search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    119 மையங்களில் 28, 874 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர்
    X

    119 மையங்களில் 28, 874 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர்

    • 3,283 தனித் தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
    • 119 மையங்களில் 28,874 பேர் எஸ். எஸ். சி. பொது தேர்வு எழுதுகின்றனர்.

    ஈரோடு,

    தமிழ்நாட்டில் எஸ். எஸ். எல். சி பொதுத்தேர்வு இன்று தொடங்கி வரும் 20-ந் தேதி நிறைவு பெறுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி.பொது தேர்வை 358 பள்ளிகளை சார்ந்த 25,591 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.

    இவர்களுக்கு தேர்வு எழுத வசதியாக 113 தேர்வு மையங்களும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுவதற்கு கூடுதலாக 6 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதில் 3,283 தனித் தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். மொத்தம் 119 மையங்களில் 28,874 பேர் எஸ்.எஸ்.சி.பொது தேர்வு எழுதுகின்றனர்.

    இன்று காலை தமிழ் தேர்வு நடைபெற்றது. இதற்காக காலை மாணவர்கள் சீக்கிரமாக எழுந்து குளித்து கோவில்களில் பயபக்தியுடன் சாமி கும்பிட்டு பள்ளிகளுக்கு தேர்வு எழுத வந்தனர். பின்னர் ஆசிரியர்களிடம் ஆசி பெற்று தேர்வு அறைக்கு சென்றனர்.

    தேர்வு காலை 10 மணிக்கு சரியாக தொடங்கியது. முதல் 15 நிமிடம் தேர்வுத்தாள்களில் வினாக்களை சரி பார்ப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 10.15 மணிக்கு தேர்வு தொடங்கி 1.15 மணிக்கு முடிந்தது.

    முன்னதாக ஈரோடு உட்பட மாவட்டத்தில் 7 கட்டு காப்பு மையத்தில் வைக்கப்பட்டு இருந்த வினாத்தாள்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த தேர்வு மையத்திற்கு கொண்டுவரப்பட்டது.

    தேர்வில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் 162 பறக்கும் படை அமைக்கப்பட்டு இருந்தது. பறக்கும் படையினர் தேர்வு அறைகளை தீவிரமாக கண்காணித்தனர். மாணவ மாணவிகளுக்கு ஸ்கிரை (சொல்வதைக் கேட்டு எழுதுபவர்கள்) 685 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

    இது தவிர முதன்மை கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர், தேர்வு கண்காணிப்பாளர் என 1,890 பேர் நியமிக்கப்பட்டி ருந்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி.பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்துவதற்கு ஈரோடு செங்கோடம் பள்ளத்தில் உள்ள யுஆர்சி பள்ளி, கோபியில் உள்ள குருகுலம் பள்ளி, சத்தியமங்கலத்தில் ராகவேந்திரா பள்ளி என 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் திருத்த பள்ளிக்கல்வித்துறை தேதி அறிவித்ததும் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கப்படும் என பள்ளி கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×