ஈரோட்டில் கொரோனா பாதிப்புடன் 15 பேருக்கு சிகிச்சை

இரு வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. 1 லட்சத்து 35 ஆயிரத்து 962 பேர் கொரோனா பாதிப்பி லிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ஈரோட்டில் கொரோனா பாதிப்புடன் 15 பேருக்கு சிகிச்சை
Published on

ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவடி க்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது. கடந்த சில மாதங்களாகவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த இரு வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. தினசரி பாதிப்பு ஒரு நாள் கூடுவதும், ஒரு நாள் குறைவதுமாக நிலையற்ற தன்மையுடன் இருந்து வருகிறது.

நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 711 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 962 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 15 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது தினசரி பாதிப்பு பதிவாகி வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது முககவசம் அணிந்து செல்ல சுகாதாரத் துறையினர் அறிவுறு த்தியுள்ளனர்.

மேலும் தற்போது கோவில் விசேஷங்கள் தொடர்ந்து வர இருப்பதால் பொதுமக்கள் அதிக அளவில் ஒன்று கூடுவார்கள். எனவே இது போன்ற விசேஷங்களில் பங்கேற்கும் பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com