என் மலர்
நீங்கள் தேடியது "விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ்"
- வேடசந்தூர் காக்காதோப்பு பிரிவு பகுதியில் வந்தபோது எதிேர தூத்துக்குடியில் இருந்து சேலம் நோக்கி சென்ற பஸ் வேடசந்தூர் நகருக்குள் திரும்புவதற்காக 4 வழிச்சாலையில் வந்தது.
- அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஆம்னிபஸ் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் இறங்கியது.
வேடசந்தூர்:
பெங்களூரில் இருந்து கம்பத்திற்கு ஆம்னி பஸ் வந்தது. வத்தலக்குண்டுவை சேர்ந்த இன்னாசி (வயது58) என்பவர் பஸ்சை ஓட்டி வந்தார். இதில் 23 பயணிகள் இருந்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காக்காதோப்பு பிரிவு பகுதியில் வந்தபோது எதிேர தூத்துக்குடியில் இருந்து சேலம் நோக்கி சென்ற பஸ் வேடசந்தூர் நகருக்குள் திரும்புவதற்காக 4 வழிச்சாலையில் வந்தது.
அந்த பஸ் மீது மோதாமல் இருப்பதற்காக ஆம்னிபஸ் டிரைவர் திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஆம்னிபஸ் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் இறங்கியது. அருகே இருந்த மின் கம்பி மீது மோதாமல் டிரைவர் சாமர்த்தியமாக திருப்பியதால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். இதனைத் தொடர்ந்து 2 கிரேன்கள் வரவழைக்கப்பட்டு பஸ்சை மீட்க்கும் பணி நடைபெற்றது.
இது குறித்து ேபாலீசார் விசாரித்து வருகின்றனர்.






