என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • சோலை மரங்களில் இருந்து பழங்களை மலபார் அணில்கள் உண்பதால் அத‌ன் எச்சம் மூலமாக மீண்டும் வனப்பகுதி உருவாக்குவ‌தாக‌வும் கூற‌ப்ப‌டுகிற‌து.
    • சிலர் அரிய‌ வ‌கை மலபார் அணில்களை அச்சுறுத்தி வ‌ருவ‌துட‌ன் வேட்டையாட‌ முயற்சிக்கின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைப்பகுதிகளில் 60 சதவிகிதம் வனப்பகுதியாக உள்ளது. இந்த வனப்பகுதிகளில் அரிய வகை விலங்கினங்களும், பறவை இனங்களும் வாழ்ந்து வருகின்றன.

    மலபார் அணில்கள் எனப்படும் பறவை அணில் கொடைக்கானலை சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே மட்டும் தென்பட்டு வந்தது. ஆனால் தற்போது மலபார் அணில்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

    குறிப்பாக கொடைக்கானல் நுழைவுவாயில் பகுதிகளான வெள்ளி நீர் வீழ்ச்சி அருவி, புலிச்சோலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள‌ மரங்களில் மலபார் அணில்கள் அதிகளவில் காணப்படுகிறது. இவை சோலை மரங்க‌ளில் இருந்து கொட்டாம்பழம், ஜாமூன் பழங்களை உண்டு வாழ்ந்து வருகின்றன.

    மேலும் சோலை மரங்களில் இருந்து பழங்களை மலபார் அணில்கள் உண்பதால் அத‌ன் எச்சம் மூலமாக மீண்டும் வனப்பகுதி உருவாக்குவ‌தாக‌வும் கூற‌ப்ப‌டுகிற‌து.

    மேலும் இந்த வகை அணில்கள் மரங்களில் மட்டும் வாழக்கூடியவையாகும். மலைச்சாலை ஓரங்களில் வனப்பகுதியில் உள்ள மரங்களில் முகாமிடும் மலபார் அணில்களை சுற்றுலாப்பயணிகள் ஆர்வ‌முட‌ன் பார்த்து ர‌சித்து செல்கின்றனர்.

    ஆனால் சிலர் அரிய‌ வ‌கை மலபார் அணில்களை அச்சுறுத்தி வ‌ருவ‌துட‌ன் வேட்டையாட‌ முயற்சிக்கின்றனர்.

    எனவே வனத்துறையினர் இதனை கண்காணித்து அரிய‌ வ‌கை மலபார் அணில்களை பாதுகாக்க வேண்டும் என விலங்கின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தற்போது புலிச்சோலை பகுதியில் அதிக அளவில் தென்படும் மலபார் அணில்களை பாதுகாக்க இந்த பகுதியில் வேட்டை தடுப்பு காவலர்களை பணியில் அமர்த்தவும், ம‌ல‌பார் அணில்க‌ளை பாதுகாக்க ம‌லைச்சாலைக‌ளில் ம‌ல‌பார் அணில்க‌ளின் புகைப்ப‌ட‌த்துட‌ன் கூடிய‌ விழிப்புண‌ர்வு ப‌தாகைக‌ள் வைக்க‌ வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

    • கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக இன்று காலையில் பழனி மலைக்கோவிலில் வள்ளிதெய்வானை சமேத சண்முகருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
    • சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சாமிக்கு பூஜைகள் நடத்தப்பட்டு சோடஷதீபாராதனை காட்டப்பட்டு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25ந் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. இதற்காக பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து வள்ளி தெய்வானையுடன் முத்துக்குமாரசாமி மலைக்கோவிலில் இருந்து சின்னகுமாரசாமி மலை அடிவாரத்தில் எழுந்தருளினார். பராசக்திவேல் மலையில் இருந்து இறங்கி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் வந்து அடிவாரம் சென்றடைந்தது.

    அதன்பின் இரவு 7.15 மணி அளவில் கிரிவீதியில் தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகசூரன், சூரபத்மன் ஆகியோரை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோஷம் முழங்க முருகனை வழிபட்டனர். மேலும் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு விரதம் மேற்கொண்டிருந்த பக்தர்களும் சூரசம்ஹாரத்தை கண்டு தங்கள் விரதத்தை நிறைவு செய்தனர்.

    கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக இன்று காலையில் பழனி மலைக்கோவிலில் வள்ளிதெய்வானை சமேத சண்முகருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

    இதற்காக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சாமிக்கு பூஜைகள் நடத்தப்பட்டு சோடஷதீபாராதனை காட்டப்பட்டு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு 7 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளி தெய்வானை, முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    • கண்டக்டர் மாணவர்களை சாலையின் நடுவே செல்லாமல் ஓரமாக செல்லும்படி கூறியதால் மாணவர்களுக்கும், கண்டக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • டிரைவர் மற்றும் கண்டக்டரை சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்தனர். புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    கன்னிவாடியில் இருந்து திண்டுக்கல் பஸ்நிலையத்திற்கு இன்று காலை அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சை டிரைவர் திவாகரன்(32) ஓட்டிவந்தார். கண்டக்டராக வடிவேலு(46) என்பவர் பணியில் இருந்தார். பஸ் நிலையத்திற்குள் பஸ் வந்தபோது சாலையின் குறுக்கே ஒரு சில மாணவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    இதனால் டிரைவர் ஹாரன் அடித்துள்ளார். மேலும் கண்டக்டர் மாணவர்களை சாலையின் நடுவே செல்லாமல் ஓரமாக செல்லும்படி கூறியுள்ளார். இதனால் மாணவர்களுக்கும், கண்டக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அதன்பின் பஸ் ரேக்கில் டிரைவர் நிறுத்திவிட்டு கண்டக்டருடன் சாப்பிட சென்றுவிட்டார். மீண்டும் அவர்கள் திரும்பி வந்தபோது மாணவர்கள் தங்கள் நண்பர்கள் மேலும் சிலரை அழைத்து வந்து டிரைவர் மற்றும் கண்டக்டரை சரமாரியாக தாக்கினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் சத்தம்போட்டும் அருகில் இருந்தவர்கள் யாரும் தடுக்க வரவில்லை. இதனைதொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். படுகாயமடைந்த அவர்கள் 2 பேரும் திண்டுக்கல் அரசுஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்த தகராறில் மாணவரின் சட்டைகாலர் கண்டக்டரின் கையில் சிக்கி கொண்டது. அதனை வைத்து நகர் வடக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே செயல்படும் பள்ளியை சேர்ந்த மாணவர்கள்தான் இந்த தகராறில் ஈடுபட்டது உறுதியானது.

    இதனைதொடர்ந்து பள்ளி நிர்வாகத்துடன் ெதாடர்பு கொண்டு தகராறில் ஈடுபட்ட மாணவர்களை விசாரணை செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர். பஸ்நிலையத்தில் டிரைவர் , கண்டக்டர் ஆகியோர் மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடல் மட்டத்திலிருந்து 400 முதல் 1600 மீட்டர்கள் வரையிலான உயரம் கொண்ட சிறுமலை மலைத்தொடர் 13,987 ஹெக்டேர்கள் பரப்பளவைக் கொண்டுள்ளது.
    • தமிழகத்தின் கிழக்குத் தொடர்ச்சி மலையில் முதன்முறையாக லைகெனிடே இனத்தைச் சேர்ந்த ப்ளேன் பட்டாம்பூச்சி கண்டறியப்பட்டுள்ளது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மண்டலத்தின் தலைமை வனப்பாதுகாவலர் சதீஸ் ஆலோசனையின்படி பட்டாம்பூச்சிகளுக்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி அமைப்பு (டி.என்.பி.எஸ்) கோயம்புத்தூர் மற்றும் தமிழ்நாடு வனத்துறையின் திண்டுக்கல் வனக்கோட்டம் ஒருங்கிணைந்து இந்த கணக்கெடுப்பை நடத்தியுள்ளது.

    கடல் மட்டத்திலிருந்து 400 முதல் 1600 மீட்டர்கள் வரையிலான உயரம் கொண்ட சிறுமலை மலைத்தொடர் 13,987 ஹெக்டேர்கள் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் புதர்க்காடுகள் தொடங்கி சோலைக்காடுகள் வரை பல்வேறு வாழ்விடங்கள் மற்றும் பரந்த புல்வெளிகள் உள்ளன.

    சிறுமலை அதன் சுவையான வாழைப்பழத்திற்காக மட்டுமே பிரபலமாக அறியப்பட்டாலும், அரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களையும் இதமான வானிலையுடன் கொண்டுள்ளது.

    சிறுமலை வனச்சரக அலுவலர் மதிவாணன், ஐ.டி.பி-2 வனச்சரக அலுவலர் சிவா மற்றும் சிறுமலை வனச்சரக பணியாளர்கள் இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி அமைப்புடன் இணைந்து கணக்கெடுப்பை நடத்தினர்.

    கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்ட கணக்கீட்டின்படி, 129 இன பட்டாம்பூச்சிகள் கண்டறியப்பட்டன. இந்த எண்ணிக்கை இப்பகுதியின் ஆரோக்கிய தன்மையைக் காட்டுகிறது.

    இங்கு கண்டறியப்பட்ட இனங்கள் 5 பட்டாம்பூச்சி குடும்பங்களைச் சேர்ந்தவை, ஸ்வாலோடெயில்ஸ் (10), வெள்ளை மற்றும் மஞ்சள் (22), தூரிகை-கால் பட்டாம்பூச்சிகள் (36), ப்ளூஸ் (39) மற்றும் ஸ்கிப்பர்ஸ் (22).

    மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள பழனி மலைகளுக்குச் சொந்தமானதாக அறியப்படும் நிம்ஃபாலிடே இனத்தைச் சேர்ந்த பழனி புஸ் ப்ரவுன் இனத்தைப் பார்ப்பது இந்த ஆய்வின் சிறப்பம்சங்களில் அடங்கும். இந்த இனம் சிறுமலையின் உயரமான பகுதிகளில் நன்கு காணப்படுகிறது.

    மேலும், தமிழகத்தின் கிழக்குத் தொடர்ச்சி மலையில் முதன்முறையாக லைகெனிடே இனத்தைச் சேர்ந்த ப்ளேன் பட்டாம்பூச்சி கண்டறியப்பட்டுள்ளது. எதிர்கால ஆய்வுகளானது பறவைகள், அந்துப்பூச்சிகள் மற்றும் பிற சிறிய விலங்கினங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என திண்டுக்கல் மாவட்ட வனஅலுவலர் பிரபு தெரிவித்துள்ளார்.

    • மர்ம நபர்கள் முதியவரை வீட்டு அருகே அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.
    • தனிப்படை அமைத்து தேடி வரும் போலீசார் கொலைக்கான காரணம் என்னவென்று தெரியாமல் கொலையாளிகளை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அடுத்த வீரக்கல் அருகே தெற்கு மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் தண்ணி வண்டி (என்ற) சின்னத்துரை (வயது60). இவருக்கு கலையரசி (56) என்ற மனைவியும், கனகராஜ் (36) என்ற மகனும், நாகஜோதி (34) என்ற மகளும் உள்ளனர். கனகராஜ் திருப்பூரில் உள்ளார். நாகஜோதி திண்டுக்கல்லில் குடியிருந்து வருகிறார்.

    பழைய இரும்பு மற்றும் பித்தளை பாத்திரங்களை கிராமம் கிராமமாக சென்று வியாபாரம் செய்து வரும் சின்னத்துரை தெற்கு மேட்டுப்பட்டியில் தனது மனைவி கலையரசியுடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை தெற்கு மேட்டுப்பட்டியில் 2 பேர் சின்னத்துரையிடம் தகராறில் ஈடுபட்டு, ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். பின்னர் இரவு சுமார் 7 மணி அளவில் சின்னத்துரை வீட்டிற்கு சென்றபோது அவரைப் பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் சின்னத்துரை வீட்டு அருகே அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, கொலை செய்யப்பட்டவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவ இடத்தை திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டு அது சிறிது தூரம் ஓடிச் சென்று யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    கொலையாளிகளை பிடிக்க எஸ்.பி. உத்தரவின் பேரில்தனிப்படை அமைத்து தேடி வந்தனர். மேலும் தெற்கு மேட்டுப்பட்டியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை வைத்து கொலையாளிகள் யார் என அடையாளம் காண போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    இந்நிலையில் தனிப்படை அமைத்து தேடி வரும் போலீசார் கொலைக்கான காரணம் என்னவென்று தெரியாமல் கொலையாளிகளை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். சம்பவம் நடந்து 4 நாட்களுக்கு மேலாகியும் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் இருப்பதால் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

    • கிரி வீதியில் தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகசூரன், சூரபத்மன் ஆகியோரை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது.
    • கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக இன்று காலையில் பழனி மலைக்கோவிலில் வள்ளிதெய்வானை சமேத சண்முகருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

    பழனி:

    அருபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25ந் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. இதற்காக பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து வள்ளி தெய்வானையுடன் முத்துக்குமாரசாமி மலைக்கோவிலில் இருந்து சின்னகுமாரசாமி மலை அடிவாரத்தில் எழுந்தரு ளினார். பராசக்திவேல் மலையில் இருந்து இறங்கி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் வந்து அடிவாரம் சென்றடைந்தது.

    அதன்பின் இரவு 7.15 மணி அளவில் கிரி வீதியில் தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகசூரன், சூரபத்மன் ஆகியோரை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் முழங்க முருகனை வழிபட்டனர். மேலும் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு விரதம் மேற்கொண்டிருந்த பக்த ர்களும் சூரசம்ஹாரத்தை கண்டு தங்கள் விரதத்தை நிறைவு செய்தனர்.

    கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக இன்று காலையில் பழனி மலைக்கோவிலில் வள்ளிதெய்வானை சமேத சண்முகருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

    இதற்காக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சாமிக்கு பூஜைகள் நடத்தப்பட்டு சோடஷதீபாராதனை காட்டப்பட்டு திரு மாங்கல்யம் அணிவிக்கப்ப ட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு 7 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளிதெய்வானை, முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    • அட்டுவம்பட்டியில் இருந்து வாகனங்கள் மூலம் கொடைக்கானல் நகருக்கு 7 கி.மீ கொண்டு சென்று தான் சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • வில்பட்டி கால் நடை ஆஸ்பத்திரியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அருகே வில்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட அட்டுவம்பட்டியில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. விவசாயம் மேற்கொள்ளும் மக்கள் தங்களது விவசாய பணிகளுக்கென வளர்ப்பு மாடுகள் மற்றும் ஆடுகள் உள்ளிட்டவைகளை வளர்த்து வருகின்றனர்.கடந்த சில வருடங்களாகவே இந்தப் பகுதியில் இயங்கிவந்த கால்நடை ஆஸ்பத்திரி செயல்படாமல் உள்ளது.

    இதனால் கால் நடைகளுக்கு சிகிக்சை பெற முடியாமல் விவசாயிகள் அவதி அடைந்துள்ளனர். தங்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க அட்டுவம்பட்டியில் இருந்து பிக்கப் வாகனங்கள் மூலம் கொடைக்கானல் நகருக்கு 7 கி.மீ கொண்டு சென்று தான் சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    மேலும் கால் நடை ஆஸ்பத்திரி சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. இதை சுற்றி புதர்கள் மண்டி காணப்படுகிறது. எனவே இந்த கால் நடை ஆஸ்பத்திரியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • டவர் அமைக்க ரூ.50 முதல் ரூ.80 லட்சம் வரை அட்வான்ஸ் தொகை கொடுப்பதாகவும், மாதம் ரூ. 40 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை வாடகை செலுத்துவதாகவும் கூறி கும்பல்கள் மோசடி செய்து வருகின்றன.
    • தமிழகத்தில் செல்போன் டவர் அமைப்பதாக மோசடி செய்யும் கும்பல், வடமாநிலங்களில் இருந்து கைவரிசை காட்டி வருகிறது.

    குள்ளனம்பட்டி:

    இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் பயன்பாடு அவசியமாகிவிட்டது. ஸ்மார்ட் போன்கள் மூலம் உலகமே கையடக்கத்தில் வந்துவிடுகின்றன.இந்நிலையில் அதிகப்படியானோர் ஆன்லைன் வகுப்புகளுக்கு இண்டர்நெட் பயன்படுத்துவதால், அலைக்கற்றை வேகம் குறைய வாய்ப்புள்ளது.

    இதனால் அதிகப்படியான செல்போன் டவர்கள் அமைப்பது அவசியம்.இதை சாதகமாக பயன்படுத்தி மோசடி கும்பல் லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டி கைவரிசை காட்டி வருகிறது. இதுகுறித்து புகார் தெரிவித்தாலும் குற்றவாளிகளை எளிதில் பிடிக்க முடிவதில்லை.எனவே மோசடி கும்பல்கள் உங்களை தொடர்பு கொண்டால் ஏமாற வேண்டாம்.

    அதேபோல் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

    இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் ஏ.டி.எஸ்.பி சந்திரன் கூறியதாவது: செல்போன் டவர் அமைக்க காலி இடம் அல்லது மொட்டை மாடி இருந்தால் ரூ.50 முதல் ரூ.80 லட்சம் வரை அட்வான்ஸ் தொகை கொடுப்பதாகவும், மாதம் ரூ. 40 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை வாடகை செலுத்துவதாகவும் கூறி கும்பல்கள் மோசடி செய்து வருகின்றன. இதற்காக உரிய அனுமதி பெற்றதாக போலி கடிதத்தையும் வைத்திருக்கின்றனர்.

    இதை நம்பும் பலர் டவர் அமைக்க இடம் கொடுப்பதாக ஒப்புக்கொள்கின்றனர்.அவ்வாறு ஏமாறும் நபரிடம் 'உங்களது வங்கி கணக்கில் ரூ.80 லட்சம் செலுத்துவதற்கு, முன்பணம் ரூ.1.5 லட்சம் வரை கொடுக்க வேண்டும். இந்த தொகை ரூ.80 லட்சத்துடன் சேர்ந்து வந்துவிடும்' என்றும் கூறுகின்றனர்.

    இதுபோன்ற மோசடி வலையில் விழுபவர்கள் ரூ.1.5 லட்சம் கொடுத்து ஏமாந்து போகின்றனர்.உண்மையில் செல்போன் டவர் அமைக்க மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளில் அனுமதி பெற வேண்டியது அவசியம். இதுபோன்ற தகவல்களை தெரிந்து கொள்ளாமல் ரூ.20 லட்சம் கூட போகாத இடத்துக்கு ரூ.80 லட்சம் அட்வான்ஸ் கிடைக்கிறதே என்று நம்பி சிலர் பணத்தை இழந்துவிடுகின்றனர்.

    தமிழகத்தில் செல்போன் டவர் அமைப்பதாக மோசடி செய்யும் கும்பல், வடமாநிலங்களில் இருந்து கைவரிசை காட்டி வருகிறது. இதனால் புகார் தெரிவித்தாலும் அவர்களை பிடிக்க முடிவதில்லை. எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.இவ்வாறு தெரிவித்தார்.

    கன்னிமார் ஓடையில் தடுப்பணை அமைப்பது குறித்து ஆய்வு

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் நொச்சிஓடைப்பட்டி அருகே சிறுமலை அடிவாரத்தில் கன்னிமார் ஓடையில் தடுப்பணை அமைப்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் நத்தம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன், அ.தி.மு.க. சாணார்பட்டி ஒன்றிய செயலாளர்கள் ராமராசு, சுப்பிரமணி, மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் சுப்பிரமணி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஸ்ரீ ராம், உதவி பொறியாளர் பிரியங்கா, தொழில்நுட்ப உதவியாளர் ஆனந்தகுமார் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • திண்டுக்கல் மாவட்டத்தில் இன்றுமுதல் விதிமீறும் வாகனஓட்டுனர்களிடம் கூடுதல் அபராதம் விதிக்கும் நடைமுறை தொடங்கியது.
    • ஒவ்வொரு வாகனத்திற்கு ஏற்றபடி வகைப்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    நாடு முழுவதும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில் போக்குவரத்து விதிகளும் மீறப்பட்டு விபத்துகள் அதிகளவில் நடந்து வருகிறது.

    இதனைதொடர்ந்து போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கான அபராத கட்டணத்தை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு உயர்த்தியது. அதன்படி பல்வேறு விதிமீறல் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாநகரங்களில் கடந்த 26-ந்தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.

    இதுகுறித்து அந்தந்த பகுதிகளில் போக்குவரத்து போலீசார் முன்கூட்டியே விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் இன்றுமுதல் விதிமீறும் வாகனஓட்டுனர்களிடம் கூடுதல் அபராதம் விதிக்கும் நடைமுறை தொடங்கியது.

    போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரலாதன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்சாமி, காவலர்கள் பாண்டியராஜன், பாலகுமார், அடங்கிய போலீசார் நகரின் 15 இடங்களில் வாகன ஓட்டுனர்களிடம் அபராதம் வசூலித்தனர்.

    இதுகுறித்து நகரின் முக்கிய இடங்களில் விழிப்புணர்வு பேனர்களும் வைக்கப்பட்டிருந்தது. மேலும் வாகன ஓட்டிகளிடம் புதிதாக உயர்த்தப்பட்டுள்ள அபராத தொகை குறித்து துண்டுபிரசுரம் மூலம் எடுத்துகூறப்பட்டது. ஏற்கனவே அறிவித்தபடி இன்றுமுதல் விதிமீறி வாகனங்களில் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் இல்லாமல் சென்றால் ரூ.1000, ஒரு வாகனத்தில் 3 பேர் சென்றால் ரூ.1000, செல்போன் பேசிக்கொண்டே சென்றால் ரூ.1000, மீண்டும் அதேதவறை செய்தால் ரூ.5000, லைசென்ஸ் இல்லாமல் வாகனங்கள் ஓட்டினால் ரூ.5000, கார்களில் சீட்பெல்ட் அணியாவிட்டால் ரூ.1000, நோபார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்தினால் ரூ.500, மீண்டும் அதே தவறை செய்தால் ரூ.1500, ஆட்டோக்களில் சீருடை அணியாவிட்டால் ரூ.500, அதிகபாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு ரூ.500 என அபராத தொகை ஒவ்வொரு வாகனத்திற்கு ஏற்றபடி வகைப்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் நகரில் பெரும்பாலும் இருசக்கர வாகனங்களில் ெஹல்மெட் அணியாமலும், ஒரு வாகனத்தில் 2-க்கும் மேற்பட்டோர் செல்வதும், குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுவது போன்ற விதிமீறல் சம்பவங்களே அதிகளவில் நடக்கிறது.

    இதுபோன்ற நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது சரியே என்று ஒரு தரப்பினர் கூறிவந்தாலும், பெரும்பாலோனார் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், அபராதம் விதிப்பது என்பது வாகனஓட்டிகள் எச்சரிக்கையுடன் விபத்துகள் இல்லாமல் வாகனங்கள் ஓட்டவேண்டும் என்பதற்காகத்தான்.

    அபராதம் வசூலிப்பது மிரட்டுவதற்கோ, பணம் வசூலிப்பதற்கோ இல்லை. போக்குவரத்து விதிகளை கடைபிடித்து வாகனங்களை ஓட்டினால் அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பான பயணமாக அமையும் என்பதை வலியுறுத்துவதற்காகத்தான் என்றனர்.

    • கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹார நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
    • நாளை தங்கரத புறப்பாடு நடைபெறாது.

    உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா கடந்த 25-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி பூஜை நேர மாற்றம் செய்யப்படுகிறது. இதுகுறித்து பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹார நிகழ்ச்சி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு விளாபூஜை நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடக்கிறது. அதன்பின்னர் 2.45 மணிக்கு வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து கோவில் நடை சாத்தப்படும்.

    எனவே நாளை காலை 11 மணிக்கு பின் அனைத்து கட்டண சீட்டுகள் வழங்குவது நிறுத்தப்படும். அதேபோல் படிப்பாதையில் 11.30 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். மேலும் 10 மணி முதல் ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகளும் நிறுத்தப்படும். 4 கிரிவீதிகளிலும் சூரசம்ஹார நிகழ்ச்சி முடிந்து சின்னக்குமாரர் மலைக்கோவிலுக்கு சென்று சம்ரோஷன பூஜை நடைபெறும். அதேபோல் அன்றைய தினம் தங்கரத புறப்பாடு நடைபெறாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மாடுகளுக்கு கண்புரை நோய் பாதிப்பு ஏற்பட்டு கண்கள் இளம் ஊதா நிறத்தில் மாறியது.
    • 10-க்கும் மேற்பட்ட மாடுகள் பாதிக்கப்பட்ட நிலையில் 2 மாடுகள் கண்பார்வை முழுமையாக இழந்துள்ளன.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே நாகையகோட்டையை சேர்ந்தவர் பாலுபாரதி. விவசாயியான இவர் மாடுகளை வைத்து பராமரித்து வருகிறார். இவர் வளர்த்து வரும் மாடுகளுக்கு கண்புரை நோய் பாதிப்பு ஏற்பட்டது. கண்கள் இளம்ஊதா நிறத்தில் மாறியது.

    இதேபகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாடுகள் பாதிக்கப்பட்ட நிலையில் 2 மாடுகள் கண்பார்வை முழுமையாக இழந்துள்ளன. இதுகுறித்து கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்ைகயும் எடுக்கப்படவில்லை.

    இேதபோல் சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள பல்வேறு மாடுகளும் கண்புரைநோயால் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×