களுக்கும் மேலாக இன்னும் தொடர்கிறது.
சென்னிமலை முருகன் கோவிலில் விழாக்கள் அனைத்தும் சென்னிமலை டவுன் கிழக்கு ரத வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் தான் நடக்கும். திருத்தேரோட்டமும், அதே போல் நகரின் நான்கு ரத வீதிகளில் தான் நடக்கும்.
சென்னிமலை முருகன் கோவில் தேரோட்டத்தில் தேர் நிலை சேர்ந்தவுடன் தேர் நிலையில் இருந்து சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-–இன்ஸ்பெக்டர்களுக்கு மாலை அணிவித்து மேள, தாளம் முழங்க கோவில் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் தலைமையில் ஊர்வலமாக சென்னிமலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விடுவார்கள்.
இந்த பழக்கம் 100 வருடங்களுக்கு மேல் உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கின்றனர். எந்த வி.ஐ.பி. கலந்து கொண்டாலும் சென்னிமலை போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர், சப்–-இன்ஸ் பெக்டருக்கு தான் இங்கு மரியாதை. மேலும் ஊர்வலமாக போலீஸ் நிலையத்துக்கு செல்லும் தேரோட்டி, கோவில் செயல் அலுவலர், பணியாளர்களுக்கு இனிப்பு, காரம், டீ கொடுத்து மரியாதை செய்வார்கள்.
இது நடைமுறை என்பதை விட பழக்கம் என கூறலாம். 100 வருடங்களுக்கு மேல் இந்த பாரம்பரியமரியாதை தொடர்வதாக பெரியவர்கள் தகவல் கூறுகிறார்கள்.
இன்னும் இந்த மரியாதை மாறால் நேற்று தொடர்ந்தது. இந்த மரியாதை தைப்பூச தேர் திருவிழா மட்டும் அல்லாமல் பங்குனி உத்திர தேரோட்டத்திலும் நடக்கும் நேற்று மாலை பங்குனி உத்திர தேர் நிலைசேர்ந்ததும் சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், மற்றும் சப்-–இன்ஸ்பெக்டர்களுக்கு கோவில் செயல் அலுவலர் சரவணன் மாலை அணிவித்து மேள, தாளம் முழங்க போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விட்டனர்.
- பயங்கர சத்தத்துடன் 20 மீட்டர் அளவுக்கு சுற்றுச் சுவர் தானாகவே இடிந்து கீழே விழுந்தது.
- தகவல் கிடைத்ததும் ஊழியர்கள் விரைந்து வந்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் சாலையில் கடந்த கற்களை அப்புறப்படுத்தினார்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல் பாளையம் அழகேசன் நகரில் அரசு சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு 4 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. குடியிருப்பின் முன்புறம் 8 அடி உயர சுற்று சுவர் பிரதான சாலையை ஒட்டி உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் 20 மீட்டர் அளவுக்கு சுற்றுச் சுவர் தானாகவே இடிந்து கீழே விழுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சுற்றுச்சூழல் கற்கள் சாலையின் ஒரு புறம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த வழியாக தான் ஈரோட்டில் இருந்து சேலம், நாமக்கல், சென்னை போன்ற ஊர்களுக்கு பஸ்கள் சென்று வருகிறது. சுவர் விழுந்தபோது அந்த இடத்தில் யாரும் இல்லாத தால் அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் கிடைத்ததும் ஊழியர்கள் விரைந்து வந்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் சாலையில் கடந்த கற்களை அப்புறப்படுத்தினார்.
இதனால் சேலம்-நாமக்கல் -ஈரோடு சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றன. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.






