திண்டுக்கல் அருகே நாட்டு நலப்பணி திட்ட முகாம்

நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா அழகர்நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
முகாமில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே நல்லமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா அழகர்நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் நடைபெற்றது.

இதற்கு தலைமையாசிரியர் மகேந்திரன் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினார். உதவி திட்ட அலுவலர் வீரமுத்து வரவேற்புரை ஆற்றினார். தோட்டனூத்து ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தி உரை நிகழ்த்தினார். திட்ட அலுவலர் மெட்டில்டா சாந்தி மாணவர்களுக்கு நாட்டு நலப் பணித்திட்ட பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.

இதில் ஆசிரியர்கள் ஸ்ரீதர் ராஜா, முருகேசன், கிரி அரசன் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக ஆரம்பப் பள்ளி ஆசிரியை அனுராதா நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com