திண்டுக்கல் மலைக்கோட்டையில் குவிந்த பொதுமக்கள்

மலைக்கோட்டை மற்றும் அதன் அடிவாரத்தில் அமை ந்துள்ள குமரன் பூங்காவில் மட்டுமே பொது மக்கள் தங்கள் குழந்தைகளுடன் விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். இதனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்தனர்.
மலைக்கோட்டையை சுற்றிப்பார்க்க வந்த சுற்றுலா பயணிகள்.
மலைக்கோட்டையை சுற்றிப்பார்க்க வந்த சுற்றுலா பயணிகள்.
Published on

திண்டுக்கல்:

தமிழகத்தில் வாரவிடுமுறை அதனை தொடர்ந்து ஆயுதபூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து தென்மாவட்ட பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல குவிந்தனர். இதனால் பஸ், ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

குடும்பத்துடன் ஆயுதபூஜை கொண்டாட தயாராகி வருகின்றனர். திண்டுக்கல் நகர் பகுதியில் சுற்றுலா இடங்கள் அதிக அளவில் இல்லை. மலைக்கோட்டை மற்றும் அதன் அடிவாரத்தில் அமை ந்துள்ள குமரன் பூங்காவில் மட்டுமே பொது மக்கள் தங்கள் குழந்தைகளுடன் விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். அதன்படி நேற்று மாலை முதலே அதிக அளவில் இளைஞர்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினரும் கூட்டம் கூட்டமாக மலைக்கோட்டையை சுற்றிப் பார்க்க வந்தனர்.

இதனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்தனர். மேலும் குமரன் பூங்காவில் உள்ள பொழுதுபோக்கு அம்சங்களையும் கண்டு மகிழ்ந்தனர்.

நகர் பகுதியில் மேலும் பூங்காக்கள், கோட்டை குளத்தில் படகு சவாரி உள்ளிட்ட அம்சங்களை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com