என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • நாளை ஆயுதபூஜை பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் கதம்பமாலை களுக்குப் பயன்படுத்தப்படும் பூக்களுக்கு கடும் கிராக்கி நிலவியது.
    • அரளிப்பூ, செண்டுமல்லி, செவ்வந்தி பூ, வாடாமல்லி, கோழிக்கொண்டை ஆகிய பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்தது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் கதம்ப மாலை கட்டுவதற்கு பயன்படும் பூக்களை வாங்குவதற்கு வியாபாரிகள் அதிக ஆர்வம் காட்டியதால் பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. இதனால் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்தது.

    நாளை ஆயுதபூஜை பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் கதம்பமாலை களுக்குப் பயன்படுத்தப்படும் பூக்களுக்கு கடும் கிராக்கி நிலவியது. அரளிப்பூ, செண்டுமல்லி, செவ்வந்தி பூ, வாடாமல்லி, கோழிக்கொண்டை ஆகிய பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்தது.

    கடந்த காலங்களில் ஒரு பை ரூ.10 க்கு விற்பனையான அரளி அதிகபட்ச விலையாக ரூ.450 முதல் 500 வரை விற்பனையானது. அதேபோல் செண்டுமல்லி ரூ. 100 க்கும், கோழிக்கொண்டை ரூ. 80 க்கும், செவ்வந்தி ரூ. 150 க்கும், வாடாமல்லி ரூ. 60 க்கும், துளசி ரூ. 60 க்கும், பன்னீர் ரோஸ் ரூ. 150க்கும், பட்டன் ரோஸ் ரூ. 300க்கும், சம்பங்கி ரூ.200-க்கும் விற்பனையாகின.

    கடந்த காலங்களில் அரளி, செண்டு மல்லி உள்ளிட்ட பூக்களுக்கு விலை கிடைக்காமல் இருந்த நிலையில் இந்த ஆயுத பூஜை, விஜயதசமியையொட்டி பூக்கள் விற்பனை மற்றும் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • செந்துறை புனித சூசையப்பர் ஆலயத்தில் இன்று காலை உலக மறைபரப்பு ஞாயிறு ஆண்டு விழா கொண்டாடப்பட்டது‌.
    • பின்னர் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

    நத்தம்:

    நத்தம் அருகே செந்துறை புனித சூசையப்பர் ஆலயத்தில் இன்று காலை உலக மறைபரப்பு ஞாயிறு ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

    உலக மறைபரப்பு ஞாயிறுக்கான செய்தியில் 'பற்றியெரியும் இதயங்கள். பயணப்படும் பாதங்கள் ' என்ற தலைப்பை கருப்பொருளாகவும் உள்ள தினவிழாவை நினைவு கூறும் வகையில் பங்குதந்தையர்கள் இன்னாசிமுத்து, மைக்கேல்ராஜ், ஞானப்பிரகாஷம், ஜெரால்டுசகாயசெல்வா, பிராங்கிளின் ஆகியோர் தலைமையில் திருப்பலியில் இயேசு நம் இதயங்களை நமக்குள் பற்றி எரியச் செய்வாராக, அவருடைய தூய ஆவியாரிடமிருந்து வரும் வல்லமையினாலும் ஞானத்தினாலும் அவருடைய மீட்பின் மறையுண்மைகளை நாம் உலகுக்கு அறிவிக்கும்படி, அவர் உள்ளங்களை ஒளிரச்செய்வாராக என்றும் கருத்துகளை இறைம க்களிடம் எடுத்து கூறினர்.

    இதைத்தொடர்ந்து அன்பின் விருந்து நடைபெற்றது.பின்னர் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

    • அவரது கணவரின் நண்பர் என கூறிக்கொண்டு 4 வாலிபர்கள் உள்ளே புகுந்தனர்.
    • திடீரென கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் இருந்த நகையை கேட்டனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே ஆவாரம் பட்டியை சேர்ந்தவர் ரவி மனைவி ராணி (வயது46). இவர் தனது வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது அவரது கணவரின் நண்பர் என கூறிக்கொண்டு 4 வாலிபர்கள் உள்ளே புகுந்தனர். திடீரென கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் இருந்த நகையை கேட்டனர். அவர் தர மறுக்கவே ஆத்திரம் அடைந்த கும்பல் ராணியை சரமாரியாக கத்தியால் குத்தி கழுத்தில் இருந்த 9½ பவுன் தங்கநகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்றுகூடி ராணியை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து விளாம்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஷர்மிளா வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றார்.

    வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகை பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வத்தலக்குண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • அரசு நிகழ்ச்சியாக இருப்பி னும் வீட்டில் நடைபெறும் வளைகாப்பு நிகழ்ச்சியை போன்று சிறப்பாக செய்ததாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.வத்தலக்குண்டு வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் வத்தலக்குண்டு பேரூராட்சி சமுதாய கூடத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

    வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் பரமேஸ்வரிமுருகன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். வத்தல க்குண்டு தி.மு.க. பேரூர் செயலாளர் சின்ன த்துரை, மாவட்ட கவுன்சிலர் கனிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் பாக்கியலட்சுமி, ஊட்டச்சத்து நிபுணர் மதர்தெரசா, பேராசிரியர் சரவணசெல்வி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    பின்னர் சமுதாய வளை காப்பு விழாவில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் பரமேஸ்வரி முருகன் மஞ்சள், குங்குமம் வைத்து வளையல் போட்டு வளை காப்பு விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் கர்ப்பிணிப் பெண்களுக்கு 5 வகையான உணவு வழங்கப்பட்டது. கர்ப்பிணி பெண்கள் கூறுகையில், அரசு நிகழ்ச்சியாக இருப்பி னும் வீட்டில் நடைபெறும் வளைகாப்பு நிகழ்ச்சியை போன்று சிறப்பாக செய்ததாக மகிழ்ச்சி தெரிவித்தனர். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் விஜயராணி நன்றி கூறினார்.

    • வேடசந்தூர் காக்காதோப்பு பிரிவு பகுதியில் வந்தபோது எதிேர தூத்துக்குடியில் இருந்து சேலம் நோக்கி சென்ற பஸ் வேடசந்தூர் நகருக்குள் திரும்புவதற்காக 4 வழிச்சாலையில் வந்தது.
    • அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஆம்னிபஸ் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் இறங்கியது.

    வேடசந்தூர்:

    பெங்களூரில் இருந்து கம்பத்திற்கு ஆம்னி பஸ் வந்தது. வத்தலக்குண்டுவை சேர்ந்த இன்னாசி (வயது58) என்பவர் பஸ்சை ஓட்டி வந்தார். இதில் 23 பயணிகள் இருந்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காக்காதோப்பு பிரிவு பகுதியில் வந்தபோது எதிேர தூத்துக்குடியில் இருந்து சேலம் நோக்கி சென்ற பஸ் வேடசந்தூர் நகருக்குள் திரும்புவதற்காக 4 வழிச்சாலையில் வந்தது.

    அந்த பஸ் மீது மோதாமல் இருப்பதற்காக ஆம்னிபஸ் டிரைவர் திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஆம்னிபஸ் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் இறங்கியது. அருகே இருந்த மின் கம்பி மீது மோதாமல் டிரைவர் சாமர்த்தியமாக திருப்பியதால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். இதனைத் தொடர்ந்து 2 கிரேன்கள் வரவழைக்கப்பட்டு பஸ்சை மீட்க்கும் பணி நடைபெற்றது.

    இது குறித்து ேபாலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • தொடர் விடு முறை காரணமாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் இன்று அதிகமாக காண ப்பட்டது.
    • நகரின் மைய ப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சா கமாக படகு சவாரியும், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரியும் செய்து மகிழ்ந்தனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவ ரசியான கொடைக்கானலை காண வெளி மாநிலங்கள் மட்டு மின்றி வெளி நாடு களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. தற்போது மேகமூட்டத்துடன் இதமான சீதோசனம் நிலவி வருகிறது. மேலும் மலைப்பகுதியில் தரையிறங்கும் மேக கூட்டத்தை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். தொடர் விடு முறை காரணமாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் இன்று அதிகமாக காண ப்பட்டது.

    தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி உள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, பைன்பாரஸ்ட், குணாகுகை, மோயர் பாயிண்ட், தூ ண்பாறை, பசுமை ப்பள்ள த்தாக்கு உள்ளிட்ட இடங்க ளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மேலும் நகரின் மைய ப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சா கமாக படகு சவாரியும், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரியும் செய்து மகிழ்ந்தனர்.

    கடந்த சில நாட்களாக மேல்மலை கிரா மங்களான மன்னவனூர், பூண்டி, பூம்பாறை பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகி ன்றனர். இதனால் மன்ன வனூரில் உள்ள சூழல் சுற்றுலா மையம், எழு ம்பள்ளம் ஏரியில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் அங்கு விளை விக்கப்படும் காய்கறி களை சுற்றுலா பயணி கள் ஆர்வ மாக வாங்கி சென்றனர்.சுற்றுலா பயணி களின் வருகை அதிக மாக இருந்த காரண த்தினால் வாகன போக்கு வரத்து நெரிசலும் ஏற்பட்டது. இன்னும் சில நாட்கள் சுற்றுலா பயணி களின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்க ப்படுகிறது.

    • புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதங்களில் முத்தாலம்மன், காளியம்மன், பகவதியம்மன் கோவில்கள் திருவிழா நடைபெறும்.
    • எனவே கிணற்றை சுத்தம் செய்து மராமத்து பணியில் மேற்குதெரு பொதுமக்கள் ஈடுபட்டனர்.

    செம்பட்டி:

    செம்பட்டி அருகே சித்தையன்கோட்டையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதங்களில் முத்தாலம்மன், காளியம்மன், பகவதியம்மன் கோவில்கள் திருவிழா நடைபெறும்.

    இதற்காக சாமி அழைத்தல், கரகம் ஜோடித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு 100 ஆண்டுகள் பழமையான கிணற்றில் தண்ணீர் எடுத்து வருவார்கள். தற்போது அந்த கிணறு பராமரிப்பின்றி காணப்படுகிறது. எனவே கிணற்றை சுத்தம் செய்து மராமத்து பணியில் மேற்குதெரு பொதுமக்கள் ஈடுபட்டனர்.

    சித்தையன்கோட்டையை சேர்ந்த மற்றொரு சமூகத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என சித்தையன்கோட்டை பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர். இந்த பணியை தடுத்து நிறுத்த கூடாது என எதிர்தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.

    சித்தையன்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பேரூராட்சி செயல் அலுவலர் சிவக்குமார் பேச்சுவார்த்தை நடத்தி னார். இதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து ெசன்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • வாரவிடுமு றை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு இன்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
    • மலைக்கோவிலின் தரிசன வழிகள், வெளிப்பிரகாரம், படிப்பாதை ஆகிய இடங்களில் கூட்டம் காணப்பட்டது.

    பழனி:

    தமிழகத்தின் சிறந்த ஆன்மீக தலமாகவும் முருகபெருமானின் 3ம் படை வீடாகவும் பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா காலங்கள் மட்டுமின்றி சுபமு கூர்த்தம், பண்டிகை நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    அந்த வகையில் வாரவிடுமு றை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு இன்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் சிலர் பால்குடம், காவடி எடுத்தும், படிப்பாதையில் படிப்பூஜை செய்தும் தங்களது நேர்த்தி க்கடனை செலுத்தினர்.

    குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கிடவும், தொழிலில் முன்னேற்றம் காணவும் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். மலைக்கோவிலின் தரிசன வழிகள், வெளிப்பிரகாரம், படிப்பாதை ஆகிய இடங்களில் கூட்டம் காணப்பட்டது. அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல மின் இழுவை ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    கூட்டம் காரணமாக நீண்ட நேரம் காத்திருந்த பின்பே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மலை க்கோவிலுக்கு முருகனை தரிசிக்க அதிகாலையில் இருந்தே பல்வேறு வாகனங்களில் பக்தர்கள் பழனிக்கு வந்தனர். இதனால் அடிவாரம் ரோடு, பூங்காேராடு, கிரி வீதி ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாமி தரிசனம் செய்தபின்பு ஊருக்கு திரும்புவதற்காக பக்தர்கள் பழனி பஸ் நிலை யத்தில் குவிந்தனர். இதனால் பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    • மலைக்கோட்டை மற்றும் அதன் அடிவாரத்தில் அமை ந்துள்ள குமரன் பூங்காவில் மட்டுமே பொது மக்கள் தங்கள் குழந்தைகளுடன் விடுமுறையை கொண்டாடி வருகின்றனர்.
    • இதனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் வாரவிடுமுறை அதனை தொடர்ந்து ஆயுதபூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து தென்மாவட்ட பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல குவிந்தனர். இதனால் பஸ், ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    குடும்பத்துடன் ஆயுதபூஜை கொண்டாட தயாராகி வருகின்றனர். திண்டுக்கல் நகர் பகுதியில் சுற்றுலா இடங்கள் அதிக அளவில் இல்லை. மலைக்கோட்டை மற்றும் அதன் அடிவாரத்தில் அமை ந்துள்ள குமரன் பூங்காவில் மட்டுமே பொது மக்கள் தங்கள் குழந்தைகளுடன் விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். அதன்படி நேற்று மாலை முதலே அதிக அளவில் இளைஞர்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினரும் கூட்டம் கூட்டமாக மலைக்கோட்டையை சுற்றிப் பார்க்க வந்தனர்.

    இதனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்தனர். மேலும் குமரன் பூங்காவில் உள்ள பொழுதுபோக்கு அம்சங்களையும் கண்டு மகிழ்ந்தனர்.

    நகர் பகுதியில் மேலும் பூங்காக்கள், கோட்டை குளத்தில் படகு சவாரி உள்ளிட்ட அம்சங்களை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நீட் விலக்கு நம் இலக்கு 50 நாட்கள் 50 லட்சம் கையெழுத்து இயக்கம் தொடக்க விழா நடந்தது
    • விழாவில் ஆதிதிராவிடர் நலக்குழு இணை ச்செய லாளர் ராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரத்தில் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நீட் விலக்கு நம் இலக்கு 50 நாட்கள் 50 லட்சம் கையெழுத்து இயக்கம் தொடக்க விழா நடந்தது.

    விழாவில் ஆதிதிராவிடர் நலக்குழு இணை ச்செய லாளர் ராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்திராஜன், மேற்கு மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி, மாணவர் அணி மாநில துணை செயலாளர் பொன்ராஜ், இளைஞர் அணி மேற்கு மாவட்ட அமைப்பாளர் ஹரிஹரசுதன், துணை அமைப்பாளர்கள் ரவி சங்கர், பாண்டியராஜன், ஆசிக், ராஜ்குமார், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஜோதிஸ்வரன், தர்மராஜ், தங்கராஜ், நகர செயலாளர் வெள்ளைச்சாமி, நகராட்சி தலைவர் திருமலைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன் மற்றும் தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, வர்த்தகர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • கொட்டப்பட்டி பிரிவு அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் மீது வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல்-பழனி பைபாஸ் சாலை கொட்டப்பட்டி பிரிவு அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், சப்-இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா அழகர்நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் நடைபெற்றது.
    • இதில் ஆசிரியர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே நல்லமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா அழகர்நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் நடைபெற்றது.

    இதற்கு தலைமையாசிரியர் மகேந்திரன் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினார். உதவி திட்ட அலுவலர் வீரமுத்து வரவேற்புரை ஆற்றினார். தோட்டனூத்து ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தி உரை நிகழ்த்தினார். திட்ட அலுவலர் மெட்டில்டா சாந்தி மாணவர்களுக்கு நாட்டு நலப் பணித்திட்ட பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.

    இதில் ஆசிரியர்கள் ஸ்ரீதர் ராஜா, முருகேசன், கிரி அரசன் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக ஆரம்பப் பள்ளி ஆசிரியை அனுராதா நன்றி கூறினார்.

    ×